இளையர் அறிவியல் களஞ்சியம்/ஜேம்ஸ் வாட்

ஜேம்ஸ் வாட் : நீராவி எஞ்சினை சீர்திருத்தி அமைத்த பெருமைக்குரியவர் ஜேம்ஸ் வாட். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். 1788ஆம் ஆண்டில் கிரீனாக் எனுமிடத்தில் பிறந்தார்.

இளம் வயதில் ஜேம்ஸ் வாட் கல்வியில் ஆர்வம் குன்றியவராக இருந்தார். எனவே, தச்சராகப் பணிபுரிந்துவந்த இவரது தந்தையாருக்கு உதவியாக இவரும் தச்சுத் தொழில் செய்வதில் ஆர்வமுடையவராக இருந்தார்.

கணிதம் தொடர்பான தச்சுக் கருவிகளைச் செய்து வந்த ஜேம்ஸ் வாட் கணிதத்தில் ஆர்வ மிக்கவரானார். இதனால், கிளாஸ்கோ சென்று நுட்பமான கணிதக் கருவிகளை உருவாக்குவதில் சிறப்புப் பயிற்சி பெற்றார். பின் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் கணிதக் கருவிகள் செய்யும் பிரிவில் பணியில் அமர்ந்தார்.

அங்கு, நியூர்கமன் என்பார் வடிவமைத்திருந்த என்ஜினைப் பழுது பார்க்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. குறைந்த செலவில் சிறப்பாக இயங்கக்கூடிய, நடைமுறைக் கேற்ப பயன் தரத்தக்க நீராவி எஞ்சினை வடிவமைத்து இயக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தினார். பின், இறுதியாக அவருக்கு முன் கண்டறியப்பட்ட எஞ்சினை முற்றிலுமாக மாற்றி வடிவமைத்தார். 1766ஆம் ஆண்டில் வாட் தாம் மாற்றியமைத்த புதிய

ஜேம்ஸ் வாட்

எஞ்சினுக்கான காப்புரிமை பெற்றார்.

1774ஆம் ஆண்டில் முந்தைய திருத்தியமைக்கப்பட்ட நீராவி எஞ்சினைவிடத் திறம்பட்டதாக புதியதோர் நீராவி எஞ்சினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடலானார்.

வாட்டின் நீராவிப் பொறி (1769)

இதற்காக போல்ட்டன் எனும் பர்மிங்ஹாம் தொழில்

நீராவி சுருங்குவதை நிறுவன் வாட் கவனித்தல்

அதிபருடன் சேர்ந்து நீராவி எஞ்சினை உருவாக்கும் புதிய நிறுவனத்தை உருவாக்கினார். இதன்மூலம் இவரது ஆராய்ச்சி பெரும் முனைப்புப் பெற்றது. புதிய வடிவமைப்போடு கூடியதாக உருப் பெற்ற நீராவி எஞ்சின்கள் சிறப்பாக இயங்கின. நிறுவனமும் பெரும் பொருளிட்டியது.

இவரது ஆய்வு முயற்சி நீராவி எஞ்சினோடு நின்றுவிடவில்லை. தொண்டை வால்வு (Throttle volve), கட்டுப்படுத்தி (Governor). போன்ற புதிய வகை உலை போன்ற கருவிகளை உருவாக்கினார். திறனையளக்கும் குதிரைத் திறன் (Horse power) அலகை வகுத்தவர் இவர்தான். மெட்ரிக் முறையில் அளவிடப்படும் திறனை அளக்கும் அலகான 'வாட்’ என்பதை இவரது பெயரைக்கொண்டு இன்றும் அழைத்து வருகின்றனர்.

இவருக்கு முன்புவரை நீர் ஒரு தனிமம் எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால், இவர் தம் ஆராய்ச்சிமூலம் நீர் ஒரு தனிமம் அல்ல; அஃது, ஒரு கூட்டுப் பொருளே என்பதை எண்பித்தார்.

இவர் 1819ஆம் ஆண்டு ஹான்ட்ஸ் வொர்த் எனுமிடத்தில் காலமானார்.