அட்டவணை பேச்சு:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf

எண்ணங்கள் தொகு

  • தமிழகத்தில் வெளிவந்த 'அம்புலிமாமா' என்ற இதழ் பெரும்பான்மையான தென்னிந்திய மொழிகளில் வந்தது. அதில் வந்து புகழ் பெற்ற 'விக்கிரமாதித்தன் கதைகள்' மிகவும் புகழ் வாய்ந்தது. பலரிடம் குறிப்பாக குழந்தைகளிடம் சிந்தினைத் தூண்டி பகுத்தாற்றலை வளர்த்தது. அந்த சிறப்புத்தன்மைகளில் கால்வாசி கூட இல்லாத சிறுகதைத் தொகுப்பு இது. நாடக நூல்களில் பயன்படுத்தவது போல, மேற்கோள்களை அதிகம் பயன்படுத்தி உள்ளனர். இரட்டைக்கிளவி தமிழ் இலக்கணத்தின் சிறப்புகளில் ஒன்று. அதை பல இடங்களில் குலைக்கப்பட்டுள்ளது. ஏலம் விடுதலில் பயன்படுத்துவது போல, மூன்று முறை பலப்பல இடங்களில் ஒரு சொல்லினை மூன்று முறை பயன்படுத்தப் பட்டுள்ளது. நிறைய கதைகளில், விக்கிரமாத்தித்தன் கதையில் வருவது போல, கதைநீதியே கிடையாது. தங்கீலிசுச் சொற்களைக் குவித்துள்ளனர். -- உழவன் (உரை) 04:44, 30 மே 2019 (UTC)Reply


@Info-farmer: புத்தகத்தினைப் பற்றி எதிர்மறையான எண்ணங்கள், கருத்துக்களை பதிவிட அட்டவணைப் பேச்சு சிறந்த இடமாக கருதவில்லை. தமிழ் விக்கிபீடியாவில் உள்ள திரைப்பட பக்கங்களில் திரைப்படத்தைப்பற்றிய சொந்த (எதிர்மறையான) விமர்சனங்களை பேச்சுப் பக்கத்தில் அனுமதிப்பார்களா? எண்ணிப்பாருங்கள். நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 10:43, 30 மே 2019 (UTC)Reply
// எதிர்மறையான //மேலுள்ளவைகளில் எச்சொற்களில், எது எதிர்மறை? -- உழவன் (உரை) 14:34, 30 மே 2019 (UTC)Reply
@Info-farmer: சொற்கள் அல்ல. கருத்துக்கள் மற்றும் படம். மேலும் //தமிழ் விக்கிபீடியாவில் உள்ள திரைப்பட பக்கங்களில் திரைப்படத்தைப்பற்றிய சொந்த விமர்சனங்களை பேச்சுப் பக்கத்தில் அனுமதிப்பார்களா?// இதற்கான தங்கள் கருத்து என்ன? -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 16:18, 30 மே 2019 (UTC)Reply
@Balajijagadesh:
  • உரையாடல் பக்கம் என்பது இந்நூலை குறித்து சொல்லும் எழுத்துரிமை பகுதி. எனவே, தனியொருவர் உரிமையைக் குறித்து பேசுதல் மாண்பன்று. எனது பதிவுகள் பிடிக்கவில்லை எனில், பல தமிழ் விக்கிமூல பங்களிப்பாளர்களையும் பலருக்கும் எடுத்துச்சொல்லி, அவர்களின் எண்ணங்களையும் பெற முயல மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு. அதனை விட்டு, எனக்கு தொடர்ந்து, வினா எழுப்ப வேண்டாம். அவற்றிற்கெல்லாம் பதில் சொல்வதில் எனக்கு ஆர்வமில்லை. உங்களைப் போல பல தமிழ் விக்கிமூல முன்னேற்றப் பணிகளைச் செய்ய விரும்புவதால், எனக்கு நேரமும் இல்லை. நான் கற்று கொள்ள வேண்டியன ஏராளம்.
  • மற்றொன்று விக்கிப்பீடியாவின் விதிகள் இங்கே பொருந்தாது. எடுத்துக்காட்டு, அங்கு எழுத்துப்பிழை திருத்தம் செய்யலாம். இங்கு செய்யக்கூடாது. மூல நூலே முக்கியம். எனவே, குழப்பம் எனக்கில்லை. இந்நூலின் பக்கங்கள்:6-9 வாசிக்கவும். குறிப்பாக கீழுள்ளவை.

                                                      "எதை எழுதினாலும் அதை நாலு பேர்
                                                       பாராட்டவாவது வேண்டும்; அல்லது
                                                       திட்டவாவது வேண்டும். இரண்டும்
                                                       இல்லையென்றால் எழுதுவதைவிட
                                                       எழுதாமல் இருப்பது நல்லது.” - கல்கி,

  • ஒரு நூலை படித்தவுடன் அது ஏதாவது ஒரு செயல் மாற்றத்தை நம் மனதில் ஏற்படுத்த வேண்டும். அதன் விளைவே மேற்கூறிய எண்ணப்பதிவு. நூலினைக்குறித்து கூறுவது எனது உரிமை. நீங்களும் நூலை படித்து முடித்து, அதனைப் பற்றி எழுதுங்கள். அதனை விட்டு, நான் எழுதியதை மட்டும் எடுத்துவைத்து பேசுதல், எந்த முன்னேற்றத்திற்கும் பயனளிக்காது.
  • இந்த தமிழ் விக்கிமூலத் திட்டம் மற்ற மொழிகளுக்கு சளைத்தது அல்ல என்பதற்கு பலரது திறமைகளை இங்கு கொணர வேண்டும். அதற்கான புதிய தேவைகளை உருவாக்க முனைவோம். ஐரோப்பிய விக்கிமூல நுட்பங்கள், நடைமுறைகள் மட்டும் நமக்கு போதாது. அதனால் தான் சீனி, நீச்சல்காரன் போன்றவைகள் புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகின்றனர். நானும் {.{hws}} போன்ற வார்ப்புரு இடும் பணியை எளிமையாக்க முயற்சிக்கிறேன். இங்கு இருக்கும் நூல்களுக்கு, விக்கித்தரவில் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். செய்கிறேன். பிறரையும் செய்யத் தூண்டுகிறேன். அந்த மேம்பட்ட விக்கித்தரவுத் திறன் இப்போதைக்கு, நான் அறிந்தவரை, உங்களைத் தவிர, நம் தமிழ் விக்கியில் யாரிடமும் இல்லை. காத்திருக்கும் பணிகளுக்குச் செல்கிறேன். வணக்கம்.-- உழவன் (உரை) 01:47, 10 சூன் 2019 (UTC)Reply
Return to "மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf" page.