54. இசை

878. இசையுணர்ச்சி இல்லாதவனும், இன்னிசையால் இதயம் இளகாதவனும் துரோகம், தந்திரம், திருட்டு முதலியன செய்யத் தகுந்தவர்.

ஷேக்ஸ்பியர்



879.அளவு கடந்து அனுபவித்தாலும் சன்மார்க்க உணர்ச்சிக்கும் சமய உணர்ச்சிக்கும் கேடு உண்டாக்காத புலனுகர்ச்சி இசையொன்றே.

அடிஸன்

880.அழகான உடையும் சத்தான உணவும் நல்ல இசையும் வாழ்வின் ஊற்றாகவும் அறத்தின் சாதனமாகவும் ஆக்கப் பெற்றவை. ஆனால் சாத்தான் அவற்றைக் குற்றம், அலங்கோலம், மரணம் ஆகியவற்றின் சாதனங்களாகச் செய்துவிடுகிறான்.

ரஸ்கின்

881.இசை மக்கள் அறிந்த மகத்தான நன்மை. உலகில் காணும் சொர்க்கம் முழுவதும் அதுவே.

அடிஸன்

882.மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் பொது உடைமையாகவுள்ள கலை இசையே.

ரிக்டர்

883.இசையே ஏழைகளின் கலா சொர்க்கம்.

-எமர்ஸன்

884.இசையே! ஏதேதோ பேசுகிறாய். இதுவரை நான் கண்டதுமில்லை, இனிமேல் காணப்போவதுமில்லை.

ரிக்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/இசை&oldid=1000152" இலிருந்து மீள்விக்கப்பட்டது