அன்பு வெள்ளம்/ஒரு முன்னோட்டம்

ஒரு முன்னோட்டம்

மாந்த வரலாற்றின் மிக இக்கட்டான காலத்தை இன் நாம் கடந்து கொண்டிருக்கிறோம். கடந்த பல நூற்றாண்டுகளாக, அரிதின் முயன்று, மானிடம் வகுத்தளித்த அன்பு, பண்பு, அறன், ஒழுக்கம் எல்லாம் அழிந்துவிடும் நிலையில் இருக்கின்றன.

இருள் சூழந்த, இந்த நெருக்கடியான சுற்றுச் சார்பு நிலையில் ஏற்படவுள்ள அழிவுகளைத் தடுத்துக் காப்பாற்றிச் சீர்படுத்தும் வகையில் ஏதேனும் வழிமுறை உள்ளதா?

ஒன்றுபட்ட நம் குடும்பங்கள் பிரிந்து செல்கின்றன. முற்றிலும் ஒழுக்கத்தின் அடிப்படையில் கட்டுக்கோப்புடன் விளங்கும் குடும்பங்களின் வாழ்வும் சமூக வாழ்வும் இடர்ப்பாடான நிலையில் உள்ளன.

இவை அனைத்திலும் ஏதோ ஒன்று இல்லாத குறைபாடு தென்படுகிறது. மாந்தனின் இயல்பான அன்பு எங்கோ தோற்று ஒடிவிட்டது.

மீண்டும் மீண்டும் நாம், நம்மையே கேட்டுக் கொள்ளும் வினா இதுதான்.

"அவ் அன்பு தோற்றது ஏன்?" தன்னலம்தான் அதற்கான காரணம்!

இன்றைய புதுப்பாணியில் அமைந்த கல்விதான் பேரச்சம் தரக் தக்க இக்கட்டினை வென்றிட முடியாத தன்னலத்தை வளர்த்துவிட்டது.

அந்தத் தன்னலத்தை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையானதாகிவிட்டது.

அந்தப் போர் இன்றைக்கு நடைபெறுவது, இயற்கையாக மாந்தனிடம் இருக்கும் அன்பினுக்கும் தன்னலத்திற்கும் ஆகும் ஆனால் அன்போ, அப் போரிலிருந்து விலகி நிற்கிறது.

மேலும் அதுபோன்ற போராட்டங்கள், திருமண விலக்குக் கோரும் முறை மன்றங்களில்; முதலாளியத்துக்கும் தொழிலாளர்க்கும் இடையில் சாதி மக்களிடையில் எங்கெங்கும் நடை பெற்றுக் கொண்டிருப்பதைக் காணலாம்,

இந்தச் சிக்கல்களை எல்லாம் தீர்த்து முடிவுக்குக் கொண்டு வரும் நீக்குகை மனிதரிடம் உண்டா?

உண்டு மனிதர்களிடம் உண்டு! நாம் நம்பலாம்!

அதுதான் புதுவகையான அன்பு அந்தப் புதுவகையான அன்பினை, மானுடம் கண்டும் காணாமல் விட்டுவிட்டன் என்பது அண்மைக் காலத்தில் கண்டு உணரப்பட்டது.

புதுமைக் கோலம் பூண்டுவரும் அவ் அன்பினை, இன்றைய புதிய நாகரிக வாழ்க்கையில் கொணர்ந்திட வேண்டும் என்பதுதான் இந்த நூலின் முனைப்பும் முயற்சியும் என்றால் மிகையல்ல.

அன்பு இத்தகையது என்பதை, ஆண்டாண்டுக் காலமாக அறியாமல் இருந்துவிட்டோம் என்னும் ஓர் உண்மையை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும்.

அன்பில் ஊன்றி, உள்ளது சிறத்தலையும் அறிந்து வெளிப்படுத்தியதில் விஞ்சியும் எஞ்சியும் விளங்கியவர் திருவள்ளுவரே! அதனை முழுமையாக வெளிப்படச் செய்ததும் இயேசு பெருமானின் செயற்பாட்டினால் தான் என்பதைக் கொண்டறியலாம்.

அவ் உண்மையைக் கண்டறிய நான், என் வாணாளில் பெரும்பங்கு செலவிட்டிருக்கிறேன். ஆனால் கண்டறியும் எல்லையைக் கூட இன்னும் சென்றடையவில்லை.

கெனான்ஃபேரர் (Canonferer) என்பவருடைய எழுத்தோவியத்தைக் கண்டேன். அதில், கிரேக்க மொழிச் சொற்களில் அன்பு (Love) அல்லது அறம் அருள் இரக்கம் எனப் பொருள்படும் மன்பதை அன்பு (Charty) என்றும் இரண்டு சொற்கள்ல் மொழி பெயர்ப்பினை, புதிய ஏற்பாட்டில் இருப்பதைக் கண்டு ஒர் உண்மையைத் தெரிந்து தெளிந்தேன். அவ் இரு சொற்கள் 1. Agappa 2. Phitso

அகாபா (Agappa) என்னும் சொல்லுக்குச் சரியான பொருள் இயேசுவின் வெளிப்பாட்டில் தென்பட்டதாகும். ஆனால் அச் சொல், கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில், கிரேக்க இலக்கிடித்தில் வழங்கப்படவில்லை என்று உரைக்கிறார்.

அந்த உண்மை, ஓர் ஒளிச்சுடர் போன்று என்னுள் ஒளிவிட்டு உணர்த்தியது எனக்கு இயேசுவே அவ் வகையான 'புத்தன்பு' கொணர்ந்தார். ஆனால் இரு சொற்களும் பயன்படுத்தமால் பரிமாற்றம் செய்யப்படாமல் இருப்பதைக் கண்டேன். அந்தக் கமுக்கம் என்னில் உள்ளது. அந்தக் கமுக்கத்தின் வெளிப்பாடு என்னை என்கிறீர்களா?

"அன்பின் வழியது உயிர்நிலை" என்றார் திருவள்ளுவர் !

"அன்புதான் கடவுள்" என்கிறார் யோவான்!

எல்லாரும் வாருங்கள், இறைவரின் வரம்பிகந்த தெய்வீக இயல்பினில் நிலைபேறுடைய வாழ்வில் ஒருங்குகூடிப் பங்கு கொள்வோம்; பங்கு கொண்டால் நாம் எல்லாம் கடவுளின் அன்புப் பிள்ளைகள் ஆவோம்.