ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/41.செவிலிகூற்றுப் பத்து
1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து
11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து
21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து
31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து
41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து
ஐங்குறுநூறு
தொகுஐந்தாவது நூறு முல்லை
தொகுபாடியவர்: பேயனார்
தொகு41.செவிலிகூற்றுப் பத்து
தொகு401. மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவண னாக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி
நீல்நிற வியலகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே.
402. புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமா ருடைத்தே.
403. புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிதா இன்றே
அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலில் இன்னகை பயிற்றிச்
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே.
404. வாழ்நுதல் அரிவை மகன்முலை யூட்டத்
தானவன் சிறுபுறம் கவையினன் நன்று
நறும்பூம் தண்புற அணிந்த
குறும்பல் பொறைய நாடுகிழ வோனே.
405. ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்குவிளக் காயினள் மன்ற கனைப்பெயல்
பூப்பல அணிந்த வைப்பின்
புறவணி நாடன் புதல்வன் தாயே.
406. மாதர் உண்கண் மகன்விளை யாடக்
காதலித் தழீஇ இனிதிருந் தனனே
தாதார் பிரசம் ஊதும்
போதார் புறவின் நாடுகிழ வோனே.
407. நய்ந்த காதலித் தழீஇப் பாணர்
நய்ம்படு முரற்கையின் யாத்த பயன்தெரிந்து
இன்புறு புணர்ச்சி நுகரும்
மென்புல வைப்பின் நாடுகிழ வோனே.
408. பாணர் முல்லை பாடச் சுடரிழை
வணுதல் அரிவை முல்லை மலைய
இனிதிருந் தனனே நெடுந்தகை
துனிதீர கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே.
409. புதல்வன் கவைஇயினன் தந்தை மென்மொழிப்
புதல்வன் தாயோ இருவரும் கவையினள்
இனிது மன்றஅவர் கிடக்கை
நனியிரும் பரப்பின்இவ் உலகுடன் உறுமே.
410. மாலை முன்றில குறுங்கால் கட்டில்
மனையோள் துணைவி யாகப் புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ்நகை இன்பப்
பொழுதிற்கு ஒத்தன்று மன்னே
மென்பிணித் தம்ம பாணனது யாழே.