4.ஆத்தா

ஆதிபிரமர்

கங்குல் தாய் கறு நிறத் துகிலெடுத்து, அதைத் தொட்டிலாக்கி உலக மக்களைப் படுக்க வைத்துத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்த வேளை அது. பலருக்கு உறக்கம் பிடித்தது; சிலர் கொட்டாவிகளை எண்ணிக் கணக்கிட்டுப் பிரித்துக் கொண்டிருந்தனர்; எஞ்சியவர்களுக்குத் தூக்கம் வேம்பானது. இந்தக் கும்பலில் தான் அவளும் சேர்த்தி.

அவள் என்றால் மட்டும் போதுமா?-போதrது. அவளுக்கும் பெயர் ஒன்று உண்டு. பெயர் சூட்டும் நிகழ்ச்சி ஒரு விழாவாக அமையாமற் போனாலும், அந்தப் பெயரை அவளுக்கு இட்டு அழைப்பதற்கு அவளுடைய பெற்றோர்கள் எவ்வளவோ காலம் காத்துத் தவங்கிடந்தார்கள். 'பொறக்கப் போறது ஆண் குஞ்சாக இருக்கோணும். ஆதி பிரமர் சாமியே!' என்ற அவர்களது 'வேண்டுதலை' பலிக்கவில்லை; ஆனால் பிறந்த பெண் குழந்தை 'மூக்கும் முழியுமாக' இந்த மண்ணில் முதற் குரல் கொடுக்கத் தவற வில்லை.

அவள் பெயர் என்ன தெரியுமா? பொன்னரசி! பெயரைச் சொல்லும் உதடுகளில் கற்கண்டுச் சுவை வழிவதைப் போலவே, அவளைப் பார்க்கும் கண்கள் அன்புப் போதையும் இன்பப் போதமும் பெற்றுத் திகழும். பொன் னுக்கு அரசியாகவும், பெண்ணுக்கு அரசியாகவும் விளங்கின மகளுக்கு நடை வண்டி கொடுத்தவர்கள் அவளை ஈன்று வளர்த்து வந்தவர் களே தாம், என்றாலும், ஒர் அதிசயம் என்னவென்றால், பருவம் தாவணியையும், காலம் பருவத்தை யும் பரிசளித்தன, அவள் 'சமைந்தாள்'. திறந்தவெளி அரங்கமாக இயங்கி வந்த ஊரும் உலகமும் அன்று தொட்டு அவன் வரை சுருங்கிக் கொள்ள பழகிக் கொண்டன . அவள் மனம் புழுங்கினாள், விரக்தி வின் நெட்டுயிர்ப்பும், வேதனையின் குமைச்சலும் அவளது பருவத் துடிப்பைக் கிண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் தருணத்தில், ஆசை முகமொன்றை ஆர்வம் பொங்க மனத் திரையில் வரைந்து ஓவியமாக்கி அனுபவித்து ஆறுதல் பெற்றாள் அவள்மச்சான் இந்தக் கணக்குக்கு பர்மாவிலே மாந்தனையிலேருந்து திரும்பினதும், எங்கழுத்திலே மஞ்சக் கயிறு கட்டிடுவாங்களாமே!’ என்று தனக்குத் தானே வினா வடிவில் விடை அமைத்துப் பூரித்துப் போயிற்று பெண் உள்ளம். கனவின் வடிவிலே காதல் வளர்ந்தது; காதலின் உருக்கொண்டு கனவு நீண்டது. காதலும் கனவும் ஒட்டாத இரு துருவங்கள் என்கின்றார்களே? ஐயை அறிவாளோ?

ஆஞ்சநேயன்

முன்னைப் பழங்கதை ஆயிற்றே இத்தனையும்: பொன்னரசி விம்மினாள். ஏன்? வாழ்க்கைப் பாதையில் இருபத்தெட்டு மைல் கற்களைக் கடந்து வந்தவளுக்குத் துயரம் ஒரு கேடா, என்ன?

பொன்னரசியின் செவிப்புலன், எங்கிருத்தோ மிதந்து வந்து மோதிய அழுகைக் குரலை நுகர்ந்தது. 100 அமுதவல்லி

அவளும் நெஞ்சு வெடிக்க விம்மலானாள். துயரம் மண்டிய ஓலத்தினின்றும் பிரிந்து தெரிந்த அந்தக் குழந்தையின் கதறல் அவளுடைய நெஞ்சின் அடித் தளத்தில் சம்மட்டியாக இயங்கியது. பொன்னரசி துடித் தாள்: துவண்டாள்; உயிர்ப்பு விடை பெற்று விடும்போல ஒர் உணர்வு கிளர்ந்தெழுந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். உடுத்திருந்த முன்றானைக்குள் அவளது மேனி ஒளிந்தது.

 திருக்கோகரணத்தின் தலைவாயிலில் இருந்த பழைய அரமனை அப்போதைய மணி பனிரெண்டு என்று சொன்னது. பஸ் நிலையத்தில் இருந்தவள் கேட்டாள். அவலம் நிரம்பிய ஓலத்தில் சுருதி கம்மிப்பட்டிருந்தது. பொன்னரசி மெல்ல எழுந்து நடைபயின்றாள். ஆஞ்சநேயர் கோயிலைத் தாண்டிய இடத்தில் காணப்பட்டது இடிந்த சுவர்ப்பகுதி. அங்கிருந்து தான் அழுகை 'சிரித்துக்' கொண்டிருந்ததென்பதை உணர்ந்து கொண்டாள் அவள், பிரஹதாம்பாள் தெய்வத்தை எண்ணித் தொழுது அண்டினாள்: மண்டியிட்டுத் தரையில் உட்கார்ந்தாள். 'பச்சை மண்'அது. அடுத்துப் படுத்திருந்த பெண் தான் குழவியின் அன்னையாக இருக்க வேண்டும். மூடுதுணி எதுவுமில்லாமல் திறந்துகிடந்த 'தாய்மை’ யின் இருப்பிடத்திலே மதலை செப்புவாய் பற்றிச் சப்பிச்சப்பிப் பார்த்தது. பாலமுதம் சுரந்தால் தானே...? ஆகவே தான், தொண்டைக் குழியில் நோவு எடுக்கும் பரியந்தம் அப்படிக் கத்தித் தீர்த்தது. அது-அந்தப் பச்சைப் பாலகன். பெற்றவளுக்குக் குழந்தையை ஈன்ற கடமையுடன் செயல் முடிந்து விட்டது போலும்! அவள் தன் போக்கிலே ஆடாமல் அசையாமல் கண்வளர்த்து கொண்டிருந்தாள். பூவை எஸ். ஆறுமுகம்     101


 பொன்னரசி ஊர் பேர் அறியாத அந்த ஸ்திரீ மீது ஆத்திரப்பட்டாள். தொட்டு எழுப்பினாள்; தட்டிக் கூப்பிட்டாள். ஊஹூம் அவள் ஏன் அக்கறை கொள்ளப் போகிறாள்?
 பொன்னரசி குனிந்து தன்னைத் தானே ஒரு முறை நோக்கிக் கொண்டாள். நெஞ்சகம் விம்மித் தணிந்தது. ஆனால் விழிப்புனல் மட்டுமே வடிந்தது! ‘ம்......என்னாலே என்ன செய்ய முடியும்?”
  கைந் நொடிப் பொழுது கழன்று வீழ்ந்தது.
 ஆதுரம் துள்ள பொன்னரசி குழந்தையை அணுகினாள்; குனிந்து அதை வாரியெடுத்து அணைத்துக் கொள்ள முனைந்த நேரத்தில், இருதயத்தில் இடியொன்று வீழக்கண்டாள்: இடியோசை காதுகளைச் செவிடுபடச் செய்தது. அணைக்கத் துடித்த நெஞ்சு நஞ்சம் உண்டாற் போலப் பதைத்துப்பின் தங்கிற்று. 

“ஆ... ஐயோ!" என்று கூக்குரல் பரப்பினாள் பொன்னரசி. உதிரம் கொட்டியது, கண் முனைகள் இரண்டிலுமிருந்து. அடிவயிற்றில் அவளது மெலிந்த விரல்கள் இழைந்தன. மறுகணம் அவை சூடுபட்டுச் சூம்பின. அமிர்தம் பிறக்கும் பகுதிகளில் தீஅழல் எரிந்தது. நெற்றிப் பொட்டுத் தெறித்தது. ஐயையோ!' என்று கூப்பாடு போட்டவாறு பொன்னரசி மண்ணில் சாய்ந்தாள். அடி துண்டு பட்ட முருங்கையைப் போன்று.

 அப்போது, 'ஆத்தா ஆத்தா!’ என்ற அழைப்புக் கேட்கத் தொடங்கியது.
 அவள் விழிகளை விலக்கினாள் ஒருகால் 'ஆத்தா’ என்ற சொற்கள் அவளுடைய உந்திக் கமலத்தைத் தொட்டனவோ? அவள் திகைப்படைந்தாள்.  102           அமுத வல்லி

குஞ்சுக் குழந்தை பிஞ்சுக் கைகளையும், பஞ்சுப் பாதங்களையும் பயன்படுத்தி முன்னேறி அந்தப் பஞ்சையிடம் பால் சேகரம் செய்ய எத்தனித்துக் கொண்டிருந்தது. பேசாத பொற் சித்திரத்தை நெஞ்சுடன் நெஞ்சு இறுத்தி இறுக அணைத்த வண்ணம் சத்தைக் கூட்டி எழுந்தாள் பொன்னரசி. எடுத்த முயற்சியில் தோல்வி கண்ட சிசு வீரிட்டு அலறியது. தாய்க்காரி அப்போது மட்டும் எப்படியோ விழித்து விட்டாள்: "சீ!தூத்தேரி!” என்று ஏசிய பின் குழந்தையை அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டாள்; காறித்துப்பினாள்; எச்சிலைத் துப்பியவள் மீதும் அந்த எச்சில் துளியொன்று பட்டது. கோடை மழைக்கு கட்டியங் கூறியது கொடி மின்னல்.

         துர்க்கை
 புதுக்கோட்டை பஸ் நிலையம் உதய சூரியனின் கருணைப் பார்வைக்கு ஆளானது. வாகன ஊர்திகளும் பிரயாணிகளும் கலந்த ஓர் அவசர-அவசியச் சூழலிலே, காலமெனும் திரி இயற்கையென்னும் விளக்கிலே நின்று நிதானித்து எரிந்து கொண்டிருந்து. முத்திநெறி அறிந்த தவமுனியின் இதயம் போல் நிர்மலமாகக் காட்சி கொடுத்து விண். துறவு மேற் கொள்ள நெஞ்சுரம் பூண்டவன், அதே மனநிலையில் செயற்பட இயலாமல் சலனமுற்றுத் தவிப்பதைப் போன்று இருந்தது மண்.
 விடிவெள்ளி விண்ணைத் தொட்டதும், துாற்றல் மண்ணைத் தொட்டது. பொன்னரசி, சீர்குலைந்து பழுதுபட்ட நடுத்தெரு துர்க்கையின் சிலை நிலையில் இருந்தாள். நனைந்த மாதிரியே கிழிந்த துணி உலர்ந்து விட்டது. அவளுடைய தளர்ந்த மனத்தில் பூவை எஸ். ஆறுமுகம்

அக்கணம் செந்நிறம் காட்டிய கேள்வி இது ஒன்று மட்டுந்தான்: நான் எத்தனையோ வாட்டி செத்து மடிஞ்சுப்பிடத் துணிஞ்சப் போவெல்லாம், என்னோட கனா பலிக்குமிங்கிற ஆசை மனசிலே ஓடினதாலே தானே நான் உசிர் மேலேயும் ஆசை வச்சுக் கிட ஆரம்பிச்சேன்! ஆனா, இனிமே என் நெனைப்பு எங்கே பலிக்கப் போவுது?...ஆமா, மெய் தான்! இனி நானும் மக்கி மடிஞ்சு மண்ணாகிப் போனாப்போலே தான்!...

 ஆளுடைய அடிகளாரின் கவியின் ஒரு பகுதியை

சாது ஒருவர் அடித்தொண்டையில் ஏற்றிப் பாடிக் கொண்டிருந்தார்.

'தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி!

 வழுவு இலா ஆனந்த வாரி போற்றி! 

அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி!

 முழுவதும் துறந்த முதல்வா போற்றி!

நாணயம் புழங்கத் தொடங்கிற்று; காவி வண்ணம் கொண்டிருந்தவர் திசை திரும்பினார்.

 குலதெய்வத்தின் நினைவு பொன்னரசிக்கு ஏற்பட்டது. முன்னடியான், சன்னாசி சங்கிலிக் கறுப்பன் துணையுடன் நின்ற ஆதி பிரமரின் பயம் செறிந்த பாவம் தோன்றியது.
 கண்களிலிருந்து உதிரம் கொட்டியது.
 புழுதி மண்ணில் ரத்தத் துளிகள் சிந்தித் தெறித்தன.
 பொன்னரசி தலை குனிந்த போழ்தில், உருவான புழுதி மண்ணில் பச்சைக் கொடியின் சித்திரம் ஒன்று 104        அமுத வல்லி

உருக்காட்டி அமைந்திருப்பதைக் கண்ட போது, சப்த நாடிகளும் அடங்கிப் போனாற் போலிருந்தது.

 ‘மகனே என்னை மன்னிச்சிட மாட்டியா?”
 நூறடி ஆழமும் நூற்றுக் கணக்கான சுழிகளும் இணைந்த அந்தப் புதுக்குளம் அவள் வரவுக்குக் காத்திருந்தது!
      ஐயை

இனி :

கதையின் கரு:

 பொன்னரசி அப்பொழுது பதினெட்டு வயது கொண்ட வாலைக் குமரி, கன்னி கழிந்த கட்டம். கட்டழகு சொக்க நின்றாள். ஆப்பிள் பழத் தோல் அவளது உடலில் போர்த்தப் பெற்றிருந்தது. சுண்டினால் ரத்தம் தெறிக்கும். சிலட்டூர் 'இளசு'கள் அவளுக்காக 'மோப்பம்' பிடித்தன. ஆனால் அவளோ தன் அன்பு அத்தானுக்காகத் தவம் கிடந்தாள். மலைமகளின் தவம் பலித்து, பிறைசூடிக் கிடைத்த வரலாற்றை அவள் அறிந்திருந்தாள். ஆகவே அது போன்று தன் இதயக் கனவும் ஈடேறும் என்பதாக எண்ணினாள்; எண்ணி மகிழ்ந்தாள். அவளுக்குரிய 'முறை அத்தானை' ஏந்தி வரும் கப்பலுக்காக அல்லும் பகலும் விழி நோகக் காத்திருந்த நேரத்தில், எதிர்பாராத வெடியொன்றை வீசிச் சென்றான் செந்நிறப் பில்லைச் சேவகன். அழுதாள்: அழுதாள்; அழுது கொண்டேயிருந்தாள்: மாண்ட அத்தான் மீளமாட்டான் என்று தெரிந்தும் கூடப் புலம்பினாள். தந்தை அனுப்பிய இலங்கைச் சீமைப்பணம் பூவை எஸ். ஆறுமுகம் 贾0岳

அவளுடைய நெஞ்சுப் புண்ணை ஆற்றவில்லை; வயதான அன்னையின் அன்பு அவளது ஆறாத் துயரத்தினைப் போக்கடிக்கும் அரு மருந்தாக அமையக் காணோம். நீலக் கடலும் நீள் விழிகளும் ஒரே இனம்! .

         காட்டேரி
 அந்தி சந்திப் பொழுது. அப்படிப்பட்ட நடு வேளைப் பகுதியிலே ஒருநாள், தண்ணீர் கொணர குளத்திற்குச் சென்றாள் பொன்னரசி. வயல் வரப்பைப் பார்த்து திரும்பிக் கொண்டிருந்தான் கங்காணி மகன் கந்தசாமி அந்தம் நிறைந்த எழில் வதனம்; அரும்பு மீசை, குறும்புப் பார்வை: இரும்பு உடல். அக்கரைச் சீமை சீராட்டி வளர்த்த செல்வச் சீமானின் புதல்வனல்லவா? சின்ன வயசில் 'கட்டுப் பாண்டி' ஆடிய காலத்தே அவன் அவளைக் கண்டது உண்டு, இனம் கண்டு கொண்டான்; ஆனால் அவள் பார்வை தட்டுப்பட்டதும், அவனுக்கு இனம் விளங்க மாட்டாத ஒரு கிளர்ச்சி; நிறைவு.
 புன்னகையும் புது நிலவும் அவர்கள் இருவரையும் அந்தரங்கமாகச் சந்திக்க உதவின. எட்டாப் பழமாக இறக்காத தேனாக இருந்து வந்த பொன்னரசியின் உருவம் கந்த சாமியின் புகைப்படக் கருவிக்குத் தப்ப வில்லை. ஊர்க் கோடியில் சந்தித்து வந்த அவன் ஒரு நாள் மதியத்தில் அவளுடைய வீடு தேடி வந்து சேர்ந்தான்.

‘பொன்னரசியை நான் கட்டிக் கிடலாம்னு எண்ணியிருக்கேன். அப்பாவுக்கு கண்டிக்கு தபால் போட்டிருக்கேன். தாக்கல் வந்த கையோடு கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட வேண்டியதுதான்!’

அ-7 106 அமுத வல்லி

 செய்தியை வெளியிட்டான். பொன்னரசியைப் பெற்றவளிடம்.
 தன் புருஷனுக்குக் கடிதம் எழுதி இதுபற்றி முடிவு சொல்வதாகத் தெரிவித்தாள் பொன்னரசியின் தாய்.
 நாலிலே இரண்டிலே வந்துபோனான் கந்தசாமி, அந்த எழிலரசியைக் காண. ஒரு நாள் உச்சிப் பொழுது. பொன்னரசி மட்டுமே வீட்டில் குத்தியிருந்தாள் அவள் அன்னை சந்தைக்குச் சென்றிருக்கும் விவரமும் கிடைத்தது. குளித்து முழுகி வந்திருந்த பொன்னரசி ஈரப் புடவையைக் களைந்து மாற்றுடை உடுத்துக் கொண்டு கையில் ரவிக்கையுடன் உள் திண்ணையில் அமர்ந்த போது, கந்தசாமியின் புகைப்படத்தின் நினைவு எழவே. அதை எடுத்து வந்து அழகு பார்த்தவாறு இருந்தாள். நிழற்படத்துக்குரியவனே நேரில் வந்ததும், அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. வந்தவன் அவளுடைய படத்தைக் காட்டினான். ஆர்வம் துள்ள பொன்னரசி தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, கந்தசாமி இளமை துள்ளும் பொன்னரசியின் அழகைப் பருகிக் கொண்டிருந்தான். பருவ மலரின் நெடி மண்டைக்கு ஏறியது. அவளுடைய கண்களுடன் அவனது விழிகள் அந்தரங்கம் பேசின. அவள் பிணங்கினாள். “நாளைக்கு உன் கழுத்திலே தாலி கட்டப் போறவன் தானே?. சரின் னு சொல்லு, பொன்னரசி!" என்று கெஞ்சினான். ஒப்பவில்லை. கடைசியில், பலாத்காரத்தின் பிடியில் 'பெண்மை' கருத்தழித்தது. காலத்தின் வளர்ச்சியோடு, அவளுள் கரு வளர்ந்தது. செய்தி அறிந்த அவள், செய்தியை உரியவனிடம் சேர்ப்பிக்க விரைந்த போது, ஏச்சும் பேச்சும் தான் கிடைத் தன. "நீ துப்புக் கெட்ட கள்ளி! உன்னை பூ வை எஸ். ஆறுமுகம் 

நானா கண்ணாலம் பண்ணிக்குவேன்?...முடியாது!" என்று தீர்ப்பு வழங்கினான் கந்தசாமி. அடுத்த நாள் இரவிலே அவனை மயக்கிப் பொய் நாடகம் ஆடி பழி தீர்த்துக் கொள்ள காட்டேரியாக மாறி வெறி கொண்டு சென்ற போது, அவன் கடல் கடந்த தகவல் கிடைத்தது.

 'நடத்தை கெட்டவள்னு அவப்பேர் எடுத்த பின்னாலே இனிமே நான் இந்த ஊர் நாட்டிலே தங்கவே மாட்டேன்!” என்று முடிவெடுத்து, பிறந்த வீடு துறந்து, இரவோடு இரவாக கால் போன திசைக்குச் சென்றாள் பொன்னரசி. மறு தினம் பிற்பகல் பொழுதிற்கு அவள் புதுக்கோட்டையைத் தரிசித்தாள்: அணிந்திருந்த நகைகள் தரிசனம் தந்தன: சுமந்திருந்த கரு அவளைச் சித்திரவதை செய்தது. சீ! சனியன்!” என்று ஆத்திரப்பட்டாள், உருத் தெரியாக் கரு மீது. அண்டிய இடம் அடைக்கலம் தந்தது. ஏழைக் கிழவி ஒருத்தி நிழல் தந்தாள். பொன்னும் மணியும் படி அளந்தன. ஓரிரவு கருவைக் கரைக்க விஷப் பச்சிலையைப் பொன்னரசி தயாரித்த போது, அவ் விஷயம் அம்பலமானது. கிழவி தடுத்து விட்டாள். “நீ யோசிக்காம நடந்ததுக்கு அது என்னா செய்யும், பாவம்" என்றாள்.
 
 பொன்னரசிக்குப் பேறு காலம் நெருங்கிய போது ஆதரவு கொடுத்து வந்த கிழவியும் நமனுலகு ஏகினாள்.
         காளி
 பொன்னரசியின் வாழ்க்கைப் பாதையில், மீட்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டது. கிழ வயிடம் 'நடந்த கதை'யை இதயம் திறந்து சொன்னது போல வேறொரு பங்களாவில் கூறிய சமயம், அவள் அடித்துத் துரத்தப் பட்டாள். காலங் கடந்து, இரவு வேளையிலே நகர்ப் பகுதியைக் கடந்த இடத்தில் இருந்த சத்திரத்தில் ஒண்டினாள். வலி எடுத்தது. புதுக்கோட்டை அம்மன் காசு கூட அவளிடம் ஒட்டியிருக்கவில்லை. மெல்ல எழுந்தாள். ஆந்தையின் குரலை அடையாளமாக்கி, கை முடிச்சுடன் நடந்தாள் நடக்க முடியாமல் நடந்தாள். காடு தென்பட்டது. சுருண்டு விழுந்தாள். கும்மிருட்டு, அவள் திரும்பக் கண் மலர்ந்தாள். ‘குவா’ என்னும் மொழி கேட்டது. எஞ்சியிருந்த தெம்பைக் கூட்டினாள், ‘பச்சை மண்’ணைக் கையிலெடுத்தாள். ஆண் சிசு! ‘சனியன்!’ என்று வாய் விட்டுக் கூறிய வண்ணம், அதன் கழுத்தை நெறிக்கப் பிரயத்தனம் செய்த போது, யாரோ நடந்து வரும் அரவம் கேட்டது. குழந்தையைத் தரையில் போட்டாள். ஒளி காட்டத் தொடங்கிய பின் நிலவில், அவள் நோக்கு மண்ணுக்கு ஓடியது; ‘பச்சை ரத்தத்’தின் நெற்றியிலிருந்து குருதி வழிந்து, பூமியைச் செந்நிறப் படுத்தியிருந்த பயங்கரக் காட்சிதான் அவள் பார்வைக்கு இலக்கானது. ரத்த பூமி மீது கிடந்த பச்சை பாலகனை ஏறெடுத்துப் பார்க்க முற்பட்டாள்: வழிப்போக்கர்களின் காலடிச் சத்தம் அருகில் கேட்டது. பொன்னரசி சற்றுத் தொலைவில் இருந்த புதர்ப் பக்கமாக மறைந்து, தன் அவல நிலையைச் செம்மைப் படுத்திக் கொண்டு, வந்தவர்கள் போனதும், மறுபடியும் பழைய செம்மண் பூமிக்குத் தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றாள். குழந்தை காட்சி தரவில்லை. அது வரை, சுமையாகத் தோன்றிய அந்த இன்பச் சுமையின் மகிமை இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. “கங்காணி மஜன் காட்டின ஆசையிலே மோசம் போன நான், கடைசியிலே என்னோட செல்வத்தைப் பறி கொடுத்துப்பிட்டேனே?” 109           அமுதவல்லி

என்று புலம்பினாள். குழந்தை மறித்திருக்க நியாயமில்லை என்றவரைக்கும் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. வழிப்போக்கர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு எடுத்துச் சென்றிருப்பார்கள் எனவும் திட்டமிட்டாள். உடனேயே வெறி பிடித்தது போல அந்தப் பாதையில் தொடர்ந்து நடக்கலானாள், காளிபோல. தவறி விழுந்த புகைப்படங்கள் அவளுடைய பார்வையில் பட்டால் தானே? பொழுது விடிந்தது தான் கண்ட பலன். குழந்தை கிட்டவில்லை!

அண்டைக் கிராமத்தில் மூர்ச்சை போட்டுச் சாய்ந்துவிட்ட பொன்னரசியை நிலை உணர்ந்த நல்லவர்கள் காத்துப் பேணினார்கள். “ஏண்டா ராஜா என் வயித்திலே வந்து ஒண்டினே?... ஐயோ! நான் பேய்!” என்று தனக்குத் தானே பேசித் தலை மயிரைப் பிய்த்துக் கொண்டு நாட்கள் சிலவற்றை ஓட்டினாள் அவள். புகல் கிடைத்த இடத்தில் ‘கழுகு’ ஒன்று வட்டமிடுவதை யூகித்த அவள் தன் வசமிருந்த பசி கொண்ட கத்தியின் துணையுடன் அங்கிருந்து மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தாள். ஆஞ்சநேயர் சந்நிதியில் மண்டியிட்டு அழுது தன் தவற்றைப் பொறுத்தருளுமாறு கதறினாள். “என் குழந்தை உசிரோட இருக்குமா? என் கைக்கு திரும்பவும் கிடைக்குமா?' என்று ஆஞ்சநேயரிடம் மானசீகமாகக் கேள்வி விடுத்தாள். நல்ல பதிலே கிடைத்தது. அப்பொழுது அவளுக்குத் தன் உயிர் மீது ஒரு கவலையும் ஓர் அக்கறையும் ஏற்படலாயின. ‘ம்’ என்னோட மகன் எனக்குக் கிடைச்சதும், என்னை ஏமாத்தின அந்தப் பழி காரனை பழிவாங்கிப் பிடுறேன்!...' என்று சூளுரைத்துக் கொண்டாள்!

 அங்காளம்மை

 பத்து ஆண்டுகள் கழிந்து போயின. நிகழ் காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் பாலம் அமைத்த அந்தப் பெரும் பொழுது எப்படித் தான் ஓடி நழுவியதோ? தண் எழில்-மாற்றுக் குறைந்த கொஞ்சும் அழகு மறுமுறையும் கறைபடலாகாதே என்ற நினைவில் பசியும் பட்டினியுமாகக் கிடந்து அவ்வழகைச் சிதைத்துக் கொண்ட அந்த விந்தைச் சம்பவம் அவளை மறக்க முடியாது. 'பத்து மாசம் சுமந்த பாலகன் உங்கிட்டே இருந்தா, இந்நேரம் உன்னோட சபதமும் பலிச்சிருக்கும்; உனக்கும் ஆறுதல் சொல்லியிருப்பான் ! தாயாக இருக்க வேண்டிய நீ பேயாகிப் போனியே?... 'என்று அவளுடைய மனச்சான்று ஏசித்திட்டி, ஆறாத புண்கள் ஆயிரமாயிரத்தை நெஞ்சத்திலும் பெற்ற மணி வயிற்றிலும் நிரப்பி விட்ட துயர அனுபவங்களை அவளால் மறத்தல் சாத்தியமன்று.
 காட்டுப் புதிரிடுக்கிலே புழுதி மண் மீது ரத்தக் கறையும் தானுமாகக் கிடந்த அக் குழவியை இமைப் போதுதான் அவள் கண்டிருக்க முடியும், உருப் புரியாத தோற்றமும், உருப் புரிந்த ரத்த வெள்ளமும் அவளை ஒவ்வொரு கனமும் சாகடித்துக் கொண்டிருந்தன. அத்தகைய சித்திரவதையிலும் அவளுக்கு ஓர் ஆனந்தம் ஏற்படத் தான் செய்தது. 'ஆமா, நான் இப்பிடிச் சாகாமல் செத்துக்கிட்டிருப்பதுதான் நல்லது. நான் செஞ்ச மன்னிக்க ஏலாத குத்தத்துக்கு இதுதான் தகுந்த தண்டனை!...”

பொழுது ஏறிக்கொண்டிருந்தது. பூவை எஸ். ஆறுமுகம் 111

   மூச்சுப் பிடித்தது; எப்படியோ எழுந்தாள் பொன்னரசி. கந்தலும் கிழிசலும் கொண்ட துணி மூட்டை அவள் கக்கத்தில் இருந்தது. கத்திமுனை தோலில் உரசியது. அவளது வைரியான கந்தசாமியின் படமும் அவளுடைய படமும் ஞாபகத்தில் ஒடின; அவை என்றோ எப்படியோ அவளிடமிருந்து பிரிந்து விட்டனவே...? நடந்தாள்.
    கீழராஜ வீதியிலிருந்து மடங்கி, சென்ற வழி வழியே மறுகி நடந்தாள் அவள். புதுக்குளம் வந்தது. படி ஏறிச் செல்ல அடி வைத்த போது, தொங்கல் வீட்டில் கல்யாணம் நடந்த தை அறிந்து அங்கு சென்றாள்; வெள்ளை பூசிய சுவர்களும் வாழைத்தார் கட்டின காவணமும் அவளைக் கவர்ந்தன. மாப் பிள்ளையைப் பார்த்தாள். இளம் வயசுக்காரன், அவளுக்கு வேறு நினைவு பளிச்சிட்டது. 'என் கண் ணுக்கும் இன்னம் ஆறேழு வருஷம் போனா இது போல கண்ணாலம் ஆக வேணுமே!"
    அன்ன தானம் வழங்கப் பட்டது. ஏழைகளோடு வரிசையாக அவளும் நின்றாள். பிறகு என்ன தோன்றிய தோ, அங்கிருந்து நகர்ந்து விட்டாள். “நான் சாப்பிட்டு, உசிரோடிருந்து யாருக்கு என்ன ஆவப்போவுது ?... என் புள்ளையை இத்திணி வருசத் துக்கு அப்பாலேயா இனிக் கண்ணாலே காணப் போறேன் ? ... ஊரிலே ராசாங்கமாக் குடியும் குடித் தனமுமா இருக்க வேண்டிய நான் இப்பிடி நாயா அலையனும்னு எந்தலையிலே எழுதியிருக்கு. அங்கா ளம்மா! என்னை உங்கிட்டே அழைச்சுக்கிடு. எம்மவன் எங்கிருந்தாலும் அவனை நிறைஞ்ச ஆயுசுக்குக் காப்பாத்து."
  மஞ்சி விரட்டு நடந்து முடிந்த இடம் தென்பட்டது. நடந்தாள். 112                  அமுத வல்லி

__________________________________

   புதுக்குளத்துத் தென்கரை ஓரத்தில் வந்து நின்று வேர்வையை வழித்தெடுத்தாள் பொன்னரசி; சிறு குடல் பெருங்குடலைக் கவ்வியது; தலை சுற்றியது. பயம் உள்ளடங்கிய அந்தக் குளத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். ம்!,. இன் னிக்கு நடுச் சாமத்தோட எல்லாம் முடிஞ்சிடும்!'
   பிறந்த மண்ணுக்கு ஓடினாள் அவள் மனோரதப் பயணம். பெற்றவர்கள் மறைந்து போனார்களாம். கந்தசாமி குடியும் குடித்தனமுமாக ஊரில் இருக் கிறானாம்! பட்டணத்தில் நாட்டு வைத்தியர் நல்ல தம்பியை எதிர்பாராமல் சந்தித்த போது கிடைத்த விவரங்கள் இவை. 
     தேம்பிய நெஞ்சம் அவளுடைய 'விதி'யை நோக்கிக் கேட்டது: “இத்தனை காலமாக எத்தனையோ ஊரெல்லாம் சுத்தி அலுத்தேனே! எம் மகனை ஒருவாட்டியாச்சும் காட்டப்பிடாதா? ஒரு வாட்டி எங்கண்ணைக் கண்டுக்கிட்டா, நான் அப்பவே நெறைஞ்ச மனசோடே செத்திடுவேனே?...இந்த ஆசையாச்சும் பலிக்குமானுத் தான் அங்கங்கே வேலை வெட்டி செஞ்சு, கிடைச்ச சோத்துப் பறுக்கையைச் சாப்பிட்டு உசிரைக் காப்பாத் தினேன். ஆனா, என் ஆசை அவிஞ்சிருச்சு: இனி எங்கே என் கண்மணியை காணப்போறேன்? ஐயோ. நான் மாபாவி...!
  குளத்துக்குக் கீழ் இறக்கத்தில் ஓடிய சாலையில் நிழலடர்ந்த மரங்கள் தென்பட்டன. சறுக்குப்படி வழியாக அவள் இறங்கினாள். கால் சறுக்கியது. முதல் படியில் விழுந்த அவள் மறுபடிக்குப் புரண்டாள். பிறகு அப்படியே உருண்டு விழுந்து விட் டாள், பாவம்!              முத்துமாரி

"அம்மா!... அம்மா..!”

  பொன்னரசி விழிகளை விரித் தாள். ஆலமரத்தடியில் யாரோ சிறுவனின் மடியில் தலைசாய்ந்து கிடப்பதை உணர்ந்தாள். அவசரப்பட்டு எழ முயன்றாள். நெற்றி மேட்டிலிருந்து வேதனை குரல் தந் தது. எழுந்தமர்ந்தாலும் முதலில் தென்பட்டவை: பக்கத்தில்சிதறிக் கிடந்தரத்தத்துளிகள்: துடிக்கும் இதயத்தோடு அந்தப் பையனை ஏறிட்டு நோக்கினாள் வழிந்த கண்ணீருடன் அவன். "அம்மா' நீங்க பிழைச்சிட்டீங்க.. இனிப் பயமில்லை. இந்தாங்க... ஒரு மடக்கு காப்பித் தண்ணி குடியுங்க,’ என்று சொல்லிக் காப்பிக் குவளையை அவள் கரம் தொட்டு நீட்டினான்.
  பொன்னரசிக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டது. அவளுடைய பெற்ற வயிறு என்றுமே அடைந்திராத அமைதியைப் பெற்றது. மார்பகத் தில் பால் வெள்ளம் பாயத் துடிப்பது போலவும் உணரலானாள். இமை மூடாமல் அவனையே பார்த்தாள், பத்து அல்லது பதினோரு வயசான அச்சிறுவன் ராஜா மாதிரி இருந்தான். செம்மறியாட்டுக் கும்பல் காவிக் கோலம் திகழ அவன் பின்னே அணி வகுத்திருந்தது. அவனது நெற்றிப் பக்கம் கூர்ந்து நோக்கினாள். அந்த இடத்தில் பெரிய தழும்பு காணப்பட்டது. “ஆதி பிரமரே, இவனே தான் எம் மகனா-?”
   தான் மயங்கிச் சுருண்டு புரண்ட நிகழ்ச்சி அப்போது தான் பொன்னர சிக்கு விளங்கியது, அவள் அவன் கதையைக் கேட்டாள். 114                 அமுத வல்வி

__________________________________

  "அம்மா, நான் அனாதை. என்னைப் பெத்த ஆத்தா பிறந்த மேனியா என்னை காட்டிலே அனா தையா வீசிப் போட்டுப் பிட்டுப் போயிட்டாங்களாம்; வழியிலே கண்ட வங்க என்னை வளர்த்து ஆளாக்கினாங்க, யாரோ ஒருத்தன் ஆசைக் காட்டி எங்க அம்மாவை ஏமாத்திப்புட்டானாம்; அதினாலே தான் என் தாயார் என்னை அனாதை யாக்கிப் புட்டாங்க போலே!... என்னைப் பெத்தவளை என் தாயை ஒரு தடையாச்சும் கண்டாத்தான் என் ஆவி வேகும். ஆனா, ஈவிரக்கம் இல்லாம என்னை வீசிப்புட்டுப் போன ஆத்தாவுக்கு நல்ல தண்டனை கொடுக்கவும் கொடுப்பேன் ... என்னைப் பெத்தெடுத்த அம்மாவை ஏமாத்தின அந்த மனுசனை...ம் அப்பனை எப்போ கண்டாலும் அப்பவே கண்டந் துண்டமாச் சீவிப் போடுவேன், அவன் படம் எங்கிட்டே தான் இருக்கு; எங்க அம்மா படங்கூட வச்சிருக்கேன்: என்னை வளர்த்த வங்க கொடுத்திருக்காங்க!..."
  பையனின் கண் இமைகள் நனைந்து ஈரமாயின.
   அவனுக்குத் தெரியாமல் பொன் னரசி நேத்திரங்களைத் துடைத்துக் கொண்டாள். சிறுவனுக்குப் பக்கமாகக் கிடந்த முடிச்சிலிருந்து தலை நீட்டிய புகைப்படங்களை எடுத் தாள். ஆம் ; ஒன்று அவள் படம்; இன்னொன்று கந்தசாமியின் நிழலுரு, மறுபடியும் அவற்றை முடிச்சுக்குள் திணித்தாள்.
    கடவுளே, நீ ரொம்ப நல்ல சாமி என் ஆசை நிறைவேறிடுச்சு... இம்பிட்டு நாளா நான் பட்ட பாடு வீண் போகலை. என்வைரியை பழி வாங்கிறதுக்கு என் மகன் கிடைச்சுப்புட்டான்! ..., பூவை எஸ். ஆறுமுகம்          115

__________________________________

   "தம்பி, உன்னோட ஆத்தாவை நேரிலே கண்டா அவ பேரிலே ஒனக்கு ஆத்திரந்தான் வருமா?”
  “ஆமா; என் பேரிலே ரவை கூட ஈவிரக்கமில்லாம என்னை விட்டுப் போட்டுப் போன குற்றத்துக்கு அவங்க மேலே ஆத்திரம் தான் வரும்!”
  விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையில் பொன்னரசி தத்தளித்துக் கொண்டிருந்தாள் ; மறுவினாடி. பித்துப் பிடித்த மாதிரி கீழே கிடந்த பாறாங்கல்லில் மோதிக் கொண்டாள், ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது.
   சிறுவன் அவளுடைய தோளைப் பற்றித் தடுத்தான்.
  அதே சமயம் வேறொரு புதுக்குரல் கேட்டது "ஏம்மா, ஏம்மா!" என்று ஓடி வந்தான் மீசைக்காரன் ஒருவன். அருகில் ரேக்ளா வண்டி நின்றது.
   பொன்னரசி தலை நிமிர்ந்தாள்: அந்த மனிதனைப் பார்த்தாள். விழுங்கி விடுபவள் போல முறைத் துப் பார்த்தாள். புகை நெளிந்தது. முடிச்சில் ஒளிந்திருந்த கத்தி அவள் கைக்கு வந்தது.
  செம்மறியாடுகளை மேய்க்கும் பையன் ஒன்றும் புரியாமல் பரக்கப் பரக்க விழித்தான்.
  "தம்பி, இந்த ஆளு தான் உன் அப்பன்!" என்றாள் அவள், வெறியுடன்....
 "ஆ! அப்பிடியா...?"
  மீசைக்கார மனிதனை நோக்கிக் கைக் கம்பை வீசினான் சிறுவன். அவன் சுருண்டு விழுந்தான், நெற்றியிலிருந்து ஊற்றெடுத்த ரத்த வெள்ளம் பூமித் 116                   அமுதவல்லி

__________________________________

தாய்க்கு வைத்த குருதிக் குங்குமம் அச்சமுறத் துலங்கிக் கொண்டிருந்தது.

   "பொன்னரசி. என்னை மன்னிச்சிப்பிடு. இப்போதே என்னோட வந்திடு. நான் உன்னைக் காப்பாத்துறேன்... நம்ம மகனையும் கண்டு பிடிப்போம்...!” என்றான் அவன் - கந்தசாமி.
   பொன்னரசி கையிலிருத்த கத்தி மின்னியது. ரத்தக் காட்சியைக் கண்டதும் அவள் மனத்தில் புயல் நீங்கிய அமைதி கனிந்ததோ? கத்தி நழுவியது. பையனுடைய கையைப் பிடித்து அழைத்து வந்தாள் “பாவம்; மன்னிச்சிடு; அந்த ஆள் எக்கேடு கெடட்டும்" என்று வேண்டினாள் அவள்.
  புழுதி வழியே ரத்தத் துளிகள் சுவடு காட்டிக் கொண்டேயிருந்தன.
  “அப்பனைக் காட்டினிக; என் ஆத்தாவையும் காட்ட மாட்டிங்களா, அம்மா?" என்று விம்மிய பையன் அவளைப் பரிதாபம் இழையோடே நோக்கலுற்றான்.
 "தம்பி, பழிக்குப் பழி வாங்கத் தானே உன் அம்மாவை நீ இப்ப தேடுறே?...” .
  “ஊஹகும் அவங்களை மன்னிச்சிடுவேன்; அவங்க என் தாய்!". . .
  அடுத்த கணம் என்ன எண்ணினானோ, தன் முடிச்சிலிருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்வை யிட்டான் அவன்.
   “ஆத்தா...!”
  நெஞ்சில் பாய்ச்சிக் கொள்ள ஓங்கிய கத்தியைத் பிடுங்க முனைவதற்குள், செந்நிறம் பீறிடத் தலைப்பட்டது.  பூவை எஸ். ஆறுமுகம்         117

__________________________________

  “ஆத்தா!... உங்களை நான் சாகவிடவே மாட்டேன். நீங்க என்னை அனாதையா விட்டது பெரிய தப்பு தான். இருந்தாலும், பத்து மாசம் சுமந்து பெத்தெடுத்த தாயாச்சே நீங்க!... உங்களைத் தான் நிதமும் கையெடுத்துக் கும்பிட்டுக்கிட்டு வா ரேன். முத்துமாரி அம்மா, நீ தான் இனி எங்களுக்குத் துணை. இம்பிட்டு நாளைக்கப்பாலே ஆத்தாளும் மகனுமான எங்க ரெண்டு பேரையும் மட்டும் பிரிச்சுப் பிடாதே!...
        
      ‌‌
              *** 
"https://ta.wikisource.org/w/index.php?title=அமுதவல்லி/ஆத்தா&oldid=1663788" இலிருந்து மீள்விக்கப்பட்டது