கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/J
J
J : ஜே : ஒர் உயர்நிலை கணினி நிரலாக்க மொழி. ஏ.பீ.எல் (APL) என்னும் கணினி மொழியை உருவாக்கிய கென்னத் இவர்சன் (Kenneth Iverson) உருவாக்கிய மொழி இது. ஜே., ஏ.பீ.எல்லின் அடியொற்றிய மொழி. ஏ.பீ.எல் போலவே டாஸ், விண்டோஸ், ஒஎஸ்/2 மற்றும் மெக்கின்டோஷ் பணித்தளங்களில் செயல்பட வல்லது. ஜெ மொழியைப் பெரும்பாலும் கணித வல்லுநர்களே பயன்படுத்துகின்றனர்.
jabber , பிதற்றல்; உளறல் : செயல் பாட்டில் ஏற்பட்ட ஏதோ குறைபாடு காரணமாக, ஒரு பிணையத்தில் தொடர்வோட்டமாய் அனுப்பிவைக்கப்படும் முறைமையற்ற தகவல் கூறுகள்.
jack in : நுழை முளை, முளை நுழை; புகு முளை, முளை புகு : 1. ஒரு கணினி முறைமையில் பயனாளர் ஒருவர் நுழைபெயர் மற்றும் நுழை சொல் (password) தந்து நுழைதலைக் குறிக்கும். 2. ஒரு பிணையத்தில் பயனாளர் தன் கணினியைப் பிணைத்துக் கொள்ளுதலையும் குறிக்கும். பெரும்பாலும் இணைய தொடர் அரட்டை (Internet Relay Chat) அல்லது மெய்நிகர் நடப்புப் பாவனைகளில் (Virtual Reality Simulations) பயனாளர் தம்மை நுழைத்துக் கொள்வதைக் குறிக்கும். தொடர்பினைத் துண்டித்துக் கொள்வது, jack out (முளைவிடு/ விடுமுளை) எனப்படும்.
jam : நெரிசல்,
janet : ஜேநெட் : கூட்டுக் கலைக் கழகப் பிணையம் என்று பொருள்படும் Joint Academic Network என்பதன் சுருக்கம். இங்கிலாந்து நாட்டில் இணையத்தின் முதன்மை முதுகெலும்புப் பிணையமாகச் செயல்படக் கூடிய ஒரு விரிபரப்புப் பிணையம் (Wide Area Network).
java applet: ஜாவா குறுநிரல்: ஜாவா மொழியில் இருவகையான நிரல்கள் உருவாக்கப்படுகின்றன. ஒன்று பயன் நிரல் (Application). மற்றது குறுநிரல் (Applet). இது ஒரு ஜாவா இனக் குழு (class). ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஜாவா பயன்பாட்டுத் தொகுப்பு. இந்த ஜாவா இனக்குழுவினை தன்னுள் ஏற்றிக்கொண்டு அதிலுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது. இணைய உலாவி, குறுநிரல் நோக்கி ஆகியவை குறு நிரல்களை ஏற்றி இயக்க வல்லவை. எடுத்துக்காட்டாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், நெட்ஸ்கேப் நேவிக் கேட்டர், ஹாட் ஜாவா போன்ற இணைய உலாவிகள் ஜாவா குறு நிரல்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இயக்கும் திறன் பெற்றவை. ஜாவா குறுநிரல்கள் பெரும்பாலும் ஒரு வலைப்பக்கத்தின் பல்லூடக (பின்னணி இசை, நிகழ்நேர ஒளிக்காட்சிப் படம், அசைவூட்டங்கள், கணக்கீடுகள் மற்றும் ஊடாடு விளையாட்டுகள்) விளைவுகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பயனாளரின் தலையீடின்றி தாமாகவே இயங்கும்படி குறுநிரல்களை அமைக்க முடியும். அல்லது வலைப் பக்கத்திலுள்ள சின்னத்தின் மீது சுட்டியால் சொடுக்கும்போது இயங் கும் படியும் குறுநிரலை அமைக்கலாம். java application : ஜாவா பயன்பாடு; ஜாவா பயன்நிரல்.
JavaBean: ஜாவாபீன் : ஜாவா அடிப்படையிலான ஒரு மென் பொருள் நுட்பம்.
java chip : ஜாவா சிப்பு; ஜாவா சில்லு : ஜாவா மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை ஜாவா மெய்நிகர் பொறி (Java Virtual Machine - JVM) என்னும் ஆணைமாற்றி (Interpreter) செயல் படுத்துகிறது. ஜேவிஎம் செய்யும் பணியை நிறைவேற்றும் வகையில் ஒரு சிப்புவை - ஒரு நுண்செயலியை - வடிவமைக்க முடியும். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் இத்தகைய சிப்புவை உருவாக்கியுள்ளது. இந்த சிப்புவை மிகச் சிறிய சாதனங்களில் கட்டுப்படுத்திகளாகப் பயன்படுத்த முடியும்.
java-compliant browser : ஜாவா இணக்க உலாவி : ஜாவா மொழியில் எழுதப்பட்ட நிரலை ஏற்று இயக்கும் திறனுள்ள ஒர் இணைய உலாவி. தற்கால இணைய உலாவிகள் பலவும் ஜாவா இணக்கம் உள்ளவையே.
java database connectivity (JDBC) : ஜாவா தரவு இணைப்பாக்கம்.
Java Developer's Kit (JDK) : ஜாவா உருவாக்கக் கருவித் தொகுதி : சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருள் கருவிகளின் தொகுப்பு. ஜாவா பயன்நிரல்களையும் குறுநிரல்களையும் உருவாக்க உதவுபவை. இத் தொகுப்பு, ஜாவா மொழி மாற்றி, ஆணைமாற்றி, பிழைதிருத்தி, குறுநிரல் நோக்கி மற்றும் ஆவணமாக்கிகளை உள்ளடக்கியது. இலவசமாக வினியோகிக்கப்படுகிறது.
Java Management Application Programming Interface : ஜாவா மேலாண்மை பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்; ஜாவா மேலாண்மை பீஐ: பயன்பாட்டு நிரலாக்க இடை முகத்துக்கான வரையறுப்புகளின் தொகுப்பு. பிணைய மேலாண்மைக்கு, ஜாவா மொழியை ஏதுவாக்க சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் இவ்வரையறுப்புகளை முன்வைத்துள்ளது.
Java Script : ஜாவா ஸ்கிரிப்ட்: ஒரு கணினி உரைநிரல் மொழி. இணை யப் பக்கங்களை சிறந்த முறையில் வடிவமைக்கப்படுகிறது. நெட்ஸ் கேப் நிறுவனம் உருவாக்கியது.
Java Soft : ஜாவா சாஃப்ட் : ஒரு கணினி நிறுவனம்.
java terminal : ஜாவா முனையம் : இணையத்தில் இணைத்து இயக்குவதற்கென்றே குறைவான சாதனங்களுடன் உருவாக்கப்பட்ட ஒரு வகை சொந்தக் கணினி. ஜாவா குறுநிரல்களை பதிவிறக்கம் செய்து இயக்கவல்லவை. இக் கணினிகளில் வட்டுச் சேமிப்பகங்கள் கிடையா. நிறுவப்பட்ட நிரல்களும் கிடையா. எத்தகைய பயன்பாட்டு நிரல்களையும் பிணையத்திலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளும். தேவையான நிரல்களை ஒரு கணினியில் மையப்படுத்தி சேமித்துவைத்து, இறக்குமதி செய்து பயன்படுத்திக் கொள்வதனால் செலவு குறைவாகிறது. அதேவேளை, ஒவ்வொரு நிரலையும் இறக்குமதி செய்து பயன்படுத்துவதால் சிறிது காலத் தாழ்வு தவிர்க்க முடியாதது. சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் ஜாவா முனையங்களை விரைவில் வெளியிட எண்ணியுள்ளது. பிணைய பீசியை ஒத்தவை ஜாவா முனையங்கள்.
JDK : ஜாவா மென்பொருள் உருவாக்கக் கருவித் தொகுதி.
jerk : குலுக்கம்.
jewel box : வட்டுப்பெட்டி : ஒரு குறு வட்டினை பாதுகாப்பாக வைக்கப் வட்டுப்பெட்டி பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ் டிக் பெட்டி.
jiff : ஜிஃப் : ஜேபெக் (JPEG) கோப்புப் பரிமாற்ற வடிவாக்கத்தில் அமைந்த வரைகலைப் படிம கோப்புகளைக் குறிக்கும் வகைப் பெயர். (File Extension).
jm : ஜேஎம் : இணையத்தில் ஒர் இணைய தளம் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
JΜΑΡΙ : ஜேஎம்ஏபீஐ : ஜாவா மேலாண்மைப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Java Management Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.
jo : ஜேஓ : இணையத்தில் ஒர் இணைய தளம் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
job, batch : தொகுதிச் செயற்பாடு; தொகுதிப் பணி.
job oriented terminal : பணிசார்ந்த முனையம்.
job turnaround time: பணி முடிக்கும் நேரம்; பணிச் செயலாக்க நேரம்.
join : ஜாய்ன்; சேர்ப்பு : 1. ஒரு தரவு தளத்தில் அட்டவணை மீது செயல் படுத்தப்படும் ஒரு கட்டளை. இரண்டு அட்டவணைகளை இணைத்து மூன்றாவதாக ஒர் அட்ட வணையை உருவாக்கும் கட்டளை. இரு அட்டவணைகளிலும் முதன்மைப் புலங்களை (key fields) ஒப்பிட்டு ஒன்றாயிருக்கும் ஏடுகளை இணைத்து மூன்றாவது அட்டவணை உருவாக்கப்படுகிறது.
join condition : சேர்ப்பு நிபந்தனை.
joliet : ஜோலியட் : ஐஎஸ்ஓ 9660 (1988) தரக் கட்டுப்பாட்டின் நீட்டித்த செந்தர வரையறைகள். நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கின்றன. 8.3 எழுத்துப் பெயர் மரபுக்கு மாற்றானது. விண்டோஸ் 95 போன்ற இயக்க முறைமைகள் நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கின்றன. இந்த முறைமைகளில் பயன்படுத்தக் கூடிய குறுவட்டுகளில் இந்தப் கோப்பு வடிவாக்கம் பயன்படுத்தப்படுகிறது.
journal : ஆய்வேடு; தாளிகை; குறிப்பேடு: ஒரு கணினியில் அல்லது ஒரு பிணையத் தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவுசெய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு தகவல் தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்களைக் குறித்து வைத்துக் கொள்ள இக்குறிப்பேடு பயன்படும். ஒரு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைக் குறித்து வைத்துக் கொள்ள முடியும். ஒரு கணினி அமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளின் விவரங்கள், அவ்வப்போது நீக்கப்பட்ட கோப்புகளின் விவரங்கள் இவற்றையும் கண்காணித்துக் குறித்துக் கொள்ளலாம். சேமித்து வைக்கப்பட்ட தகவல்களுக்கு இழப்பு அல்லது பழுது ஏற்படுமாயின், இதற்குமுன் நடந்த நிகழ்ச்சிகளைப் பரிசீலித்து மூலத் தகவல்களை மீட்டுருவாக்கம் செய்ய, பொதுவாக இக்குறிப்பேடு பயன்படுகிறது.
JPEG : ஜேபெக் : 1. ஒளிப்பட வல்லுநர்களின் கூட்டுக் குழு என்று பொருள்படும் Joint Photographic Experts Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வரிசையற்ற கொசைன் மாற்றுகையைப் (Descrete Cosine Transform) பயன்படுத்தி படிமங்களை (images) இறுக்கிய வடிவத்தில் சேமிப்பதற்கான ஐஎஸ்ஓ/ஐடியூ தர வரையறை. 100:1 விகித அளவுக்கு இறுக்கிச் சுருக்க முடியும். ஆனால் தகவல் துல்லிய இழப்பு இருக்கவே செய்யும். 20:1 அளவில் சுருக்கினால் ஒரளவு தகவல் இழப்பு வெளிப்படையாகத் தெரியாத அளவுக்கு இருக்கும். 2. ஒரு வரைகலைப் படம் ஜேபெக் வடிவாக்கத்தில் ஒரு கோப்பாக சேமிக்கப்படும் முறை.
Jughead : ஜூஹெட் : ஜான்ஸியின் உலகளாவிய கோஃபர் படிநிலை அகழ்வாய்வும் திரைக்காட்சியும் என்று பொருள்படும் Jonzy's Universal Gopher Hierarchy Excavation and Display என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சொல்லைத் தந்து தேடும் முறையில் கோஃபர் வெளியிலுள்ள கோப்பகங்களைத் தேடிக் கண்டறியப் பயனாளருக்கு உதவும் இணைய சேவை. மேல்நிலை கோஃபர் பட்டி (menu) களில் உள்ள கோப்பகத் தலைப்புகளில் காணும் முக்கிய சொற்களை ஒரு ஜூஹெட் வழங்கன் கணினி அகர வரிசைப்படுத்தி வைக்கிறது. ஆனால் அது கோப்பகங்களிலுள்ள கோப்புகளை அகர வரிசைப் படுத்துவதில்லை.
julian calendar : ஜூலியன் நாள்காட்டி : கி.மு. 46 ஆம் ஆண்டு ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத் தப்பட்ட நாள்காட்டி. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட முந்தைய காலண்டருக்குப் பதிலாக இது புகுத்தப்பட்டது. ஜூலியன் நாட்காட்டி முறையில் சராசரியாக ஆண்டுக்கு 365 நாட்கள். ஒவ்வொரு நான்காண்டிலும் ஒரு லீப் ஆண்டு. ஆக, ஆண்டுக்கு 365.25 நாட்கள். ஆனால், உண்மையில் சூரிய ஆண்டு என்பது சற்றே குறைவான நாட்களைக் கொண்டது. இதன் காரணமாகவே ஜூலியன் நாட்காட்டி முறை வழக்கொழிந்தது. மிகத்துல்லிய கிரிகோரியன் நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. இதனை போப் கிரிகோரி XIII அறிமுகப் படுத்தினார்.
jump, conditional : நிபந்தனை தாவல்.
jump instruction : தாவு ஆணை. jumper : ஜம்ப்பர்; செருகி : ஒரு சிறிய செருகி அல்லது இணைப்புக் கம்பி. ஒரு மின்னணுச் சுற்றில் இரு வேறு புள்ளிகளை இணைக்கப் பயன்படுவது. ஒரு வன்பொருளின் செயல் பாட்டுக் கூறு ஒன்றினை மாற்றியமைக்க இந்த செருகி (ஜம்ப்பர்) இணைப்புகளை மாற்றியமைக்க வேண்டும்.
jump instruction : தாவல் ஆணை : கணினி நிரலாக்க மொழிகள் பலவற்றில் பயன்படுத்தப்படும் ஆணை, நுண்செயலி ஆணைத் தொகுதியில் jump என்ற பெயரிலேயே ஆணை உண்டு. உயர்நிலை மொழிகளில் பெரும்பாலும் goto என்ற வடிவில் வழங்குகிறது. நிரலின் இயல்பான வரிசைமுறை ஒட்டத்தை மாற்றியமைக்க இவ்வாணை பயன்படுகிறது.
junction : சந்தி : 1. இரண்டு அல்லது மேற்பட்ட மின் உறுப்புகளை ஒன்றாக இணைக்கும் புள்ளி. 2. N-வகை மற்றும் P-வகை குறை கடத்திகள் இணைகின்ற இடம்.
junk mail : கூள மின்னஞ்சல், குப்பை அஞ்சல்.
justified : இருபுற ஓரச்சீர்மை,
justity : ஓரச்சீர்மை; நேரமைவு; சீரமைவு: ஒர் ஆவணத்திலுள்ள உரைப் பகுதியை இடப்புற வலப்புற ஒரத்தில் சீரமைத்தல். இடச்சீர், வலச்சீர், மையச்சீர், முழுச்சீர் எனப் பலவகை உள்ளன. சொல்செயலிப் பயன்பாடுகளில் இத்தகைய வசதி உள்ளிணைக்கப்பட்டிருக்கும். வரிகளை ஒரச்சீர்மை செய்யும்போது சொற்களின் இடையே கூடுதல் இடவெளிகள் நிரப்பப்படும். அளவுக்கு அதிகமான இடவெளிகள் விடநேரின், வரியிறுதியிலுள்ள சொற்கள் கூறாக்கப்பட்டு ஒட்டுக்குறி (Hyphen) இடப்படும்.
just in time : சரியான நேரத்தில்: ஜப்பானிய நாட்டு கான்பான் (kanban) முறைமையின் அடிப்படையில் அமைந்த கையிருப்புக் கட்டுப்பாடு (inventory control), தொழிலக உற்பத்தி மேலாண்மை ஆகிய முறைமைகளை விளக்கும் சொல். இத்தகைய முறைமைகளில் தொழிலாளர்கள், ஏற்கெனவே நேரங்குறிக்கப்பட்ட பொருளுற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை விற்பனை நிறுவனங்களிடமிருந்து சரியான நேரத்தில் பெற்றுவிடுவர். உற்பத்திப் பிரிவு தொழிலாளர்கள் தமது தேவைகளை ஒர் அட்டை மூலமாகவோ, கணினி வாயிலான கோரிக்கை மூலமாகவோ தெரிவிப்பர்.