அன்பு வெள்ளம்/அன்பே கடவுள்
அன்பே கடவுள்
நாம் நமது கடவுளாகிய தந்தையை அறிந்து கொண்டால் அன்றி "அன்பே கடவுள்" என்னும் இத் தலைப்புக்கு உரிய பொருள் காண இயலாது."கடவுள் என்னில் அன்பு கூருகிறார்; என் மேல் கடவுள் அன்பு காட்டுகிறார்; கடவுள் என்மேல் அன்பு கொண்டுள்ளார்" என்று சொல்லுங்கள். சொன்ன பிறகு உங்களில் உங்கள் உள்ளுயிர்ப்பில் ஏற்படும் எதிர் வினை என்ன என்று பாருங்கள் உங்கள் உதடுகள் உங்களை அறியாமல், "கடவுள் தாமே என்னை அன்புடன் விரும்புகிறார்” அல்லது "என் தந்தை என்னை அன்புடன் விரும்புகிறார்” வாயிதழ்கள் இவ்வாறு முனு முணுக்கத் தொடங்கிவிடும்.
"கடவுள் என்று சொல்லிவிடுவதாலேயே, நீங்கள் கடவுளின் அருகில் இருப்பதாகக் கொள்ளமுடியாது. அல்லது 'தந்தை என்று சொன்னாலும் போதாது. அந்தத் தூய சொல்லை, உங்கள் மனச் சான்றுக்குள், வல்லந்தமாகச் சொல்லி, உள்ளே பதித்தல் வேண்டும். -
நாம் அடைய வேண்டிய மிக உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டோம். செய்ய வேண்டிய மிகப் பெரிய செயல்களைச் செய்துவிட்டோம். எப்படி? நாம் இருக்க வேண்டிய மிக உயரிய அன்புச் சூழலில் இருக்கிறோம் அதனால்!
அன்பு வாழும் இல்லத்தில் குழந்தைகள் வளர வேண்டிய வகையில் வளர்ந்து வருகின்றன. அன்பு மனையாள் தன் வருகைக்காகக் காத்திருப்பாள் என்பதறிந்து, அவரவர் கணவன்மார்கள் ஆற்றிட வேண்டிய அரும்பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். தம் கணவர் வருகை தருவார்; அன்பு காட்டுவார்; ஆவன செய்வார் அகம் குழைய இரவில் கொஞ்சுவார் என்று இன்முகத்துடன், இல்லக் கிழத்தியர், இல்வாழ்க்கைத் துணைவியர் தத்தம் இல்லப் பணிகளை முடிந்து விட்டிருக்கின்றனர்.
எண்ணமாயினும், செயல் நோக்கம் ஆயினும், செயலாயினும் அன்பிற்கு அப்பாற்பட்டதாயின், அது, நாம் அடைய வேண்டிய நற்பேற்றினை அடையவிடாமல் நம்மைத் தடுத்து நிறுத்தி வீண்படச் செய்துவிடுகிறது. அன்புச் செயல் ஒவ் வொன்றும் நம்மைப் பலப்படுத்துகிறது; வளம் பெறச் செய்கிறது, செய்யும் அன்புச் சிந்தனை ஒவ்வொன்றும் நம்மை உயர் வாக்குகிறது. முதலில் அன்பு பற்றி சிந்திக்க வேண்டும் அன்புச் சிந்தனை வேண்டும்; அதன் பயனாக அன்புப்பணி ஆற்றிட வேண்டும் மனிதருக்கு அன்பு எனும் ஒன்று எத்தனை நலம்பயக்குகிறது. மண்ணுல வாழ்வில் நற்பதம் முதல் விண்ணுலக வாழ்வாம் வீடுபேறு வரையில் அத்தனைக்கும் திட்டமிட்டு உதவுவது அன்பு.
நம் உடல் நலத்தைப் பேணிக்காக்கிறது அன்பு. அன்பே கடவுள்; கடவுள் என் பிணிகளைத் தீர்ப்பவர், என் நோய்களைக் குணமாக்குபவர். பகைமை எண்ணம், கசப்புணர்ச்சி, பயிற்றுக் கோளாறு உண்டாகச் செய்கிறது; அரத்த ஒட்டத்தைத் தடை செய்கிறது அது என்பது இப்பொழுது புரிகிறது.
சினத்துடன், கடுகடுத்த முகத்துடன் ஒரு தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுப்பதனால் தான்் அந்தக் குழந்தை, குணம் கெட்ட குழந்தையாக வளருகிறது. குழந்தைக்கு அன்புடன் பால் ஊட்ட வேண்டும் என்பதுதான்் கடவுள் எல்லாம் வல்லதாக எண்ணி அன்னைக்குள், பாலை வைத்தருளினான். தாய், தன் குழந்தைக்கு ஊட்டும் பால் இனிதான்தாக, ஊட்டம் மிக்கதாக, வளர்ச்சியும் உயிரின் மலர்ச்சியும் தருவதாக அமைய வேண்டு மானால், அந்தத் தாய், தன் கணவனை, மற்றும் தன்னைச் சூழ்ந்து உள்ளவர் அனைவரையும் அன்புடன் விரும்ப வேண்டும்.
அன்பில் வட்டத்தைவிட்டு அடியெடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், நோயினையும் தோல்வியையும் வலையையும் தளர்ச்சியையும் அறை கூவல் இட்டு அழைக்கின்ற முயற்சியாகும். செயலாகும்.
நம்மால் செய்யப்படுகின்ற ஒரே ஒரு தீமை ஒன்று உண்டு என்றால், அது, அன்புக் கோட்டினை விட்டு வெளியே அடியெடுத்து வைப்பதுதான், நாம் செய்யும் மற்ற தீங்குகள் எல்லாம் தீங்குகளை எல்லாம் படைக்கும் தீங்குகள்தாம்!
அன்புப் பாதையில், அன்பு நெறியில் நாம் நடப்போம் என்றால், நாம் ஒரு போதும் ஒரு தீமையும் செய்யோம்; செய்யமாட்டோம். வியப்பிலும் வியப்பு அல்லவா இது? அன்பினால் தீர்க்கப்படாத சிக்கல்களே இல. மாந்தரின் சிக்கல் எதுவானாலும் தீர்த்துவைக்கும் வல்லமை ஆற்றல், அன்புக்கு மட்டுமே உண்டு.
அன்பெனும் உலகில் வாழ்வது, அன்பு எனும் மொழியைத் கற்றுக் கொள்வது, அன்பின் ஒழுங்கு முறைமையைக் கைக் கொள்வது அன்பின் வழியினைக் கண்டறிவது போன்றவற்றைப் பயில்வதுதான்் கல்வி. அது வெறும் பாடப் பயிற்சிக் கல்வி, தொழிற் கல்வி நுட்பக் கல்வியல்ல; மனத்தைப் பொதுவாக விரிவுபடுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்வி (Liberal Education) யாகும் அந்தக் கல்வியினைக் கற்பதே கல்வியாகும்.
கடவுளே அன்பாயிருக்கிறார்; அந்த அன்புக் கடவுளே, நம் தந்தை. நாம் அவருடைய பிள்ளைகள். அன்பு எனும் குடும்பத்தில் நாமும் ஒருவர்.
இயேசுவே அன்பு: நாம் நடக்கும் அன்பு வழி, இயேசுவின் வழி. அனைத்துமே இயேசு நமக்குக் காட்டிச் சென்றுள்ள அன்பு நெறி. எல்லாம் இயேசுவின் அன்புச் செயல்கள் செயல்களில் எல்லாம் ஊடுருவி நிற்பது இயேசுவின் அன்பேயாகும்.
உலகத்தை ஒன்றாகக் கட்டிடல் அன்பாம்
நலஞ்செயும் பொற்சங் கிலி.