ஒப்பியன் மொழிநூல்/பின்னிணைப்பு I

பின்னிணைப்பு I

மா என்னும் வேர்ச்சொல்

மதி (நிலா) என்னும் சொல் மத என்னும் சொல்லடியாய்ப் பிறந்தது. மதமத என்பது உணர்ச்சியின்மையைக் குறிக்கும் ஒரு குறிப்புச்சொல், மத—மதவு= மயக்கம், பேதைமை,

"மதவே மடனும் வலியு மாகும்" என்றார் தொல்காப்பியர்

மத — மதம் — மதர் = மயக்கம். மதம் — மத்தம் = மயக்கம், பைத்தியம், நிலவினால் — மயக்கம் உண்டாகும் என்றொரு பண்டைக் கருத்துப்பற்றி, நிலா மதியெனப்பட்டது. மதம்—மதன் = வலி.

ஒ. நோ. சந்திரரோகம் = பைத்தியம். Lunacy (insanity) from luna, the moon; மயக்கம் தருவதினாலேயே, தேனுங் கள்ளும் மதம் என்றும் மது என்றும் கூறப்பட்டன.

மதி காலத்தை யளக்குங் கருவியாதலின், அதன் பெயர் அளத்தற்பொருள் பெற்றது. L. metior Goth, mitan, Ger. messen, A. S. metan, E. mete, Sans. மிதி, மதி—(மது)—மத்துமட்டு.

மதி என்னுஞ் சொல்லே மா என்று மருவியிருக்கலாம்: ஒ. நோ. பகு —பா, மிகு — மி. எங்கனமாயினும், மா என்னும் வேர்ச்சொல் தமிழே என்பதற்குத் தடையில்லை.

மா என்பது ஒரு கீழ்வாயிலக்கம், ஒரு நில அளவு:

மா+அனம் = மானம் அளவு, வருமானம் = வரும்படி

மானம் என்னும் சொல் அளவு என்பதை அடிப்படையாகக் கொண்டு பல பொருள்களைப் பிறப்பிக்கும்;

மானம் = 1 படி (வடார்க்காட்டு வழக்கு)

= அளவு, ஒப்பு, கா : சயானம் (இரு.)
= அளவு, மதிப்பு. மானம் - 'honour (L.)
= மதிப்புப்பற்றியனிக்கும் பரிசு, கா : சன்மானம் (இரு.)
= தன்மதிப்பு. உயிர் நீப்பர் மானம் வரின்
= பெருமை, [குறள், 969.)
= அகங்காரம். களிமடி மானி' (நன். 39.)
= அளவு, வரையறை, விலக்கு.

“மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை” (மொழி. 14)

என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் மானம் என்பதற்குக் குற்றமென்று பொருள் கூறியது குற்றமாகும், டாக்டர் S. P. சாஸ்திரியார் ஆனம் என்று பிரித்தது அதிலும் குற்றமாகும். “கடிநிலை யின்றே” (புள்ளி. 94), வரை நிலை யின்றே (புள்ளி. 104) என்று தொல்காப்பியர் பிறாண்டுக் கூறுவதை, *மானமில்லை என்பதனுடன் ஒப்பு நோக்குக.

= அளவு கருவி;
= அளவு, ஒரு தொழிற் பெயரீற: கா! சேர்மானம்

மானம் (மதிப்பு)X அவமானம். அவி+அம் = அவம் = அழிவு. மானம் என்பது. அளவு அளவை என்னும் பொருளில் வடமொழியில் மாணம் என்று திரியும். கா ! பரிமாணம், பிரமாணம். மானம் என்பதினின்று மானி மானு என்னும் வினைகள் தோன்றும்.

மானித்தல் = அளத்தல், வெப்பத்தை அளப்பது வெப்பமானி.

= மதித்தல், கா ! அபிமானி (இரு பிறப்பி);
  மதித்தளிக்கும் நிலம் மானியம் —மானிபம்,

= அளவையாலறிதல், கா: அனுமானி.
  உவமானம் (ஒத்த அளவு) உபமான(வ).

உவத்தல் - விரும்பல், ஒத்தல். ஒ. நோ. like = to be pleased with, to resemble, விழைய நாட என்பவை உவமவுருபுகள்.

உவமை—உவமம் —உவமன். உவமை—உபமா (வ.)

மானுதல் = ஓரளவாதல், ஒத்தல். மான (போல) உவமவுருபு. மானம் என்னும் சொல்லே மோன மூன் முதலிய பல வடிவுகளாகத் திரிந்து மேலையாரிய மொழிகளில் நிலாவைக் குறிக்கும்.

Moon. Lit, the 'measurer of time' found in all the Teurt. languages, also in 0. slav. menso, L. mensis, Gr. mene all from root ma, to measure என்றார் சேம்பராரும்

Moon-month. Moon day- Monday.

Moor என்பது மிகப் பழைமையான சொல்லென்பர் மாக்ஸ்முல்லர்.

மா + திரம் = மாத்திரம் = மாத்திரை = அளவு.

Gr.metron, Li mensura, Fr. mesure, E, measure Gr. metron, Fr.-L. metrum, E. metre, poetical measure, E, meter, a measurer:

Geometry. Fr.-L.-Gr- geometria-geometreo, to measure land-ge, the earth, metreo, to measure.

கூ-ge. கூவளையம் -- குவலையம் = நிலவட்டம்.

Mother என்னும் முறைப் பெயரும் மா என்பதன் அடிப் பிறந்ததாகவே சொல்லப்படுகிறது.

Mother, M. E. moder-A. s. noder, cog with Dut; moder, Ice. modhir, Ger. mutler, Ir. and Gael, mathair, Russ. mate, L. mater, Gr, meter, Sans. mata, matri, all from the Aryan root ma, to measure என்றார் சேம்பரார்.

மேனாட்டார் தமிழைச் சரியாய்க் கல்லாமையால், பல தமிழ் வேர்ச்சொற்களை ஆரிய வேர்ச்சொற்களாகக் கூறுவர்.

mother என்னும் பெயர் மாதர் என்னும் சொல்லாகத் தெரிகின்றது. மா+து = மாது. மாது+ அர் = மாதர் =பெண், காதல், அம்மை அன்னை அத்தி அச்சி முதலிய பெயர்கள் உயர்திணையில் தாயையும் பெண்பாலையும் குறித்தல்போல, மாதர் என்னும் சொல்லும் குறித்திருக்கவேண்டும். இங்கு மாதர் என்பது வண்டர், சுரும்பர் என்பன போல அர் என்னும் விரியீறு பெற்ற ஒருமைப் பெயர்.

"மாதர் காதல்" என்றார் தொல்காப்பியர். எழுமாதர்= the seven divine mothers, Matron, Fr.—L, matrona, a married lady,—mater, mother?

Matter, Matrix, matriculate, matrimony முதலிய சொற்களும், matter, (mother) என்பதனடியாகப் பிறந்தவையென்றே சொல்லப்படுகின்றன.

மாத்திரை—மாத்திரி—மாதிரி, F. madulus, Fr. modele E. model. மாதிரி—மாதிரிகை. (மாத்ரகா, வ.)