ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/H

H
habit பழக்கம்
habitat வாழ்விடம்
habitation உறைதல், உறையுள்
habitual பழக்கமான, வழக்கமான பழக்க
habituate பழக்கப்படுத்து
hachures மலைக் குறிக் கோடுகள்
haemoglobin குருதிச் செங்கூறு
haemorrhage குருதிப் போக்கு, இரத்த ஒழுக்கு
hair மயிர், முடி
half அரை, பாதி
half-baked அரை வேக்காடான
hall மண்டபம்
hallucination இல்பொருட் காட்சி, பொய்க் காட்சி
halo-effect ஒளி வட்ட விளைவு, பரி வேட விளைவு
halt நில்
hammer சுத்தி
hammer throw சம்மட்டி எறிதல்
handedness, left இடக்கைப் பழக்கம்
handicap குறைபாடு, தடை
handicapped, the குறையினர்
handicraft கைத்-தொழில், கை வேலை
handle கைப்பிடி
hand walk கைந்நடை
hand writing scale கையெழுத்து அளவு கோல்
haphazard ஒழுங்கற்ற
happening நிகழ்ச்சி
happy மகிழ்ச்சியான
harden கடினப்படுத்து, திடப்படுத்து
hardihood உறுதி
hare lip மூளி உதடு
harmonic mean இசை இடை
harmonious இசைந்த
harmony இசைவு, ஒத்திகை
harness சேணம் கட்டு, ஆற்றுப் படுத்து
hasten விரைந்து செல்
hatch அடை கா, குஞ்சு பொரி
hate வெறுப்பு
havoc பேரழிவு
hazard இடர்,
head தலை, தலைவர், தலைப்பு
head, heart and hand அறிவு, அன்பு, ஆக்கம்
heading தலைப்பு
headmaster தலைமை ஆசிரியர்
headmistress தலைமை ஆசிரியை
head stand தலை கீழாய் நிற்றல், சிரசாசனம்
head strong முரட்டுப் பிடிவாதமுள்ள
heal குணமாகு
health சுகம், உடல் நலம்
-care சுகம் பேணல்

-education சுகக் கல்வி
-examination சுக ஆய்வு
-habits சுகப் பழக்கங்கள்
-practice சுகப் பயிற்சி
-programmes சுகத் திட்டங்கள்
-projects சுகச் செயல் திட்டங்கள்
-services சுகத் தொண்டு முறைகள்
-instruction சுக போதனை
healthy சுகமான
heap குவியல், குவி
hearing கேட்டல்
heart நெஞ்சம், இதயம்
heat spots சூடறி பகுதி
heat stroke வெயில் அதிர்ச்சி
heavy பளுவான
hedonism இன்பக் கொள்கை
heed கவனி
heel குதி கால்
height weight records உயர எடைப் பதிவுகள்
heirship மரபுரிமை
hemisphere அரையுருண்டை, பாதி உலகம்
herd மந்தை, கூட்டம்
herd instinct கூட்டவூக்கம்
hereditary மரபாக, வழி வழியாக
heredity மரபு நிலை, பாரம்பரியம், வழி முறை
hereditary மரபு நிலைப் பண்புகள்
heritage மரபுரிமை
hermit துறவி
hero வீரன், தலைவன்
heroic வீரமான
heroine தலைவி
hero worship வீர வணக்கம்
hesitation தயக்கம்
heterodox எதிர்க் கருத்துள்ள
hetero genous பல படித்தான, கலப்பான
hetero sexual எதிர்ப்பால்
heurism ஆராய்ந்து கண்டறிதல்
heuristic method கண்டறி முறை, ஆராய் முறை
hexagon அறுகோணம்
hiatus இடைவெளி, பிளவு
hibernation மாரி உறக்கம், குளிர் கால ஒடுக்கம்
hidden மறைந்த
hide and seek ஒளிந்து விளையாடல்
hideous கோரமான
hierarchy படி மரபு, தரவாரி அதிகார முறை
hieroglyphic புரியாக் குறியீடுகள்
highest common factor உத்தம பொதுக் காரணி, மீப்பொதுக் காரணி
high professional மீஉயர் தொழில்
hiking நீடுலா
hind brain பின் மூளை
hindrance தடை, தொந்தரை
hind sight பிற்காட்சி
Hinduism இந்து மதம்
hint குறிப்பு, சைகை
hip இடுப்பு
hire கூலி, வாடகை
hiss சீறு, ‘உஃச்’ எனல்
histogram செவ்வக உருவப் படம்
histology உடலாக்கவியல்
historical வரலாற்று
history வரலாறு
historiography வரலாறு எழுதும் வகை
histrionic நாடக, நடிக்கும்
hit அடி, நற்பேறு, சிக்கு
hitch சிக்கல், மாட்டு
hoard திரட்டி வை
hoary மிக முதிய, பழமைப்பட்ட
hoax ஏமாற்று, மோசடி
hobby விருப்பச் செயல், பற்றாட்டு
hockey ஃஆக்கி, வளை தடிப் பந்து
hold பிடிப்பு
hole துளை
holiday ஓய்வு நாள், விடுமுறை நாள்
holiness திருத் தூய்மை
hollow உட்குழிவான, வெறுமையான
homage கீழடக்கம், வணக்கம், வழிபாடு
home வீடு
home study வீட்டுப்படிப்பு
home work வீட்டு வேலை
Homeric ஃஓமரிக்க

home rule தன்னாட்சி
homicide மன்கொலை
homogeneous ஒரு சீரான, ஒரு தன்மையான
homo sapiens மனித இனம்
honesty நேர்மை, நாணயம், உண்மை
honorarium மதிப்பூதியம்
honorary மதிப்பியலான
honorific மதிப்புக்குரிய
honour நன்மதிப்பு
hook கொக்கி, கொளுவி
hoop race வளைய ஓட்டம்
hop, stop and jump தத்தி எட்டித் தாண்டல், துள்ளி அடியிட்டுத் தாண்டல்
hope நம்பிக்கை, ஆர்வம்
horizon அடி வானம்
horizontal குறுக்கான
horizontal equivalent இடைக் கோட்டுச் சமம்; குறுக்குக் கோட்டுச் சமம்
horme உயிர் ஆற்றல், உயிர் உந்தல், ஃஓர்மி
hormic school உயிர்ச் சக்தி நெறி
hormone உட்சுரப்பி நீர்
horror கோரம்
horticulture தோட்டக் கலை
hospital மருத்துவச் சாலை
hospitality வேளாண்மை, விருந்தோம்பல்
hostel மாணவர் விடுதி
hostility பகைமை
hour மணி, நேரம்
house வீடு, குடில், இல்லம்
house system இல்ல முறை, குடில் முறை
hue வண்ணம், நிறம்
hum முணங்கு, முரல்
human மனித, மனிதத் தன்மையுடைய
human ball ஆட்பந்து
human relationship மனிதத் தொடர்புகள், மனித உறவுகள்
human wheel ஆள் உருளை
humane இரக்கமுள்ள
humanism மனித ஏற்றக் கொள்கை
humanistic realism மனித ஏற்ற உண்மைக் கொள்கை
humanitarian அன்புப் பணி சார்ந்த(வர்)
humanities மக்களியல் நூல்கள்
humanity மனிதத் தன்மை, அருள், அன்பு, மனித வகுப்பு
humbug சாலக்காரன்
humility தாழ்மை
humour, aqueous முன்-கண்-நீர்
sense of நகைச்சுவை
vitreous பின்-கண்-நீர்
humus இலை மக்கு
hunger பசி
hunting வேட்டையாடல்
hurdles தடைப் பந்தயம், தடை தாண்டோட்டம்
hurl வீசியெறி, வீச்சு
hurry பரபரப்பு, அவசரப்படு
hurt புண்படுத்து, புண்
hybrid கலப்பு இனம்
hydrostatics நீர்ம நிலையியல்
hydrotherapy நீர்ச் சிகிச்சை
hygiene உடல் நலவியல், சுகாதாரம்
mental மனச் சுகாதாரம்
school பள்ளிச் சுகாதாரம்
hymn துதிப் பாடல், பாசுரம்
hyperbola நீள் வட்டம்
hyperbole புனைந்துரை, உயர்வு நவிற்சி
hypercritical
hyphen இணைப்புக் குறி
hypnosis அறி துயில், மன வசியத் துயில் நிலை
hypnotism அறி துயிற் கலை
hypochondria
hypocrisy பாசாங்கு, கபடம்
hypotenuse நெடுங்கை வரை
hypothalamus ஃஐப்போத்தாலமஃசு
hypothesis கருது கோள், கற்பிதக் கொள்கை
barren பயனற்ற, மலட்டுக் கருது கோள்
contradictory முரண்படு கருது கோள்

false பொய்க் கருதுகோள்
fruitful பயன் தரு கருதுகோள்
hysteria வலிப்பு நோய்