அமிழ்தின் ஊற்று/மழலை

மழலை


உயர்மலை அருவிக் கூத்தின்
ஒருகாதல் அமுதப் பாட்டும்
நயமிகு வேய்ங்கு ழல்தன்
நவநவ கனவுப் பாட்டும்
துயரமா உலக மிக்கும்
தூய்தமிழ் விணைப் பாட்டும்
மயல்தரூஉம் டிமலைக் கிங்கே
இணையிலை குல்வா போநீ!



மண்ணுல கின்ப மெல்லாம்
மகிழ்ந்துட்ட வந்த வாழ்வே.
விண்ணெலாம் தோற்க; இன்பப்
பழச்சுவை எலாம் ஒதுங்க
விண்ணுலா புள்ளி னத்தின்
விழைமன இசை மறக்க
எண்ணிலா மழ்லைப் பேச்சில்
இணைத்தனை இசைமின் சோதி!

நினதெழில் மழலை ஞாலம்
நிறைந்திடும் புளக மூட்டும்!
நினதுயிர் மழலை விண்ணில்
நிறைந்திடும் கால் மணக்கும்
நினதுயிர் மழலை, கல்லை
நிகரிலா தங்க மாக்கும்!
நிணதொளிக் கனவில் வாழ
நிதமும்நீ மிழலை தாராய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=அமிழ்தின்_ஊற்று/மழலை&oldid=1070434" இலிருந்து மீள்விக்கப்பட்டது