அறிவியல் வினா விடை-வேதியியல்/உலோகக் கலவை
11. உலோகக் கலவை
1. உலோகக் கலவை என்றால் என்ன?
உலோகம் உலோகத்துடனோ உலோகம் மற்றொரு அலோகத்துடனோ சேர்ந்து உண்டாவது. எ-டு இன்வார், பித்தளை, வெண்கலம். 2. உலோகக் கலவையின் பயன்கள் யாவை?
1. கடினத்தன்மை வாய்ந்தது - சவரன்.
2. உருகு நிலை குறைவு - பற்றீயம், உருகிகள்.
3. மின்கடத்தும் திறன் குறைவு - ஜெர்மன் வெள்ளி.
3. உலோகக் கலவையின் பண்புகள் யாவை?
1. உறுதியாக இருப்பதால் நீடித்து உழைக்கும்.
2. விலை குறைவாக இருப்பதால் வாங்குவதற்கேற்றது.
3. உருகுநிலை குறைவாக இருப்பதால் வேலை செய்வதற்கு ஏற்றது.
4. எவர்சில்வர் என்றால் என்ன? பயன்கள் யாவை?
எஃகும் குரோமியம் நிக்கலும் சேர்ந்தது. சமையல் பாண்டம், கத்தி முதலியவை செய்ய.
5. மணி வெண்கலம் என்றால் என்ன? ஒரு வகை வெண்கலம். மணி வார்க்கப் பயன்படுவது. செம்பு, வெள்ளியம், துத்தநாகம், காரீயம் ஆகியவை கொண்டது.
6. ஜெர்மன் வெள்ளி என்பது என்ன? பயன்கள் யாவை?
நிக்கல், வெள்ளி, துத்தநாகம், செம்பு ஆகியவை சேர்ந்த உலோகக் கலவை. விலை குறைவான அணிகலன்களிலும் இரும்புத் தொழிலிலும் பயன்படுவது.
7. வெடிகுழல் உலோகம் என்றால் என்ன? துப்பாக்கி உலோகம். செம்பும், வெள்ளியமும் (91) துத்தநாகமும் (4%) சேர்ந்த கலவை. துப்பாக்கி செய்ய.
8. சாம்பல் உலோகக் கலவை என்றால் என்ன? நிலக்கரிக் கனற்சியில் துணை வினைப்பொருள்களில் ஒன்று. வார்ப்புத் தொழிற்சாலைகளின் போட்டித் திறனை உணர்த்துவதில் சிறந்த பங்கு வகிப்பது.
9. தீப்பொறி உலோகக் கலவைகள் யாவை? தேய்க்கும் பொழுது தீப்பொறிகளை உமிழ்பவை.
10. அச்சு உலோகம் என்றால் என்ன?
ஓர் உலோகக் கலவை. ஆண்டிமனி, வெள்ளியம் ஆகியவை குறிப்பிட்ட வீதத்தில் சேர்ந்தது. புத்தக எழுத்துக்களில் குறைவாகவும் சில்லறை எழுத்துகளில் அதிகமாகவும் இருக்கும்.
11. கறுக்கா எஃகு என்றால் என்ன? குரோமியம் சேர்ந்த எஃகு துருப்பிடிக்காது. வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுவது.
12. கோவாரின் பயன்கள் யாவை?
கோபால்டு, இரும்பு, நிக்கல் ஆகியவை சேர்ந்த ஓர் உலோகக் கலவை. வெப்பத் திறப்பிகளிலும், படிகப் பெருக்கிகளிலும் பயன்படுவது.
13. டியுராலுமின் என்றால் என்ன? இது இலேசான உலோகக் கலவை. வானூர்தி, உந்து வண்டிகள் பகுதிகள் செய்யப் பயன்படுவது.
14. இரும்பக உலோகக் கலவைகள் (பெரோ அலாய்ஸ் என்றால் என்ன?
இரும்பு உலோகக் கலவைகள். இரும்புத் தாதுவையும் உலோகத் தாதுவையும் சேர்த்து உருக்கிச் செய்யப்படு பவை. எ-டு. இரும்பக மாங்கனீஸ் இரும்பகச் சிலிகான் உலோகக் கலவை எஃகுகள் செய்யப் பயன்படுதல்.
15. வெண்கலம் என்றால் என்ன?
செம்பும் துத்தநாகமும் வெள்ளியமும் சேர்ந்த உலோகக் கலவை. சிலைகள், நாணயங்கள், சமையல் பாண்டங்கள் முதலியவை செய்யப் பயன்படுவது.
16. பித்தளை என்றால் என்ன?
3 பங்கு செம்பும், 1 பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை. சமையல் பாண்டங்கள், நாணயங்கள், சிலைகள் செய்யப் பயன்படுவது.
17. மிஷ் உலோகம் என்றால் என்ன? பயன்கள் யாவை?
உலோகக் கலவை. லாந்தனம், செரியம், டைட்டைமியம் ஆகியவை சேர்ந்த கலவை. வளி ஒளி ஏற்றிகள், மின்வாய்கள், துலக்கும் குண்டுகள் முதலியவற்றில் பயன்படுவது.
18. மோனல் உலோகம் என்றால் என்ன?
நிக்கலும் செம்பும் சேர்ந்த கலவை. காடித்தடை உண்டாக்கும் பொருள்கள் செய்ய. 19. மியு மெட்டல் என்றால் என்ன?
ஊடுருவும் தன்மை அதிகங் கொண்ட உலோகக் கலவை. நிக்கல், இரும்பு, செம்பு, மாங்கனீஸ் ஆகியவற்றைக் கொண்து. மின்மாற்றிகளின் உள்ளகங்களில் பயன்படுவது.
20. முன்ஸ் உலோகம் என்றால் என்ன?
முன்ற பங்கு செம்பும் இரண்டு பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை. ஆல்பா பித்தளையை விட வலுவானது. திருகுகள், மரைகள் செய்யப் பயன்படுவது. முன்ஸ் என்பவர் பெயரால் அமைத்தது.
21. லிபோவிட்ஸ் உலோகக் கலவை என்பது என்ன?
உருகக்கூடிய கலவை. பிஸ்மத், காரீயம், வெள்ளியம், காட்மியம் சேர்ந்தது.
22. பிரிட்டானியா உலோகம் என்றால் என்ன?
வெள்ளி நிற உலோகக் கலவை. வெள்ளியம், அண்டிமணி, செம்பு, காரீயம், துத்தநாகம் ஆகியவை சேர்ந்தது. மனையகப் பொருள்களிலும் குண்டுத் தாங்கிகளிலும் பயன்படுவது.
23. பாபிட் உலோகம் என்றால் என்ன?
ஓர் உலோகக் கலவை. அதிக அளவுக்கு வெள்ளியமும் அல்லது குறைந்த அளவுக்கு அண்டிமணியும் செம்பும் சேர்ந்தது.
24. இதன் சிறப்பென்ன?
1839இல் புனையைப்பட்ட முதல் உலோகக் கலவை. புனைந்தவர் பாபிட் அமெரிக்கப் புனைவாளர்.
25. அலுமினிய வெண்கலம் என்றால் என்ன?
செம்பும் அலுமினியமும் சேர்ந்த உலோகக் கலவை.
26. இதன் பயன்கள் யாவை?
சிலைகள், நாணயங்கள், சமையல் பாண்டங்கள் முதலியவை செய்யப் பயன்படுவது.
27. இன்வார் என்றால் என்ன?
நிக்கல் எஃகு வகை 3.5% நிக்கலும் சிறிது மாங்கனிசும் சேர்ந்தது. ஈடு செய்த ஊசல்களில் பயன்படுவது.
28. மாங்கனீஸ் வெண்கலம் என்றால் என்ன? செம்பும் துத்தநாகமும் சேர்ந்த கலவை. எஃகுகளில் பயன்படுவது. மாங்கனீஸ் எஃகு.
29. மக்னானின் என்றால் என்ன?
செம்பு, மாங்கனிஸ், நிக்கல் சேர்ந்த உலோகக் கலவை. மின்தடைச் சுருள்களில் பயன்படுவது.
30. ரோஸ் உலோகத்தின் அமைப்பும் பயனும் யாவை?
உருகக்கூடிய உலோகக் கலவை. பிஸ்மத், காரீயம், வெள்ளியம் சேர்ந்தது. தீப்பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுவது.
31. எலின்வார் என்றால் என்ன?
ஓர் உலோகக் கலவை. எஃகுவின் வாணிபப் பெயர். நிக்கலும் குரோமியமும் சேர்ந்தது. காடிகாரங்களுக்கு மயிரிழைச் சுருள்கள் செய்யப் பயன்படுவது.
32. டச்சு பொன் என்றால் என்ன?
உலோகக் கலவை. செம்பும் துத்தநாகமும் சேர்ந்தது. பொன்னுக்கு மாற்று.
33. உட் உலோகம் என்பது என்ன?
ஓர் உலோகக் கலவை. பிஸ்மத், வெள்ளியம் காட்மியம் சேர்ந்த கலவை. தீப்பாதுகாப்புச் சுருளில் பயன்படுவது.
34. பாஸ்பர் வெண்கலம் என்றால் என்ன?
ஓர் உலோகக் கலவை. இதில் செம்பு, வெள்ளியம், பாசுவரம் உள்ளன. பல்லிணைச் சக்கரங்களில் பயன்படுவது.