ஈசாப் கதைப் பாடல்கள்/பதிப்புரை

பதிப்புரை

நரியும் திராட்சையும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சிங்கமும் சுண்டெலியும் என்ற கதைகளெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தக் கதைகளைக் கூறியவர் யார் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்தாம் ஈசாப்.

ஈசாப் கூறிய கதைகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. அவரது கதைகளில் மிருகங்கள், பட்சிகள் யாவும் பேசுகின்றன. அவற்றின் பேச்சுக்கள் நமக்குப் புத்தி புகட்டுகின்றன.

ஈசாப் கதைகளில் உள்ள பல அற்புதக் கருத்துக்களை, அழகிய பாடல்களாக்கி ‘பாலர் மலர்’, ‘பூஞ்சோலை’ ஆகிய இரு பத்திரிகைகளின் வாயிலாகத் தந்தார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள். அவர் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தொகுத்து முன்பு இரு தொகுதிகளாக வெளியிட்டோம். இப்போது அந்த இரு தொகுதிகளிலிருந்த பாடல்கள் அனைத்தையும் ஒரே தொகுதியாகத் தந்திருக்கிறோம்.

சென்னை
30-1-87

பதிப்பாளர்