அறிவுக் கனிகள்/அன்பு

1. அன்பு
போப்


1. அன்பு என்பதைப் போல் பொய்யும் புலையும் நிறைந்த மொழி வேறெதுவும் கிடையாது.

இப்ஸன்

2.உலகத்தில் மக்களிடம் அன்பு கொள்பவனே உண்மையில் வாழ்பவன் ஆவான்.

அந்தோணி

3. துன்புறுவோர்க்கு இரங்குக. துன்புறுவோர்க்கு இன்புறுவோர் செலுத்தவேண்டிய கடன் அதுவே.

போப்

4. அன்பு மூலமே எதையும் அறிய இயலும். அன்பின்றிப் பார்ப்பவன் இருளில் கண்களை இடுக்கிக் கஷ்டப்பட்டுப் பார்க்க முயலுகிறவன்.

மேட்டர்லிங்க்

5. வியப்பு புகழும், அன்பு ஊமையாயிருக்கும்.

போர்ன்

6. உண்மையான மனிதன் யாரையும் துவேஷிப்பதில்லை.

நெப்போலியன்

ரஸ்கின்

7. பெருந்தகைமையைக் காண்பதிலோ, பிறர்க்கு அன்பு செய்வதிலோ ஆனந்தம் காண்பதே கருணையின் பூரண லட்சணம்.

ரஸ்கின்

8.அன்பு செய்பவர், பேருண்மைகளை உணர்ந்து உரைப்பவர். இவர்கள் அனைவரும் கவிஞர்களாவர். உண்மைகளில் எல்லாம் தலைசிறந்த உண்மை அன்பேயாகும்.

பெய்லி

9. இதயமே-அன்பே-பெரிய எண்ணங்களின் பிறப்பிடம்.

வாவனார்கூஸ்

10. அறிவை விலைக்கு வாங்க முடியும்; ஆனால், உணர்ச்சி-அன்பு-ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை.

ஜே. ஆர். லவல்

11. மாறுதல் கண்டவுடன் மாறும் அன்பு அன்பாகாது

ஷேக்ஸ்பியர்

12. அன்பும் நம்பிக்கையுமே ஆன்மாவின் தாய்ப் பால். அன்பும் நம்பிக்கையும் பெறாவிடில் ஆற்றல் முழுவதும் அழிந்துபோகும்.

ரஸ்கின்

13. ஆன்மாவின் பெருந்தன்மை என்பது எத்தனை சந்தர்ப்பங்களில் நாம் இரக்கம் காட்டுகிறோம் என்ற அளவைப் பொறுத்ததே.

பேக்கன்

14. அன்பு முக்கியமாக வளர்வது ஈகையிலேயே. நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ உள்ள ஆசையே அதன் சாரம் என்பது மட்டும் நிச்சயம்.

ரஸ்கின்

15. அன்புண்டு இரக்கமில்லை என்று பாசாங்கு செய்ய முடியுமா ? அன்பும் இரக்கமும் இரட்டைக் குழந்தைகள்.

ட்ரைடன்

16. மனித வாழ்வின் புனித பாகம் மறந்துபோன அருள் நிறைந்த சிறு செயல்களாகும்.

வோர்ட்ஸ்வொர்த்

17. ஜனங்களிடை இரக்கமும் சகோதர அனுதாபமுமே மனித வாழ்வில் பெறுவதற்காக முயலவேண்டிய பேருணர்ச்சிகளாம்.

மார்லி

18. அடக்கமும் அன்பும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும்.

ஜார்ஜ் எலியட்

19. நாம் அறியாதவரிடம் காட்டும் அன்பு, அறிந்தவரிடம் காட்டும் அன்பைப் போலவே, ஓர் அழியாத உணர்ச்சியாகும்.

செஸ்டர்டன்

30. பட்சமாயிருத்தல் என்பது எந்தக் காலத்தும் பழிவாங்குதலினும் பெருந்தகைமை உடையதே.

ஷேக்ஸ்பியர்

31. தெரிந்தே தவறு செய்தாலும் உன் சகோதிர மனுஷனின் தவறுகளை அன்போடு ஆராய்வாய். அதனிலும் அதிக அன்போடு உன் சகோதரி மனுஷியின் தவறுகளை ஆராய்வாய். நெறி பிறழ்வது மனித இயல்பே.

பர்ன்ஸ்

33. கண்டிக்க அறியாதவன் கருண காட்டவும் முடியாது


கார்லைல்

33. அன்பு செய்தும் அன்பு பெறாதிருப்பது துக்ககரமானதே. ஆனால், அன்பு செய்ய இயலாதிருப்பது அதனினும் அதிகத் துக்ககரமானது.

மேட்டர்லிங்க்

34. யாருக்கு நன்மை செய்கிறோமோ அவரை நேசிக்கிரறோம். யாருக்குத் தீமை செய்கிரறோமோ அவரை வெறுக்கிரறோம்.

டால்ஸ்டாய்

35. கும்பல் சங்கமன்று. அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள்தான்; பேச்சு வெறும் கிண்கிணி ஓசைதான்.

பேக்கன்

26. பிறர் நலம் கண்டு மகிழார், பிறர் துயர் கண்டு இளகார்! இவர் எல்லோரும் இறந்து படுக.

போப்


"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/அன்பு&oldid=999487" இலிருந்து மீள்விக்கப்பட்டது