இருண்ட வீடு/அத்தியாயம்-12


12

தலைவரின் மைத்துனர் வருகிறார்

வரவேண்டாம் என்று வரவேற்கிறார்.


ளொள் ளொள் என்று வெள்ளை நாய், வீட்டின்
வாயிலில், யாரையோ வரவேற் கின்றதை
வீட்டுக்காரர் கேட்டார் காதில்.
நீட்டினார் தலையை வீட்டின் வெளியில்;
மைத்துனர் ஊரினின்று வருவதாய் அறிந்தார்.
வாரும் வாரும் வாரும் என்றார்
மைத்துனர் வந்தேன் வந்தேன் என்று
வாயிற் படிமேல் வைத்தார் காலை.
இடறிற்றுக் கால் !! இரும் இரும் மச்சான்
வராதீர் மச்சான் வராதீர் என்றார்.
இல்லை இல்லை என்றார் மைத்துனர்
தூய குறிதான் தோன்றும் வரைக்கும்
வாயிலில் காலை வைக்கலாகாதென
மைத்துனர், எதிரில் மாட்டுக் கொட்டிலில்
மொய்க்கும் கொசுக்களால் மூடுண் டிருந்தார்.



காரும் சாவடிக் காவல ரோடு
நேரில் வீட்டெதிர் நின்றது வந்து,
விரைவாய் உண்டார்; விரைவாய் ஏறினார்
விரைவாய் காரும் தெருவை அகன்றது
கணக்கனும் அந்தக் காரில் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருண்ட_வீடு/அத்தியாயம்-12&oldid=1534754" இலிருந்து மீள்விக்கப்பட்டது