எண்ணித் துணிக கருமம்/கலைஞர் கடிதம்

 

உடன்பிறப்பே,

40 ஆண்டுகளுக்கு முன்பு 1963 இல் திராவிட முன்னேற்றக் கழகம், பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டதையொட்டி அப்போது நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் பொதுக்குழுஉறுப்பினர்கள் மனம் விட்டு விவாதிப்பதற்கென நமது தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் “எண்ணித் துணிக கருமம்” என்ற தலைப்பில் அவரது கைப்பட எழுதிய உரையை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தேன்.

நம் இதயவேந்தர் அன்று எழுதியதை என் கையில் ஒப்படைத்தார். இன்று அந்தக் கருத்துக் கருவூலத்தை உன் கையில் ஒப்படைக்கிறேன். சிந்திக்க ..... செயல்பட!....

மே. 3. 2003 அன்புள்ள