அமிழ்தின் ஊற்று/கண்ணுறங்காய்



மண்ணுல கின்ப மெல்லாம்
மகிழ்ந்துட்ட வந்த வாழ்வே.
விண்ணெலாம் தோற்க; இன்பப்
பழச்சுவை எலாம் ஒதுங்க
விண்ணுலா புள்ளி னத்தின்
விழைமன இசை மறக்க
எண்ணிலா மழ்லைப் பேச்சில்
இணைத்தனை இசைமின் சோதி!

நினதெழில் மழலை ஞாலம்
நிறைந்திடும் புளக மூட்டும்!
நினதுயிர் மழலை விண்ணில்
நிறைந்திடும் கால் மணக்கும்
நினதுயிர் மழலை, கல்லை
நிகரிலா தங்க மாக்கும்!
நிணதொளிக் கனவில் வாழ
நிதமும்நீ மிழலை தாராய்!

கண்ணுறங்காய்

குலாலம் பேச வந்த
கொல்வேறே வீரத் தோளே !
குலகலம் காட்ட வந்த
குணக்குன்றே பண்பு யிர்ப்பே !
குலநலம் செழிக்க வந்த
செந்தமிழ்க் கூத்தே ! சான்றே !
குலகலம் காட்டி வெற்றி
கூட்டினை கண்ணு றங்காய்!


கண்மலர் தேன்சிட் டைப்போல்
களிப்புடன் சிறக டித்து
மண்மலர் காட்டர் இன்பம்
மனத்திலே கூட்டிற் றன்பே !
விண்மலர்ச் சிரிப்பும் ஒப்போ!
வியப்படா கண்ண ரும்பு!
பண்மலர் தநதாய் போதும்
பாசமே கண்ணு றங்காய்!

மண்ணுல கின்பக் தந்தாய்
மானுடன் அமர னுனேன்
விண்ணுல கின்ப மெல்லாம்
விணடா உன்அன் பின்முன்
எண்ணுல கின்பக் காட்சி
இருவிழி. மூடிக் காண்பாய்
பெண்ணுல கிருந்து வந்த
பெரும்பேறே கண்ணு றங்காய் !