ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை/ஓதலாந்தையார்/38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து

ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு

தொகு

நான்காவது நூறு பாலை

தொகு

பாடியவர்: ஓதலாந்தையார்

தொகு

38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து

தொகு

371. மள்ளர் கோட்டின் மஞ்ஞை யாலும்

உயர்நெடும் குன்றம் படுமழை தலைஇச்

சுரநனி இனிய வாகுக தில்ல

அறநெறி இதுவெனத் தெளிந்தஎன்

பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே.

372. என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை

நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு

அழுங்கல் மூதூர் அலரெழச்

செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே.

373. நினைத்தொறும் கலிலும் இடும்பை எய்துக

புலிக்கோட் பிழைட்த கவைக்கோட்டு முதுகலை

மான்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும்

வெஞ்சுரம் என்மகள் உய்த்த

வம்பமை வல்வில்விடலை தாயே.

374. பல்லூல் நினைப்பினும் நல்லென் றூழ

மிளி முன்பின் காளை காப்ப

முடியகம் புகாக் கூந்தலள்

கடுவனும் அறியாக் காடுஇறந் தோளே.

375. இதுவென் பாவை பாவை இதுஎன்

அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல்

பைங்கிளி எடுத்த பைங்கிளி என்றிவை

காண்தொறும் காண்தொறும் கலங்க

நீங்கின ளோஎன் பூங்க ணோளே.

376. நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று

காடுபடு தீயின் கனலியர் மாதோ

நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப்

பூப்புரை உண்கண் மடவரல்

போக்கிய புணர்த்த அறனில் பாலே.

377. நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானை

இயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்

சென்றனள் மன்றஎன் மகளே

பந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே.

378. செல்லிய முயலிப் பாஅய சிறகர்

வாவல் உகக்கும் மாலையாம் புலம்பப்

போகிய அவட்கோ நோவேன் தேமொழித்

துணையிலள் கலிழும் நெஞ்சின்

இணையேர் உண்கண் இவட்குநோ வதுமே.

379. தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின்

இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை

இனக்களிறு வழங்கும் சோலை

வயக்குறு வெள்வேல் அவற்புணர்ந்து செலவே.

380. அத்தம் நீளிடை அவனொடு போகிய

முத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல்

தாயர் என்னும் பெயரே வல்லாறு

எடுத்தேன் மன்ற யானே

கொடுத்தோர் மன்றஅவள் ஆயத் தோரே.