ஒப்பியன் மொழிநூல்/பிற்சேர்பு
பிற்சேர்பு
முன்னுரை : பக்கம் 21: கோத்ர (வமிசம்) என்னும் சொல் மாட்டுக்கொட்டில் என்றும், துஹித்ரி (மகள்) என்னும் சொல் பால் கறப்பவள் என்றும், பொருள்படுவது. ஆரியர் இந்தியாவிற்கு வந்த போது முல்லை நாகரிகத்தினரே என்பதைக் காட்டும்.
நூல் : பக்கம் க0. மொழி நூலுக்கு ஆங்கிலத்தில் Linguistics, Linguistic Science என்றும் பெயருண்டு.
பக்கம் ௩௪; மொழி நூல் நெறிமுறைகள் : உ௮. மொழி நூற்கு மாந்தன் வாயினின்று தோன்றும் ஒவ்வோர் ஒலியும் பயன்படும். ௨௯. ஒரு மொழியின் சொல்வளம் அதைப் பேசுவோரின் தொகைப் பெருமையையும் நாகரிகத்தையும் பொறுத்தது.
பக்கம் ௧௫௨: வாணி என்னும் சொல் வாய்நீர் என்பதினின்று பிறந்ததாகவும் கொள்ள இடமுண்டு, வாய்நீரை வாணீர் என்பது கொச்சை வழக்கு. ஒ. நோ. குறுதொய்—குறுணை. தண்ணீர் தண்ணி எனப்படுவதுபோல, வாணீர் வாணி எனப்படும். வாய் நீருக்கு மறு பெயர் சொள்ளு என்பது. சொளுசொளு என்று வடிவது சொள்ளு. பேசத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகட்குச் சொள்ளு வடியும், சொள்ளு மிகுதியாய் வடிந்தால் பேச்சு மிகுதியாகும் என்றொரு கொள்கையுளது. 'சொள்ளுப் பெருத்தால் சொல்லுப் பெருக்கும்' என்பது பழமொழி: சொள்ளு—சொல்லுசொல். வாய்நீர்—வாணீர் — வாணி = நீர், சொல், வாணி— பாணி.
கொச்சை வழக்கிலிருந்தும் சில சொற்கள் கொள்ளப்படும். கா; கொண்டுவா —(கொண்டா)—கொணா—கொணர், பழம்— பயம்.
வாணி என்பதற்கு வாச் என்று வடமொழி மூலங்காட்டினும், அதற்கும் வாய் என்னும் தமிழ்ச்சொல்லே மூலமாதல் காண்க.
பக்கம் ௧௮௬ வரி 8 பரசு (பீராய்) மூஞ்செலி (மூஞ்சூறு.
பக்கம் ௨௧௩, சிவம் என்னும் சொல் ருக்வேதத்திற் சேர்க்கப்பட்டது பிற்காலமாகும். அச்சொற்கு மங்கலம் அல்லது நன்மை என்று பொருள் கூறினும், அதுவும் திருமகள் நிறம் சிவப்பு என்னும் கொள்கை பற்றியதே.
பக்கம் ௨௧௯. ஓம் என்னுஞ் சொல் எல்லாவற்றையும் படைக்கும் மூல ஆற்றலைக் குறிப்பதென்ற கொள்ளினும், பாதுகாப்புப் பொருளதென்று கொள்ளினும், தமிழ்ச் சொல்லே யென்பதற்கு எள்ளளவும் தடையில்லை.
ஓ என்பது உயரச் சுட்டு. அது உயரமாய் வளர்தலையும் வளர்த்தலையுங் குறிக்கும். வளர்த்தல் காத்தல். ஓ. நோ: ஏ—எ —எடு, எடுத்தல் = வளர்த்தல். Rear, v. t. (orig.)to raise: to bring up to maturity. [A. S. roeran, to raisn.]
ஓ—ஓம்—ஓம்பு. ஓ. நோ. ஏ—ஏம்—ஏம்பு : ஆ — அ—அம் — அம்பு—அம்பர். கும்—கும்பு, திரும்—திரும்பு.
ஓம் = காப்பு. ஓம்+படு = ஓம்படு, ஓம்படு + ஐ =ஓம் படை= பாதுகாப்பு, பாதுகாப்புச் செய்தல், ஓம்படுத்துரைத்தலென்பது ஒரு கோவைத்துறையாயுமுள்ளது. ஓம்படுதல் தன் வினை. ஓம்படுத்தல் பிறவினை, வழிப்படுத்துரைத்தல் என்னும் துறைப் பெயரை நோக்குக.
பக்கம் ௨௪௩; உதடுகள் உகரத்தை ஒலிக்கும்போது மூன்னும் இகரத்தை ஒலிக்கும்போது பின்னும் செல்வதால், உகர இகரங்கள் முறையே முன் பின் என்னும் பொருள்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட பிற கருத்துக்களையும் தரும் சொற்களைப் பிறப்பிக்கும்.
கா: ஊங்கு = முன்பு. ௨௪௧ ஆம் பக்கத்தில் உயரக் கருத்தை அடிப்படையாக் கொண்டு எதிர்காலத்தையுயர்த்துவதாகக் கூறிய உகரம், முன்மைக் கருத்தை அடிப்படியாகக் கொண்டு அக்காலத்தை உணர்த்துவதாகவுங் கொள்ளலாம். ஊங்கு —ஊக்கு. உகை—L. Gr. ago, to drive, Act, agent, agency, agenda முதலிய சொற்கள் ago என்னும் மூலத்தினின்றும் பிறந்தவை. உத்து—முற்செலுத்து.
துர—E. drive, A; S. drifan, Ger. treiben, to push.
முன்—முந்து மூ—மூக்கு — முகம்—முகப்பு. முகம்—நுகம். மூக்கு—முகடு. மூக்கு—முகை —முகிழ். மூக்கு—முக்கு.
முகம் என்பது முதலாவது முன்னால் நீண்டிருக்கின்ற மூக்கைக் குறித்து, பின்பு தலையின் முன்புறமான முகத்தைக் குறித்தது; வட மொழியில் அதை வாய்ப்பெயராகக் கொண்டது பிற்காலம்.
மூக்கு—E. mucus. மூக்கு—E. beak, Fr, bec, Celt. beic. deis. மூக்கு—E—Celt. peak. முக்கு—E. nook, Scot, neuk. Gael.—Ir, njuc.
pike (E. and Celt.); pic (Gael) ; pig (W.)— a point; spica (L.) : spike {E.); spoke (E.) முதலிய சொற்கள் மூக்கு, என்பதன் வேறுபாடுகளே.
முன் — முனி—நுனி— துணி— நுண். முனி—முனை— நுனை.
நுண்—L. min, இதனின்று minor, minority, minish, minim, minimum, minister, minstrel, minute, minus முதலிய பல சொற்கள் பிறக்கும்.
முனையைக் கொனை என்பது வடார்க்காட்டு வழக்கு—E. cone, a solid pointed figure. cone, L. couus, Gr. konos.
bone (E;), han (h. S.). bein (Ice.) cana (Sans.) முதலிய சொற்கள் கொனை என்பதினின்றும் திரிந்தவையே.
முட்டு —E. butt, buttress: Meet, moot என்னுஞ் சொற்கள் முட்டு என்பதினின்றும் திரிந்தவையே. A. S. metan, to meet ; mot, an assembly, முட்டு —முட்டி — கைகால் பொருத்துக்கள்.
ஈங்கு—இங்கு. ஈ—இ. இறங்கு. இழி, இனி, ஈனம். இவை இறங்கலும் இழிவும் குறிக்கும். மேட்டடியில் நிற்கும்போது அண்மை இறக்கமாகும்.
ஈர், இழு—இசு—இசி, இழு இழுகு—இழுது—எழுது.
இவை பின்னுக்கு அல்லது அண்மைக்கு இழித்தலையும், பின்னுக்கு இழுத்து வரை தலையுங் குறிக்கும். இட, இணுங்கு. என்பவை இழுத்தொடித்தலைக் குறிக்கும். இடறு என்பது பின் வாங்கி விழுதலையும், இடை என்பது பின்வாங்கி ஓடுதலையும் குறிக்கும்.
பின் — பிந்து. பின்—பின்று —E. hind, adj; behind, ads: hinder, y: t. binderance, a ; A. S. hinder, adj; hindriat, Ger. bindero, v. t.பின்—பிற— பிறகு— பிறக்கு—E. back, A. S. boec, Sw. bak, Dan, bag.
திரை = எழினி, அலை, தோற்சுருக்கு, தயிர்த்தோயல். இவரத்தல் = இழுத்தல். வேட்டியை மேலே இழுத்துக் கட்டு தலைத் திரைத்துக் கட்டுதல் என்பர் இன்றும் தென்னாட்டார், திரை (எழினி) இழுப்பது. அலை தோற்சுருக்கு முதலியவை ஆடையை இழுத்திழுத்து வைத்தாற்போலிருத்தல் காண்க.
திரை என்னும் சொல்லே ஆங்கிலத்தில் draw என்று திரியும்; Drawer என்பது இழுக்கின்ற மரத்தட்டையும், இழுத்துக் கட்டினாற்போன்ற குறுகிய காற்சட்டையையும் குறித்தல் காண்க. திரை என்பதினின்று பல மேலையாரியச் சொற்கள் பிறக்கும்.
L. traho. Dut, trekken, E. draw. A. S. dragas. Ger. trages, Ice. drug, draft, drafts; drag draggle, dragnet; drain, drainage, draine; draught, draught house; draughts, draughtboard, draughtsman;drawback, drawsbridge, drawee, drawing, Hawing-room, drawl, draw-welf; withdraw, dray : dredge, dredger dregs, dreggy; trace, tracery: track, trackroad; inet, tractatihity, tractile, tractarias, traction. tractor, tractive, abstract, attract, extract; trail; train, trainer, training, trainband, train-bearer; trait; trawl; treachery; treat, treatise treatment, treaty'; tret; trick; trigger; troll ; த்ராவகி (வ.) முதலிய சொற்களெல்லாம் திரை என்னும் சொல்லை மூலமாக அல்லது நிலைமொழியாகக் கொண்டவையே. திரைத்தல் = இழுத்தல், இறக்குதல்.
பக்கம் ௨௭௬. இகம், இதி என்பவை இகரச்சுட்டடிம் பெயரான தொழிற்பெயரீறுகள்.
பக்கம் ௨௮௩. 3-ஆம் வேற்றுமைக்குரிய கருவிப்பொருளும் 7-ஆம் வேற்றுமைக்குரிய இடப்பொருளும் உணர்த்தக்கூடிய இல் என்னும் உருபு. அப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கற் (motion from) கருத்தைச் சிறப்பாகப் பெற்று 5-ஆம் வேற்றுமையாயிற்று:
பக்கம் ௨௮௯, ஒப்பியல் தரங்கள் (Degrees of comparison) ஒய்டித்தரம் (postive), உறழ்தரம் (comparative), உயர் தரம் [superlative) என மூவகைப்படும். அவற்றுள் ஒப்புத்தரம் 2-ம் வேற்றுமையுருபுடன் விட (நீக்க), பார்க்க (காண); பார்க்கிலும், (பார்த்தாலும்), காட்டின் (காட்டினால்), காட்டிலும் (காட்டினாலும்) முதலிய சொற்கள் சேர்வதாலுணர்த்தப்படும், பிற வெளிப்படை.
பக்கம் ௨௯௬. நிகழ்கால வினையெச்சம் முதலாவது தொழிற்பெயராயிருந்தது. செய்யல்-செய்ய. ஆங்கிலத்திலும் இங்ஙனமே.[1]
- ↑ Historical Outlines of English Accidence, p. 258.