அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பொறுக்கி எடுத்த மாணவர்கள்


(53) பொறுக்கி டுத்த மாணவர்கள்



பிரபல ஆசிரியர் ஜான் ரஸ்கின் நடத்தும் சொற்பொழிவு வகுப்புக்கு மாணவர்கள் பலர் வந்து கூடினார்கள்.

ஆனால், சொற்பொழிவை இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டிருப்பதாக அறிவிப்பு ஒட்டியிருந்தது. அதைப் பார்த்து விட்டு, மாணவர்கள் எல்லோரும் போய்விட்டனர்.

அடுத்த முறை, முன்னிலும் பாதி மாணவர்களே வந்து கூடினார்கள். அன்றும், இன்னொரு நாளைக்கு ஒத்திப் போடப்பட்டிருப்பதாக அறிவிப்பைக் கண்டு மாணவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

மூன்றாவது முறை, மிகச் சில மாணவர்களே வந்தனர்.

பொறுமையோ, உண்மையாக உழைப்பில் ஆர்வமோ இல்லாதவர்களை, தாங்களாகவே உற்சாகம் குன்றச் செய்வதற்காகவே அந்தப் பிரபல ஆசிரியர் இந்தத் தந்திரத்தைக் கடைபிடித்தார்.

அதன் பின்னர், எஞ்சிய மாணவர்களிடம், "வகுப்பை இப்பொழுது சலித்தாயிற்று. இனி, வேலையைத் தொடங்குவோம்” என்று கூறினார் அவர்.