இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்/எண்ணக் களஞ்சியம்


இரவீந்தரநாததாகுர்
எண்ணக் களஞ்சியம்

ன் காதலன் முன்பாக விரிந்து பரந்த தனது முகத்திரையை விலக்கிக் கொள்கிறது உலகம். அது அழிவற்ற ஒரு முத்தம் போல, ஒரு பாட்டைப் போன்று சிறியதாக ஆகிவிடுகிறது. - ப.ப

ளியின் குழந்தைகளே மாந்தர்கள். தங்களைத் தாங்களே நன்கு அறியும் பொழுது, தாங்கள் அழியாநிலை பெற்றவர்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள். - ஆ

மைதியாகிய கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் மாறி மாறி எழும் நுரைபோன்றது உலகம். - மி.மி

முடிவற்ற உலகங்களின் கடற்கரையிலே குழந்தைகள் கூடுகின்றன. - வ.பி

கானகத்தில் அலைந்து திரியும் பறவையாகிற எனது நெஞ்சம் விண்ணாகிய உன் கண்களைக் கண்டு விட்டது. தனித்து நிற்கிற அந்த விண்ணை நோக்கி நான் மேலும் மேலும் உயரே செல்வேனாக.

- -தோட்

ளவற்றது. தனது எல்லை என்பதை என்று மாந்தன் உணர்கிறானோ, என்று அவன் தெய்வீக நிலையை அடைகி றானோ, அந்த இறை உணர்வே அவனுள் உறைகிற படைப்பாளி. - ஆ

சை களைப்புற்றிருக்கும் அந்தக் கங்குலில் கடலின் முணு முணுப்பு விண்ணை நிறைக்கிறது. அன்பு வழிபாடாக உருவெடுப்பதும் அந்த நேரத்தில் தான். - எ

ல்லையற்ற வானகம் மேலே அசைவற்று இருக்கிறது. முடிவற்ற உலகங்களின் கடற்கரையிலே கூச்சலிட்டுக் கொண்டும் மகிழ்ச்சிக் கூத்தாடிக் கொண்டும் குழந்தைகள் கூடுகின்றன. - வ.பி

ன் நெஞ்சத்தை நீ வருடி விடுகிறாய், அதன் ஆழ் பொருளை உணர்த்திட என் தனிமைக்கு நிழலளிக்கிறது இன்புற்றிருக்கும் விண்ணகம். - ஆ

முழுமையான வைகறைப் பொழுது அருகில் நெருங்கி வருகிறது. அந்த நேரத்தில் இதர உயிர்களுடன் உனது உயிர் ஒன்றிவிடுகிறது. முடிவில் உன் குறிக்கோளையும் நீ புரிந்து கொள்கிறாய். - க.கொ

ருள் படர்ந்திருக்கும் சந்துகளிலும் நம்பிக்கை ஒளியை உறுதி செய்வது இறைவனால் மட்டுமே இயலும். - நி

சிரிப்புடன் பொங்கி எழுகிறது கடல். மென்மையான ஒளியுடன் முறுவலிக்கிறது கடற்கரை. சேயின் தொட்டிலை ஆட்டும் தாய்போல இருக்கும் அலைகள் குழந்தையின் செவிகளில் விழும்படிப் பொருளற்ற தாலாட்டைப் பாடுகின்றன. குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுகிறது கடல்; வெளிறிய முறுவல் பூக்கிறது கடற்கரை! - வ.பி

ருப்பையிலிருந்து வெளியேறிய பின்னர்தான் குழந்தை தாய் முகம் காண்கிறது. உன்னிடமிருந்து நான் பிரியும்போதுதான் உன் முகத்தை நான் எளிதில் காண முடியும். - த.கெ

னத்தின் கிளர்ச்சியற்ற இருண்ட குகைகளில், பகலில் பயணிகள் விட்டுச் சென்ற சிதறல்களைக் கொண்டு மனக் கனவுகள் தங்களின் கூடுகளைக் கட்டிக் கொள்கின்றன. - மின்

ன்னை நெருங்கி நெருங்கி அவன் வருவதை நான் உணர்கிறேன்; என் நெஞ்சம் மகிழ்ச்சியினால் துள்ளுகிறது. - அஞ்

தல் பரிசு நாணமடைகிறது, தன் பெயரை அது சொல்வதேயில்லை, புழுதியுனூடே மகிழ்ச்சி அதிர்வைப் பரப்பியவாறே நிழலின் குறுக்கும் நெடுக்குமாகப் பறந்துதிரிகிறது- - கா.ப

பாதையே இல்லா வானத்திலே சூறைக்காற்று அலைந்து திரிகிறது; சுவடு தெரியாதக் கடலிலே கப்பல்கள் மோதியுடைகின்றன. காலன் உலா வருகிறான்; குழந்தைகள் விளையாடுகின்றன. - ச.பி

சும்புல் தரையிலிருந்து கிளர்த்தெழும் மலர் கண்ணுக்கு எத்தனை அருகில் உள்ளதோ, அதைப் போன்றே அவள் என் நெஞ்சத்தின் அருகில் இருக்கிறான். - கா.ப

காணிக்கைகள் கொண்டு இறைவனை நெருங்கும் பொழுது, உண்மையிலேயே நாம் அவனைச் சந்திக்கிறோம். வரங்களை வேண்டிச் செல்லும் பொழுது, அவ்வாறில்லை. - எ.எ

குழந்தாய், அரசன் உன்னை நேசிக்கிறான். உன்னைக் காண அவனே வந்து கொண்டிருக்கிறான். - அறவே

இந்தப் புல், இப் புழுதி, அந்த விண்மீன்கள், ஞாயிறு, திங்கள் இவற்றின் மறைவில் நிற்கும் நீ ஓவியமா? வெறும் ஓவியமா? - நூ.பா

அவ்வப்பொழுது உனது உயர்ந்த கேட்போர் அவையிலிருந்து கீழிறங்கி வா. இன்ப துன்பங்களுக்கிடையே வாழ்ந்து பார். என் நெஞ்சத்தைத் தொடுமாறு இசை பொழிவாய். - படை

என் தலைவா,தந்திகள் மீட்டப்படும்போது அதிகமாக வலி ஏற்படுகிறது.

இசைக்கத் தொடங்கு; என் வலியை மறந்திருப் பேனாக. கருணையற்ற இந்த நாள்களில் உன் உள்ளத்தில் நுகர்ந்ததை நான் அதில் உணர்வேனாக, - க.கொ

பாப்பாவுக்குத் தெரிந்த அறிவுச் சொற்கள் எத்தனையோ! எனினும் அவற்றின் பொருளை அறியக் கூடியவர் இவ்வுலகில் மிகச் சிலர் தான்!

- வ.பி

காலைப் பொழுதில் ஒளியாகிய தன் உள்ளத்தை உலகம் திறந்து வைத்துள்ளது. வெளியே புறப்பட்டு, வருவாய் என் உள்ளமே. அன்புடன் அதைச் சந்திப்பாயாக. - ப.ப


மனித உலகில் சிறப்பானவை யாவற்றையும் இறைவனிடத்தில் மனிதன் வைத்துள்ள நம்பிக்கை எழுப்பியுள்ளது. - படை

திடீரென எவ்வாறு ஏன் நெஞ்சம் தன் வாயில்களைத் திறந்து வைத்துள்ளது? எனக்குப் புரியவில்லை. - நினை

அன்பிற்குரியவளே, உன்னை நான் விரும்புகிறேன். என் அன்பே என்னை மன்னித்து விடு. வழிதவறிய பறவையின் நிலையில், நான் இருக்கிறேன். - தோட்

நீரோடையின் முணுமுணுப்பைப் போன்று, என் அன்புக்குரியவளுடன் எனது பாடல்கள் ஒன்றிப்போயுள்ளன. - கா.ப

என் தலைவனே, உனது பேச்சு எளிமையானது, ஆனால் உன்னை பற்றிப் பேசுகிறவர்களின் பேச்சு அப்படி யில்லை.

- க.கா


என் குழந்தையின் தனி உலகத்துக்கு நடுவில், அமைதி நிலவும் ஒரு சிறுமூலை கிடைத்தால் கூடப் போதும்; அவ்வளவு ஆர்வம் எனக்கு: - வ்.பி.


சுமையாயிருக்குமாகில் கொடையாளிகளின் பட்டியலிலிருந்து. என் பெயரை நீக்கி விடுவாய். ஆனால் என் பாடலையன்று. - - மின்


களைத்துள்ள உறுப்புகளுக்குத் தூக்கம் போன்று அவள் எனக்கு இனியவள். - கா.ப

என் நண்பனே, எனது அன்பு என்றுமே உனக்கு சுமையாயிருந்து விடக்கூடாது. அது பலனளிப்பது என்று புரிந்து கொள். - மின்


மனிதன் குழந்தையாகவே பிறக்கிறான். வளர்ச்சியின் ஆற்றலே அவனது ஆற்றல். -ப.ப

என் அன்பே, தோட்டத்தில் என் கூட உலாவிட வா. உன் கண்ணில் படுவதற்காகத் துடித்துக் கொண்டிருக்கும் ஒளி வீசும் மலர்களைக் கடந்து செல்வாய். - கா.ப


இருளின் நுழைவாயில் முன்னர் பகல் தன் யாழினை மீட்டுகிறது. மறைவதாயிருந்தாலும் முதலில் தோன்று வதைக் கண்டே பகல் மனநிறைவு அடைகிறது. - மின்


ஒவ்வொரு விதையிலும் உயிர்த்தன்மை இருப்பது போல, இறைவன் என்னுள் இருக்கிறான், உன்னிடமும் இருக்கிறான். - க.பா


அவள் மட்டும் என்னுடையவளாய் இருந்து விட்டால், இவ் உலகின் மிகச் சிறிய மூலையிலும் கூட நான் மனநிறைவுடன் இருப்பேன். - கா.ப


என் விருப்புகள் பித்தானவை.

இறைவா, உனது பாடல்கள் இசைக்கப்படும் பொழுது, அவை உரக்கக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றன. உனது பாடங்களைக் கேட்க மட்டும் என்னை அனுமதிப்பாயாக. - ப.ப


பலர் பேருலகமாகக் காண்பதை என்னிடமுள்ள இந்த ஒன்றே நன்கு அறிந்து வைத்துள்ளது. - படை

என் அன்புக்குரியவன் எனது நெஞ்சத்திலேயே வாழ்கிறான். அதனால் தான் அவனை நான் எங்கும் காண்கிறேன்.

- கி.ஆ


கடலருகில் தோட்டத்தில், நெருங்கி வரும் கோடைக் காலத்தில் அன்பு மலருமாக. - கா.பா


பேரண்டத்தின் அடி ஆழத்திலிருந்து கிளம்பிடும் எதிரொலி நம்மிடம் அன்பு செலுத்துபவனின் முகத்திலிருந்து நமது நெஞ்சத்தில் எதிரொலிக்கிறது. - நினை


மிகச் சிறந்ததை நான் தேர்ந்தெடுக்க இயலாது. மிகச் சிறந்தது எதுவோ அது என்னைத் தேர்ந்தெடுக்கிறது. - ப.ப


தன்னைக் கடந்த வாழ்க்கையில்தான் மனிதன் உண்மையில் வாழ்கிறான். அறிந்திறாத ஆண்டைக்காக அவன் உழைக்கிறான், உலகில் பிறந்திராதவர்களுக்காக சேமித்து வைக்கிறான். - எ.எ


எவனொருவனின் பேச்சு தூய்மையாயிருக்கிறதோ, எவனொருவன் செருக்கையும், தற்பெருமையையும் விட்டொழித்திருக்கிறானோ அத்தகையவன் உண்மையான பெயரடைகிறான். - கா.ப