இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community
பொ. திருகூடசுந்தரம், எம். ஏ. பி. எல். சென்னைப் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றவர்
கலைக் களஞ்சியம் கூட்டாசிரியர்
முகவுரை சென்னை அரசாங்கக் கல்வி மந்திரியா யிருந்த தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார், பி.ஏ., பி.ல்., எம்.பி.
காந்தி நிலையம் தியாகராய நகர் — சென்னை-17 விலை ரூ. 3.00
அறுபத்தெட்டுப் படங்கள் சேர்ந்த
உரிமை
இரண்டாம் பதிப்பு 1952
காந்தி நிலையத்தது
மூன்றாம் பதிப்பு 1959
ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம், எம். ஏ. பி. எல்.
1891-ம் ஆண்டில் பிறந்தவர். 5-வது பாரம் முதலே முதற் பரிசு பெற்றர். எம். ஏ.-இல் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்றார். 1921-ல் வக்கீல் வேலையை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். திருநெல்வேலி ஜில்லாவிலும் செட்டி நாட்டிலும் காந்திய இயக்கத்தை வேரூன்றச் செய்தார். காந்தியடிகளின் கட்டுரைகளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர். திருநெல்வேலி நகர சபையில் அங்கத்தினராகவும், தேவகோட்டை நகர சபையில் வைஸ் சேர்மனாகவும் இருந்து சமூக சேவை செய்தார். தீண்டாமை விலக்குக்குந் தீவிரமாக உழைத்தார். அவரும் அவர் மனைவியாரும் நாகர்கோவிலில் தீண்டாமை விலக்குச் சங்கம் நிறுவி ஆலயப் பிரவேசத்துக்கு அடிகோலினர். தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பாண்டித்திய முடையவர். சென்னை செனட் சபையில் அங்கத்தினராக இருந்தார். தமிழில் சொந்தமாக பதினைந்து நூல்களும் மொழிபெயர்ப்பாகப் பத்து நூல்களும் எழுதியுள்ளார். அவை அறிவும் இன்பமும் பெற விரும்புவோர் படிக்கவேண்டிய நூல்கள். சென்னை சர்க்கார் மூன்று நூல்களுக்குப் பரிசு அளித்துள்ளார். சிறந்த கட்டுரையாளர். விஞ்ஞானம் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்குமாறு எழுதக் கூடியவர். இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர். எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையு முடையவர்.
தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர்
திரு. தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார்,
பி. ஏ., பி. எல். எம். பி.
முகவுரை
உலகில் செல்வம் நிலை நிற்பதில்லை. அதிகாரமும் இதர மேம்பாடுகளும் நம்முடன் அழிந்து வருகின்றன. ஆனல் உயர்ந்தோர் கூறும் உறுதி மொழிகள் பல ஆயிர ஆண்டுகளுக்குப் பின்னும், என்றும் அழியாதனவாய், பின்வரும் மக்கள் அனைவருக்கும் சுடர் விளக்காய் இருந்து வருகின்றன. இவைகளே மனித வர்க்கத்தின் இணையற்ற பொக்கிஷங்களாகும். கோடிக்கணக்கான மக்களுக்கு இவை அறிவும் ஆற்றலும் கொடுத்து, அவர்கள் மனதை மலரச் செய்கின்றன.
ஸ்ரீ திருகூடசுந்தரம் இத்தகைய சிறந்த மொழிகளைத் திரட்டி தமிழ் மக்களுக்கு இப் புத்தகத்தின் மூலம் வழங்கி யிருக்கிறார். அவருக்கு நம் நன்றி உரியது. இப் புத்தகத்தைப் பயின்று பலரும் பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.