இருண்ட வீடு/அத்தியாயம்-10


10

வீட்டின் தூய்மை, எலிக்கூத்து பூனை மகிழ்ச்சி, எறிபடும் குப்பை.


இனிதாய்ப், பகல் மணி பனிரண்டானது!
பழங்கல அறைக்குள் பதுங்கி யிருந்த
கிழஎலி கள் தம் கிளைஞ ரோடு
கூடத் திற்சிறு குண்டான் மேலும்,
மாடிப் படியில் மட்குடந் தனிலும்
ஆடல் பாடல் அரங்கு செய்தன.
தயிரின் மொந்தையில் தலை புகாததால்
நறுக்கென்று சாய்ந்து நக்கிற்றுப் பூனை !
வடித்த சோற்றை வட்டிலில் கண்டு
தடித்தடிக் காக்கைகள் சலிக்கத்தின்றன!


வீட்டினுள் காற்று வீசுந் தோறும்
மோட்டு வளையில் மொய்த்த ஒட்டடை
பூமழையாகப் பொழியும் தரையில்
ஊமைக் குப்பைகள் உம்மென்று மேலெழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-10&oldid=1534751" இலிருந்து மீள்விக்கப்பட்டது