ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/G
G | |
g-factor | g காரணி, பொது ஆற்றல் |
gadget | இயந்திரப் பகுதி |
gain | ஆதாயம், வருவாய் |
gallery | படி மேடை |
galvanometer, psycho | உள-மின்னோட்ட மானி |
games | விளையாட்டு (கள்) |
gamete | பாலணு |
gang | கூட்டாளிக் குழு |
-spirit | கூட்டாளி உணர்ச்சி |
ganglion | நரம்பு முடிச்சு, நரம்பணு முடிச்சு |
gangrene | ஊன் அழுகல் |
gardening | தோட்டம் போடுதல் |
Gary method | கேரி முறை |
gastrites | இரைப்பை அழற்சி |
gate | வாயில் |
gateway | வாயில் வழி |
gathering | கூட்டம், திரட்சி |
gauge | மதிப்பிடு |
gazette | அரசியற் பத்திரிகை, கெசட்டு |
gender | பால், பாற் பாகுபாடு |
gene | உயிர்மின்னு |
genealogy | மரபு முறை, குல மரபுக் கொடி |
general ability | பொது ஆற்றல் |
-practice | பெரு வழக்கு |
- psychology | பொது உள நூல் |
generalization | பொதுமைப்பாடு, பொது விதி காண்டல் |
generation | தோற்றுதல், பிறப்பித்தல், தலை முறை |
genes | உயிர் மின்னுக்கள், வழியணுக்கள் |
genetic method | வளர்ச்சி முறை, தோற்ற முறை, பிறப்பியல் முறை |
genetics | உற்பத்தி இயல், பிறப்பியல் |
genial | மகிழ்ச்சியான, உகந்த |
genital | பிறப்புக்குரிய |
genitals | பிறப்புறுப்புக்கள் |
genius | மேதை |
gentleman | பிரபு, பண்பாளன் |
genuine | உண்மையான |
genus | தொகுதி, பேரினம், பிரிவு, சாதி |
geo-centric | நிலமைய, பூ-மைய |
geography | தரையியல், நிலவியல், பூகோளம் |
geological map | நில உட்கூற்றுப் படம் |
geology | நில உட் கூற்றியல் |
geometrical aptitude | வடிவ கணித நாட்டம் |
-illusion | வடிவ கணிதத் திரிபுக் காட்சி |
geometrical mean | வடிவ கணித இடை |
geometry | வடிவ கணிதம், சியோமதி |
demonstrative | மெய்ப்பித்தல் வடிவ கணிதம் |
intuitive | உள்ளுணர்வு வடிவ கணிதம் |
plane | சமதள வடிவ கணிதம் |
practical | செயல் முறை வடிவ கணிதம் |
solid | கன உருவ வடிவ கணிதம் |
germ | முளை, கரு, நோய் நுண்மம் |
germ-cell | கரு—உயிரறை |
germinal | தோற்ற நிலையிலுள்ள, முதற்சூல் (நிலை), முளை- |
gestalt | முழு நிலைக் காட்சி, ஒருப்பாட்டு வடிவம், கெஃச்டால்ட் |
gesture | சைகை |
get-up | அமைப்பு |
giant | அரக்கர், சூரர், பேருருவினர் |
giant-stride | அரக்க எட்டு |
giddiness | மயக்கம், தலைச் சுற்று |
gift | கொடை, இயற்கை மீத்திறம் |
gifted | மீத்திறம் பெற்ற, மீத்திற—, இயற்கைத் திறன் மிக்க |
giganticism | பேருருவம் |
girl guides | சாரணியர், பெண் சாரணர் |
gist | சாரம், சுருக்கம் |
gladiatoral arena | சாப் போரரங்கு |
gland | சுரப்பி |
glare | கண் கூசுதல், கனல் வெப்பு |
glass | பளிங்கு, கண்ணாடி |
glazed | மெருகிட்ட, பளபளப்பான |
glittering generalities | பகட்டுப் பொதுமைகள் |
globe | கோளம், உருண்டை |
physical | இயற்கைக் கோளம் |
slate | கற்பலகைக் கோளம் |
gloom | இருள், மன வருத்தம் |
glossary | அருஞ்சொல் அகராதி |
glottis | உள்நா |
glow | ஒளிர், பிறங்கு |
glutton | பெருந் தீனிக்காரன் |
glycogen | களைக்கோசன் |
goal | இலக்கு |
goal-seeking | இலக்கு நாடல் |
goal-set | எல்லை, நெருங்கு திட்டம் |
gonad | விரை |
good | (N) நலம் |
good bearing | எடுப்பாய்த் தோன்றல் |
gossip | வம்பளப்பு |
governing board | ஆட்சிக் குழு |
government | அரசாங்கம் |
gradation | படி முறை, படிக் கிரமம் |
grade | படிமுறைப் படுத்து; (n)படி |
grade norm | படித்தரம் |
gradient | சாய்வலகு |
gradual | படிப்படியான |
graduate | அளவு குறி |
graft | ஒட்ட வை |
grammar | இலக்கணம் |
grant | கொடை, மானியம் |
graph | வரைபடம் |
bar | கட்டைஉருவ வரைபடம் |
circle | வட்ட வரைபடம் |
line | கோட்டு வரைபடம் |
straight line | நேர்கோட்டு வரைபடம் |
graphic | விளக்கமான |
graphic language | பட மொழி |
graphical method | வரைபட முறை |
grapple | போராடு |
grasp | பற்று, புரிந்து கொள், பிடிப்பு |
grasping reflex | பிடிப்பு மறி வினை, பற்று மறி வினை |
gravitate | சரிந்து செல்லல் |
greatness | பெருமை |
Grecian | கிரேக்க |
gregarious instinct | குழுவூக்கம் |
grey matter | (மூளையின்) சாம்பற் பகுதி |
grief | துயரம் |
grind | வருத்திப் படி |
grinders | அரைவைப் பற்கள் |
grip | இறுகப் பிடி, பிடிப்பு |
grit | மனவுறுதி |
groove | பள்ளம், தடம் |
ground | ஆதாரம், பின்னணி (p) |
group | குழு, கூட்டம், தொகுதி |
controlled | கட்டுப்படுத்திய தொகுதி |
experimental | செய் காட்சித் தொகுதி |
-factor | தொகுதிக் காரணிகள் |
-test | தொகுதிச் செய் காட்சி |
work | குழுச் செயல்கள் |
growth | வளர்ச்சி |
growth curve | வளர்ச்சிப் பாதை |
guarantee | உத்தரவாதம் |
guardian | பாதுகாப்பாளர், கார்டியன் |
guess | ஊகி, குத்து மதிப்பீடு |
guidance | வழி காட்டல் |
guidance outlines | உதவிக் குறிப்புகள் |
guide | வழி காட்டு, வழி காட்டி |
guild | தொழிற் குழு, தொழிற் சங்கம் |
guilt-complex | குற்றச் சிக்கல் |
gustatory | சுவை (சார்) |
gusto | உவப்பு |
guttural | மிடற்று |
gymnasium | உடற் பயிற்சி நிலையம் |
gymnastics | உடற் பயிற்சி, உடல் தனிப் பயிற்சி |