அன்பு வெள்ளம்/அன்பு வெள்ளம்

அன்பு வெள்ளம்

ன்புதான் உலகிலேயே மிக உயர்ந்தது; பேராற்றலான ஒன்று

"அன்பினால் விளைந்தது துன்பம்" என்று சொல்வதற்கான சான்று இன்று வரை காணக் கிடைத்திலது. உள்ளத்தில் அரும்பிப் பூத்து மணக்கும் மென்மையான "நட்பு" என்னும் பூவினை, நசுக்கியும், கசக்கியும் எறிந்துவிட்டது என்னும் வன்மையை இன்றளவும் அன்பு பெற்றதில்லை.

அன்பு, மறை வடிவமான, கடவுளின் திருவுருவக் காட்சி, கடவுள் அன்பாக இருக்கிறார்.

அத்தகு அன்பு வாழ்விலும், அன்பே வாழ்வாகவும் கொண்டால், கண்ணன், புத்தர், அருகன், இயேசு ஆகியோரில் கடவுள் வாழ்ந்தது போன்று நம்மிலும் கடவுள் வாழ்ந்து வருவார்.

இயேசு பெருமான் சற்றே கரடுமுரடானவர் என்று சொல்லப்பட்ட போதிலும், பரிவும், இரக்கமும் மிக்கவராகத்தான் அவர் விளங்கினார். ஆகவே தான்் குழந்தைகள் சின்னஞ் சிறார்கள் அவரை அன்புடன் அணுகினர். அவர் தோள் மீதில் தாவி ஏறி அமர்ந்தும் அவரது தெய்வத் திருமுகத்தைத் தடவியும் பார்த்திட முடிந்தது. அந்தக் குழந்தைகள், இயேசுவிடம் அளவிலாப் பற்று கொண்டனர், கொஞ்சினர்; அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அவர் அருகிலேயே நின்றிட அவாவினர்.

கலிலேயாவின் திருமகனான இயேசுவில் இருந்த அன்புதான் அன்பு! அவ் அன்புதான்், திருச்சபையினை ஆட்சி புரிந்திட வேண்டும். இல்லத்தை ஆட்சி செய்திட வேண்டும். நம் நெஞ்சத்தையும் அவ் அன்பே ஆண்டு கொள்ளல் வேண்டும்.

"அன்பு" என்பது குன்றையும் குன்றுசார்ந்த இடத்தினையும் எப்படி மலர்கள் அழகு செய்கின்றனவோ அப்படித்தான் மாந்தரின் நெஞ்சத்தினையும் அழகு செய்கிறது.

வறள்நிலத்தினையும் காணப் பொறுக்காத மண் பரப்பினையும் முடி மறைத்துக் கவினுறச் செய்வன மலர்கள்தாம்.

பாறைகள் நிறைந்த மலைப் பகுதியினைச் சுற்றி மலர்ச் செடி, கொடிகள் வளர்கின்றன; மண்ணிலும் மண்ணடி வேர்களிலும் அவை வளர்கின்றன; தழைக்கின்றன. பள்ளமும், மேடும் நிறைந்த நிலத்தின் மேற்பரப்பினை அவை தம்மில் பூத்துக் குலுங்கும் மலர்களால் போர்த்திப் பொலிவெழச் செய்கின்றன. களி மண் பகுதியினையும், பாழ்பட்ட பகுதியினையும் கூட இயற்கை நிலத்துக்கு நல்கும் சிறப்பு உரிமையும் மாட்சியுமாக இணைந்து விளங்கும் ஆடை அணிகலன்களாக விளங்கி வனப்புமிக்கதாகச் செய்கின்றன, மலர்ந்து மாயும் அவ் வண்ண மலர்கள்!

அதுபோலவே, அன்பும் பண்பும் அற்ற பண்படாத மாந்தரின் நெஞ்சங்களைக் கூடப் பண்பட்டதாக மாற்றி அமைந்து அணி செய்கிறது அன்பு.

இயற்கை அன்பினால் பூம்பொழில்கள் தழைக்கின்றன. அதே அன்பினால் தான் அப் பூம்பொழில்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன; மணம் கமழ்கின்றன.

அவ் இறை அன்பினால்தான், பூத்தன அப்பூக்கள். ஒருசேரக் கொண்டுவந்து குவிக்கப் பெறுவதும் பின்னர் அவை, அழகுபடக் கண்ணைக் கவரும் வண்ண மாலைகளாகத் தொடுக்கப்படுவதும்; பூச்செண்டுகளாகக் கட்டப்படுவதும் அவை நம் உள்ளங்களைக் களிப்பில் ஆழ்த்துவதும் ஆகும்.

அன்புதான் நாம் வாழும் இல்லங்களை எழில் மயமர்க்குகிறது. அன்புதான், இல்லங்களில் நீக்கமற நிறைந்து உறைந்து மகிழ்ச்சி பொங்கும் இடமாக இல்லத்தை உயர்த்துக்கிறது.

அழகில் சிறந்தது - உயர்ந்தது அன்பு! அன்பு மிகமிக நுட்பமானது. நுண்மையும் மென்மையும் ஆனது.

வன்மையின் கைப்பட்டு நொடியில் உடைந்து தூளாகிவிடக் கூடியது அன்பு! எனினும் நம்மால் எதை எதைத் தாங்கிக் கொள்ள் முடியாது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோமோ அவற்றை யெல்லாம் தாங்கிக் கொள்ளும் வலிமையும் துணிவும் வாய்ந்ததாக விளங்குவது அன்பு!

அன்பினால் ஆளப் பெற்று, அவ் அன்பையே தனதாக்கிக் கொண்டு அந்த அன்பையே உள்ளம், உரை, செயல் என்று கொண்ட மாந்தர் எவருமே எத்தகைய ஈகத்திலும் - தன் மறுப்புக் செயல்களாலும் சிறுகவும் இல்லை; குறுகவும் இல்லை.

அருவருக்கத்தக்க குறுக்கை (சிலுவை)யினையும் அழகு படுத்தியது அன்புதான்!

இருளும் அச்சமும் நிறைந்த கல்லறையைச் சாவைத் தடுத்து நிறுத்திய அக் கல்லறையைக் கூட அழகும் ஒளியும் பொலியச் செய்தது அன்பு!

சாவினையும் அதனுடன் இணைந்துவரும் அச்சத்தையும் அகற்றியது அன்பு!

ஆணிகளால் ஆகிய முள்முடி தரிக்கப்பட்ட - முக்கால் அம் மணம் ஆக்கப்பட்ட கலீலி தந்த மேன்மையினைத் தனித்தோங்கும் உள்ளங்களை ஆண்டு கொள்ளும் அரசனாக்கியது அன்பு தான்்!

புயலால் அலைக்கழிக்கப்பட்டுச் சுக்கு நூறாகிவிட்ட நெஞ்சங் கொண்ட அவரை, 'ஆடை ஆற்ற அரசர்' என்பதைவிடப், 'பற்றறுத்தல் உற்றாருக்கு உடம்பே மிகை' என்னும் மெய்ப் பொருள் கண்ட மாமன்னரைத் துறவி என்றே அழைக்கிறது என் உள்ளம்.

அந்த மாமன்னனுக்கு முடிசூட்ட வேண்டுமென்கிறது அன்பு. முள் முடியா? அன்று, அன்று.

நம் நெஞ்சத்தால் - மனமார நாம் செய்யும் பத்தி, பண் பாட்டினால் செய்யும் வழிபாடு என்னும் மலர் மகுடத்தைச் சூட்ட வேண்டும் என்று பணித்துவிட்டது அன்பு.

காணரிய இன்பத்தினை நல்கும் இளமை குன்றாத தூய ஆவியை, இருள் சூழ்ந்த சமயப் பற்றற்ற நாகரிகமற்ற ஆப்பிரிக்க மக்களிடையே அனுப்பி வைக்கிறது அன்பு. ஏன்?

அன்பின் தொடு உணர்ச்சிகூட அற்ற நிலையினை மாற்றிட உணர்ச்சியற்று எதையும் புறக்கணிக்கும் போக்கினை விடுத்திட, தன்னலம் - பேராசை என்னும் அழுக்காற்றினை அகற்றிடத்தான் தூய ஆவியான அன்பு அவர்களிடம் சென்று வாழ்ந்திடத் தழைத்தோங்கிடத்தான் மேலும் மேலும் அம் மக்களின் அன்பு சென்று நிலைத்து நிற்கிறது; அவர்கள் இன்னல் நிறைந்த இருளினை விரட்டுகிறது; புத்தொளி பாய்ச்சுகிறது; புதிய படைப்பாக அவர்கள் அகம்புறம் மலர்ந்திடச் செய்கிறது. அப்படிப்பட்டது தான் அன்பு; வல்லமையாவினும் வல்லமையாக அழகு வாய்ந்த யாவற்றினும் பேரழகாக விளங்குகிறது அன்பு.

அவ் அன்புதான் கடவுளின் இயல்பாகும். அன்பின் அவ் இயல்பினால்தான் மாந்தரின் நெஞ்சத்தைக் கவர்ந்து அதிலே நிறைந்து நிலைத்திட ஒங்குகிறது.

★ ★ ★