ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/25.வெறிப் பத்து

ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு

தொகு

மூன்றாவது நூறு குறிஞ்சி

தொகு

பாடியவர்: கபிலர்

தொகு

25.வெறிப்பத்து

தொகு

241. நம்முறு துயரம் நோக்கி அன்னை

வேலன் தந்தா ளாயின்அவ் வேலன்

வெறிகமழ் நாடன் கேண்மை

அறியுமோ தில்ல செறியெயிற் றோயே.

242. அறியா மையின் வெறியென மயங்கி

அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனால்

எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ்

ஆய்மலர் உண்கண் பசப்பச்

சேய்மலை நாடன் செய்த நோயே.

243. கறிவளர் சிலம்பின் கடவுள் பேணி

அறியா வேலன் வெறியெனக் கூறும்

அதுமனம் கொள்குவை அனையிவள்

புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.

244. அம்ம வாழி தோழி பன்மலர்

நறுந்தண் சோலை நாடுகெழ நெடுந்தகை

குன்றம் பாடான் ஆயின்

என்பயஞ் செய்யுமோ வேலற்குஅவ் வெறியே.

245. பொய்யா மரபின் ஊர்முகு வேலன்

கலங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கி

முருகென மொழியும் ஆயின்

கெழுதகை கொல் இவள் அணங்கி யோற்கே.

246. வெறிசெறித் தனனே வேலன் கறிய

கன்முகை வயப்புலி கலங்குமெய்ப் படூஉ

புன்பலம் வித்திய புனவர் புணர்த்த

மெய்ம்மை யன்ன பெண்பாற் புணர்ந்து

மன்றில் பையுள் தீரும்

குன்ற நாடன் உறீஇய நோயே.

247. அன்னை தந்தது ஆகுவது அறிவன்

பொன்னகர் வரைப்பின் கன்னம் தூக்கி

முருகென மொழியும் ஆயின்

அருவரை நாடன் பெயர்கொலோ அதுவே.

248. பெய்ம் மணல் முற்றம் கவின்பெற இயற்றி

மலைவான் கொண்ட சினைஇயf வேலன்

கழங்கினால் அறிகுவது என்றால்

நன்றால் அம்ம நின்றஇவள் நலனே.

249. பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்கு

முருகென மொழியும் வேலன் மற்றவன்

வாழிய விலங்கு மருவிச்

சூர்மலை நாடனை அறியா தோனே.

250. பொய்படு அறியாக் கழங்கே மெய்யே

மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்

மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன்

ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்

பூண்தாங்கு இளமுலை அணங்கியோனே.