அன்பு வெள்ளம்/அன்பு நெறி
அன்பு நெறி
எழுச்சியும் ஊக்கமும் குறைந்தவர்களின் வலுக் குறைவதைக் தாங்கிக் கொள்ளத் தேவையான வலுவினைப் பெற்றிட வேண்டும். நம்மை நாமே தேற்றிட மகிழ்வுறச் செய்திடற்கன்று.
ஆன்றவிந்தடங்கிய செயிர்தீர் செம்மல், தமக்கு மகிழ்ச்சியைத் தேடிக் கொள்ளவில்லை. மற்றவர்க்கு மகிழ்ச்சியைத் தேடித் தந்தார். அதற்காகத் தம்மையே தந்தார்! ஆகவே நாம் நம்முடைய செல்வத்தைக் காசு பணத்தைக் கொடுப்பவராக மட்டுமன்றி நம்மையே கூட மற்றவர் வாழ - மகிழக் கொடுப்பதற்கான வலிவும் அன்பும் பெற்றவர் ஆவோம். 'தான்' என்பது 'தனக்கு' என்பதை மாற்றி தான் என்பது 'மற்றவர்' என்றும் தனது' 'தனக்கு' என்பதை 'மற்றவருடையது' மற்றவர்க்கு என்னும்படி மற்றவர் நலம் நாடும் நன்னலத்தைப் பேணி வளர்ப்போம். இன்னும் அந்தத் தன்னலத்தை மன்னுயிர் 'நலம்’ என்னும் 'நன்னல'மாய்த் தழைக்கச் செய்வோம்.
நமக்குப் பாடத் தகுந்த குரல் அமைப்புப் பெற்றிருந்தால் அதனை, மேலும் வளமாகப் பாடிடும் தகுதியானதாக, இனிமை யானதாகச் செய்யப், பாடிப்பாடிப் பயிற்சி செய்யலாம். செய்த பின், இறைவனை ஏற்றிப் போற்றிப் பாடும் பாடல்களைப் பாடி மற்றவர்களை மகிழ்விக்கலாம்! அந்த மகிழ்ச்சியில் இறைமையின் மகிழ்ச்சியைக் காணலாம். இனியகுரல் வளம்தான் என்பதில்லை; கவிதை இயற்றுவதோ, ஓவியம் வரைவதோ, அறிவியல், கருவி படைப்பதோ எனும் எத்தகைய பேறு அருளப் புெற்றிருந்தாலும் அதனைப் பொன்னே போல் காத்துப் பேணிப் பெருக்கி மற்றவர்க்கும் பயன்படுமாறு மகிழுமாறு செய்யும் அரிய பரிசளிப்பாகச் செய்திட - அளிக்க நம்மை நாம் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.வலிவற்ற ஏதுமற்ற எளியரை ஏழையரை - நல்லவரை - நலிந்தவரை அவர்கள் துன்பத்தைத் துயரத்தை நாம் தாங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்குதான், எல்லாம் வல்ல கடவுள் நமக்குப் போதிய வல்லமையைத் தந்துள்ளது! திறனற்றுத் திக்கற்றுப் போனவர்களைத் தூக்கி நிறுத்திச் செயல்வல்லவராகத் திறமைசாலிகளாக மாற்றுவோம், மாற்ற வேண்டும் என்பதற்கா கத்தான் நமக்குக், கடவுள் தம் திறனையெல்லாம் நம்மில் தந்தருளியது.
எங்கெங்கும் வலிவற்றவர்களும் திறமையற்றவர்களும் இருக்கிறார்கள். ஒரு சாரார் தொடர்ந்து கல்வி கற்றபடிதான் இருக்கிறார்கள். அவர்களுள் யாருமே 'மீட்பு' அல்லது 'மீட்சி' பெறும் உண்மை நிலையை எண்ணியும் பார்ப்பதில்லை; எண்ணிப் பார்த்து மீட்சி பெறும் திசை நோக்கி வருவதும் இல்லை! இப்படிப் பட்டவர்களைத் தூக்கி நிறுத்தும் வல்லமையான அன்பு கொண்டு செல்வோம்; எதற்கும் பயனற்றவர்களைப் பயன்மிக்க வரை தன்னலம் அற்றவராக மாற்றுவோம். அதற்கு, நமக்காக நம் நல்வாழ்விற்காகச், சான்றோர் தம்மையே தந்தது போல, நம்மை மற்றவர்கள் வாழ்ந்திட உயர்ந்திடத் தருவோம் என்று உறுதி பூணுவோம்.
அன்பு அதன் பணியாற்றுவதில் எத்துணை வலிமை வாய்ந்ததாக இருக்கிறது என்பதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் நாம். ஒருவர் மற்றொருவரைப் பார்த்துச் சொன்னார், "யாருக்கும் எதுவும் செய்துவிட அவளால் முடியாது என்பது நான் பார்க்கும் போதே சொல்லிவிடுகிறேன். எப்படி? அவளிடம் பணம் ஏதும் இல்லை. அவளுக்குப் போதுமான கல்வியில்லை; செவிலித்தாய் பயிற்சியும் பெறவில்லை; வீணாக ஏனோ அவள் இந்த மருத்துவ மனைக்கு வந்திருக்கிறாள்" என்று அந்த நோயாளி. அப்படிச் சொன்னதைக் கேட்ட அங்கிருந்த மற்றொருவர் நோயாளியைப் பார்த்து அவளிடம் அன்பு இருக்கிறது என்றார். வந்திருந்த அந்த மாது, காய்ச்சல் கண்டவரின் நெற்றியில் கை வைத்ததும் சற்று நேரத்திற்கெல்லாம் காய்ச்சல் தனிந்தது. காய்ச்சல் தணியப் பெற்ற நோயாளி, புன்னகைத்தவாறு சொன்னார் "இயேசுவே வந்து என் நெற்றில் கை வைத்தது போன்று இருந்தது" என்றார். அருகில் இருந்த வேறொருவர் காய்ச்சல் தனியப் பெற்றவரைப் பார்த்து, "நீங்கள் சொன்னதைக் கொண்டு உங்களைத் தவறாகக் கொள்ளவில்லை, கவலை கொள்ளற்க!" என்று சொல்லித் தேற்றினார்.அனைத்தினும் ஓங்கி உயர்ந்து படர்ந்து தழைந்த இயேசு என்னும் தெய்விக மரத்தில் கிளைத்த கிளைகள்தோறும் அன்பின் கனி பழுத்துப் பயன்தரக் கிடைக்கின்றன.