அறிவுக் கனிகள்/துறவு

19. துறவு

401.இந்த உலகில் மூன்று விதத் துறவுகள்:—அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு; பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே.

ரஸ்கின்

402.எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை. ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை.

பார்க்கர்

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/துறவு&oldid=999995" இலிருந்து மீள்விக்கப்பட்டது