W

waiting time - ஓய்வு நேரம் : மறைநேரம். சேமிப்புக்குத் தகவலை மாற்றுவதற்குக் கட்டுப் பாட்டு அலகு எடுத்துக் கொள்ளும் நேரத்திற்கும் கணிப் பொறிச் சேமிப்பால் மாறுகை தொடங்குவதற்குரிய நேரத்திற்கும் இடையிலுள்ள நேரம்.

walk through - தொடர்ந்து செல்லல் : இதில் தொடக்கத் திலிருந்து முடிவு வரை வேறு பட்ட நிறைவேற்று வழிகள் பின்பற்றப்படுகின்றன. உட்பலனாகக் கொள்ளப்படும் மதிப்புகளுக்கேற்றவாறு இவ்வழிகள் அமையும்.

wall paper, changing - சுவர்த்தாள் மாற்றுதல் : இதுமேடையின் பின்னணிக் காட்சியாகும். பல தாள்கள் இருக்கும். எதை வேண்டுமானாலும் விரும்பியவாறு பயன்படுத்தலாம்.

WAP Wireless Application Protocol - வேப் : கம்பியிலாப்பயன்பாட்டுத் திட்ட அமைப்பு (சிரி)

web - இடையம் : வலையம், மின்தளம், இணையத்தின்மிகக்கவர்ச்சியுள்ளதும் பார்க் கக்கூடியதுமான பகுதி இடையம். இதன் விரிவு உலகளாவிய இடையம் (www). இது மீப் பெருந்தகவல் திரட்டு ஆகும். இதில் இலட்சக்கணக்கான பக்கங்கள் உள்ள தகவல்கள் இருக்கும். இப்பக்கம் இணையப்பக்கம் (வெப்பேஜ்) எனப்படும். இப் பக்கத்தில் பாடம்,

web

231

web


படம், ஒலி, ஒளி ஆகியவை இருக்கும். இப்பக்கங்கள் ஏனைய பக்கங்களோடு தொ டர்பு கொண்டிருக்கும். ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு கொள்ளும் பக்கங்களின் தொகுதி இடையத்தளம் (வெப்சைட்) எனப்படும். இத்தளத்தின் முதல் பக்கம் தொடக்கப் பக்கம் (ஹோம் பேஜ்) எனப்படும். இத்தொடக்கப் பக்கம் தளம் மற்றும் பிறபக்கங் களுடன் உள்ள இணைப்புகள் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும். இந்த இணைப்புகளை அழுத்த, ஏனைய பக்கங்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு இடையப் பக்கத்திற்கும் ஒரு தனித்த முகவரி உண்டு. இதற்கு ஒருசீர் மூல இடங்காணி என்று பெயர் (யூ.ஆர் எல்). இந்த யூஆர்எல் அஞ்சல் முகவரி போன்றது. இம்முகவரியில் நகரம், குடியிருப்பு, தெரு, வீட்டு எண் முதலிய அமைந்து, நம் வீட்டின் இருப்பிடத்தைக் காட்டும். அதேபோல், யூஆர் எல்லும் இணையத்தில் பக்கம் இருக்குமிடத்தைக் காட்டும் எ-டு. http://www.yahoo.com. இணையத்தில் தகவல் காண்பதற்கு மேய்தல் என்று பெயர். இதை மேலோட்டம் விடல் என்றுங் கூறலாம். இதைச் செய்யுங் கருவி மேய்வி. இம் மேய்வி ஒரு தனி நிகழ்நிரல் ஆகும். இடையத்திலிருந்து தகவல் பெற உதவுவது. இதற்கு எடுத்துக்காட்டுகள் இரண்டு கூறலாம். இணைய ஆராய்வி, நெட்ஸ்கேப் செலுத்தி. இவ் விரண்டில் முன்னது விண்டோஸ் 98 இன் பகுதியாகக் கிடைக்கும். பின்னது முன்னதைப் போன்றது; பரவலாகப் பயன்படுவது. பா. internet.


web page design - இடையப்பக்க வடிவமைப்பு : இப் பக்கத்தை வடிவமைக்கும் பொழுது பல காரணிகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவையாவன : தேவை, அச்சு, இடையத்தைப் படித் தல், இடையத்தை எழுதுதல், நிறம் முதலியவை ஆகும்.


web page editors - இடையப்பக்கப் பதிப்பியற்றிகள் : இவை மென்பொருள் பயன்பாட்டு அடைப்பங்கள். இடைய ஆசிரியர் இடையப்பக்கங்களையும் இடையத் தளங்களையும் உருவாக்க இவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் பெரும்பான்மை மேய்வியில் தோன்றும் பக்கத்தை அப்படியே பார்க்க அனு மதிப்பவை. இதனால் நேரம் மிச்சமாகும்; , எச்டிஎம்எல் ஒட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. நமக்காக இந்த ஒட்டுகளை இப்பதிப்பிப்பியற்றிகள் வழங் குகின்றன. எ.டு. நெட்ஸ்கேப் கம்போசர், எம்எஸ் பிரண்ட் பேஜ்.

web

232

web

web page hosting - இடைய பக்கத்தை அமைத்தல் : இடையத்தின் ஒரு பகுதியாக நம் பக்கத்தை ஆக்குதல். அப்பொழுதுதான் இணையப் பயனாளிகள் இதைப் பார்க்க இயலும். ஒரு தனிப்பக்கத் தையோ முழுத் தளத்தையே நாம் உருவாக்க இயலும் தளத்தை உருவாக்குவதைவிடப் பக்கத்தை உருவாக்குதல் எளிது. எச்டிஎம்எல் குறிமுறையை எந்திரத்திலிருந்து பணிப்பிக்கு மாற்றுவதையும் இப்பக்கம் அமைத்தல் குறிக்கும்.


web reading - இடைய படிப்பு : பயனாளிகளில் 79 பங்கு அலகிடுதலையே விரும்புகின்றனர்; படிப்பதில்லை. கண்ப்பொறித் திரையிலிருந்து படிப்பது என்பது கண்களுக்கு அயர்ச்சியை உண்டாக்கும். பொதுவாக நாம் தாளைப் படிப்பதைவிட 25% மெதுவானது. இடையத்தைப் பயன் படுத்துபவர்கள் மேன் மேலும் செல்ல விரும்புவதால் பொறுமையை இழப்பர். படிக்க வேண்டிய தகவல்களோ அதிகம். கணிப்பொறிப் பயனாளிக்கு வசதிக்குறைவை உண்டாக்கும் காரணிகள் பின் வருமாறு.

1) பணியின் இயல்பு

2) கணிப்பொறியில் செலவிடும் கால அளவு.

3) இமைப்பளவு (12-15 தடவை கள் / நிமி).

4) பணியிட வடிவமைப்பு, பார்க்கும் கண்ணாடி வடிவ மைப்பு ஆகிய இரண்டிற்கு மிடையே ஒருங்கிணைப்பு குறைவு. இக்காரணிகள் பார்வைத் தளர்ச்சியை உண்டாக்கும். கண்கள் உலரும்; பார்வை மங்கும். ஆகவே 1/2 மணி நேரத்திற்கு ஒரு தடவை இடைவேளை கொள்ளுதல் நல்லது.


website - இடையதளம் : மின்தளம். ஒன்றுடன் மற்றொன்று தொடர்புகொள்ளும் பக்கங்களின் தொகுதிக்கு இடையத்தளம் என்று பெயர்.


website creation - இடையதளத்தை உருவாக்கல் : இதற்கு இடையப்பக்கப் பதிப்பு இயற்றியைப் பயன்படுத்த வேண்டும். பதிப்பு இயற்றிகளில் சில தனி இயல்புகளைக் கொண்டிருக்கும். இவற்றிற்கு மாயாவிகள் என்று பெயர். இம்மாயாவிகள் படிப்படியாகத் தளம் அமைக்கும் செயலைத் தொடங்குபவை. பிரண்ட்பேஜ் எக்ஸ்பிரசைப் பயன்படுத்தியும் இத்தளத்தை உருவாக்கலாம். இதற்குத் தளத்தில் சேர்க்க வேண்டிய எல்லாத் தனிப் பக்கங்களையும் உரு வாக்க வேண்டும். பின் தொடக்கப் பக்கத்துடன் அவற்றை ஒரு சேர இணைக்கவும்.

Web

233

web

website design, defects of - இடையத்தள வடிவமைப்புக் குறைகள் : இடையத் தளங் களில் 90 பங்கு அளவுக்குக் குறைகளுடன் அமைக்கப்பட் டுள்ளன. அவை பின்வருமாறு:

1) முக்கிய விற்பனையில் 50 பங்கு இழப்பு.

2) வருகை தருபவர்களில் 40 பங்கு அளவுக்குத் திரும்பு தில்லை.

3) வணிகக்குறிப் பெயர் கெடுதல்; ஏனெனில் வெறுப்புற்ற ஒவ்வொரு வாடிக்கையாளரும் தன் வெறுப்பைச் சராசரி 10 பேருக்குச் சொல்கின்றார்.

4) தவறிய வடிவமைப்புகளை மீண்டும் அமைக்க ஒவ்வோ ராண்டும். அதிகம் செலவழிகிறது. இவை பாரஸ்டர் ஆராய்ச்சி முடிவுகள் ஆகும்.


website improvement - இடையத்தள மேம்பாடு : இதற்குரிய முதல் வழி பயனாளிகளின் வாழ்க்கைக் குறிப்பை அறிதலாகும். இது தொடர் பாகப் பின்வரும் தகவல்கள் பயனளிக்கும்.

1) சராசரி வயது

2) பால்

3) பெருந்தொழில்

4) மணநிலை

5) காட்சித் திசை அளவு

6) கணிப்பு மேடை

7) பயன்படுத்தும் மேய்விகள்

8) திரைப் பகுப்புத்திறன்

9) திறங்கள்

10) இணைப்பு விரைவு

11) பன்ம வழக்காறுகள்

12) இடையப் பக்கங்களை மக்கள் எவ்வாறு காண்கின்றனர்.

13) மேய்தலின் முதன்மைப் பயன்கள்

14) இடையத்தைப் பயன் படுத்துவதிலுள்ள சிக்கல்கள். மேற்குறித்த நிலைகள் பற்றிப் புள்ளி விவரங்கள் அளிக்க இடையத்தளங்கள் உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு இடையத்தளம் வடிவமைக்கப்பட வேண்டும்.இக்கால இடையம் தனிப்பட்ட வாசகர்களின் நோக்கங்கள் தேவைகள் ஆகிய வை பற்றித் துப்புகள் அளிப்பதாக இல்லை.


web world - வெப் உலகம் : தமிழ்த் தளங்களின் தலைமைச் செயலகம். செய்தி, திரைப் படம், தொழில், விளையாட்டு, சமயம் முதலியவை இடம் பெறுபவை. சிங்கப்பூரிலிருந்து வெளி வருவது.


web writing - இடைய எழுத்து : இடைய வாசகர்களின் கருத்துகளை அறிந்தே, இடையப் பக்கங்கள் அலகிடக்கூடிய பாடத்தைப் பயன்படுத்த வேண்டும் இதற்குத் தேவைப்படுபவை.

Wheel

234

Win

1) சிறப்புள்ள திறவுச் சொற்கள்.

2) பொருள்பொதிந்த துணைத் தலைப்புகள்.

3) தெறிப்புப் பட்டியல்கள்.

4) ஒரு கருத்தைத் தெரிவிக்கும் சிறிய பத்திகள்.

5) முடிவுடன் தொடங்குதல்; சுருக்கமான விளக்கங்கள் அளித்தல்.

6) சொற்களின் சரியான எண்ணிக்கையில் 50 பங்கு பயன் படுத்தல்.


Wheel Printer-ஆழி அச்சியற்றி : அச்சாழி விளிம்பிலிருந்து உருக்களை அச்சியற்றும் அச்சியற்றி.


wide area network - அகல் பகுதி வலையமைவு : இது ஒரு வலையமைவு. நீண்ட தொலை வுகளுக்குக் கணிப்பொறிகளை இணைப்பது. இயல்பாகத் தொலைபேசி வலையமைவு பயன்படுத்தப்படும். ஒ. local area network.


width attribute - அகல இயல்பு: இது, அட்டவணையின் அக லத்தைக் குறிக்கப் பயன்படு வது. இதன் மதிப்பு விழுக் காடாகத் தெரிவிக்கப்படுவது. இதனால் மேய்விச் சாளரத்தின் அளவு மாறும் பொழுது, அட்டவணையும் அதற்கேற்ப அளவில் மாறும். பா. attribute.


Wilhelm Shickard - வில் கெல்ம் ஷிக்கார்டு : 1623-இல் முதல் எந்திர இலக்கக் கணிப் பானைப் புனைந்தவர். இது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைச் செயல்களைச் செய்தது.


Windows - சாளரம் : இது ஓர் இயங்கு தொகுதியாகும். எடு விண்டோஸ் 98, இத்தொகுதி ஒரு மென்பொருள் வன்பொரு ளுக்கும் பயனாளிக்கும் இடை யே பாலமாக அமைவது. பல நடைமுறைப் பணிகளைச் செய்வதால், இதைக் கொண்டு கணிப்பொறியில் நன்கு வேலை செய்யலாம்.


Windows 98, customizing - விண்டோஸ் 98 ஐத் தேவைக் கேற்றதாக்குதல்: இது மேடையை வேண்டியவாறு பயன்ப்டுத்த உதவுவது. பின் னணியை மாற்றியும் படங் களைச் சேர்த்தும் தகர்த்தியும் பணிப்பட்டையை நகர்த்தியும் அளவுப் படுத்தியும் மேடை யின் தோற்றத்தை மாற்ற இயலும்.


Windows dialog boxes - சாளர உரையாடல் பெட்டிகள் : விண்டோஸ் 98 இப்பெட்டி களைப் பயன்படுத்துகிறது. நோக்கம் தகவல்களைத் திரை யில் காட்டல். இவற்றிலிருந்து வேண்டியவற்றை நாம் தெரிவு செய்யலாம். இப்பெட்டிகளில் உள்ள கட்டுப்பாடுகள் பின் வருமாறு. 1) பாடப் பெட்டிகள் : தகவல்களைப் பதிவு செய்ய.

2) பட்டியல் பெட்டிகள் : தெரிவுகளைத் திரையில்காட்டுவது.

3) கீழிறக்கப் பட்டியல்: பெட்டிகள் தெரிவுகளைத் திரையில் காட்டுவது.

4) வானொலிப் பொத்தான்கள்: பன்மத் தெரிவுகளைத் திரையில் காட்டுபவை.

5) சரிபார்ப்புப் பெட்டிகள்: இவை தெரிவுகளைத் தள்ளவும்,கொள்ளவும் பயன்படுபவை. 6) பொத்தான்கள் : இவை நீக்கும் அல்லது சரிசொல்லும் பொத்தான்கள். 7) தத்திகள்: வேறுபட்ட தெரிவுகளைத் திரையில் காட்டு

Windows, evolution of - சாளர வளர்ச்சி : சாளரத்தின் முதல் வடிவம் விண்டோஸ் 3.0. முதல் தடவையாகச் சாளரம் கோப்பு மேலாண்மை வசதிகளோடு வந்தது. இத்துடன் பிற அமைப்புக் கருவிகளும் இருந்தன. சாளரத்துடன் பயன் படக்கூடிய பல பயன்பாடுகளும் அங்காடிக்கு விரைவில் வரலாயின. இதனால் ஒரு சில ஆண்டுகளில் சாளரம் அலுவலகங்கள், வீடுகள், தொழிலகங்கள் முதலியவற்றில் பயன்படலாயின. அடுத்து விண்டோஸ் 3.1 சிறந்த இயல்புகளுடன் வெளிவந்தது. இதில் நிகழ்நிரல் மேலாளி ஒன்று இருந்தது. அதே சமயம், மைக்ரோசாப்ஃட் தொழிலாளர்களுக்காக விண்டோஸ் 3.1- ஐ உருவாக்கிற்று.இந்நிலையில் சாளரம் பேரளவு பகுதி அடிப்படையில் அமைந்த வலையமைவுச் சூழ்நிலையில் பயன்படலாயிற்று. இப்பொருள்களில் ஒன்றுகூட இயங்கு தொகுதியாக இல்லை. எம்.எஸ் டாஸ் உடன் வேலைசெய்த நிகழ்நிரல்களே. அடுத்த பெரும் வளர்ச்சி விண்டோஸ் 95 ஆகும். இது முழுக்க முழுக்க இயங்கு தொகுதியே. இப்பொழுது எம்.எஸ்-டிஒஎஸ் கட்டுப்பாடு நீங்கியது. இதனால் பயன்பாடுகள் அதிகமாயின. அடுத்து விண்டோஸ் 98 வரலாயிற்று. இது பல புதிய பயன்களை அளிப்பது. இணையத்துடன் தொடர்பு கொண்டு வேலை செய்ய உதவுவது.இறுதியாக இப்பொழுது மேம்பட்ட விண்டோஸ் 2000 வந்துள்ளது.

Windows Explorer - சாளர ஆராய்வி : இது ஒரு நிகழ்நிரல்.கோப்புகளையும் மடிப்பட்டைகளையும் மேலாண்மை செய்ய உதவுவது.

Windows, parts of - சாளர பாகங்கள் :

1) சொல் திண்டு : இது சொல்முறையாக்கி 2) தலைப்புப் பட்டை : இது பயன்பாட்டின் பெயர் சொல்வது

3) அளவுப் பொத்தான்கள் : தலைப்புப்பட்டையில் உள்ளன. இவை மூன்று வகை

i) குறைந்த அளவுப் பொத்தான் சாளரத்தின் அளவைக் குறைப்பது. ii) உயரளவுப் பொத்தான் : சாளரத்தின் அளவை அதிகமாக்குவது. iii) மீட்புப் பொத்தான் சாளரம் தன் பழைய நிலைக்கு வர உதவுவது.

4) பட்டிப்பட்டை : தலைப்புப் பட்டைக்குக்கீழுள்ளது. வேறுபட்ட பட்டிகளைக் காட்டும்.

5) கருவிப்பட்டை : பட்டிப் பட்டைக்குக் கீழ் பல கருப்பட்டைகள் இருக்கும் இவை கோப்புகளைச் சேமிக்க உதவுபவை

Windows 98, uses of-strength 98 இன் பயன்கள் : இது பயனாளி நட்புள்ளது. எவரும் பயன்படுத்தலாம்.

1) இதிலுள்ள வரைகலைப் பயனாளி இடைமுகம் எல்லாத் தகவல்களையும் திரையில் காட்டவல்லது.

2) இதிலுள்ள பல பயனாளி நிகழ்நிரல்களைப் பயன்படுத்த உதவுவது :

1) கணிப்பான்

ii) வண்ணமிடல்

iii) சொல்லட்டை

iv) இணைய ஆராய்வி

v) படத்திரட்டு

3) இதில் மேலும் பல மென்பொருள் பயன்பாடுகள் உள்ளன : மைக்ரோ சாஃப்ட் ஆபீஸ்

4) ஒரே சமயம் பல பயன்பாடுகளை ஓடவிடலாம்.

5) மேசையை இருவழிகளில் பயன்படுத்தலாம்.

6) இதில் அருமையான இணைய இடைமுகம் உள்ளது.

7) எளிதாக இடையப் பக்கங்களை மேலோட்டமிடலாம்.

WML, Wireless Markup Language - டபுள்யூஎம்எல் கம்பியிலாக் குறிமைமொழி. கணிப்பொறி மொழிகளில் ஒருவகை.

word - சொல் : தகவல் அடிப் படை அலகு. பிட்டுகளின் கோலம். 8 பிட்டுச் சொல் g. bit, byte.

word format - சொல் படிவமைப்பு : ஒரு சொல்லில் உருக்களை அமைத்தல்.

word length - சொல் நீளம் : ஒரு சொல்லிலுள்ள பிட்டு களின் எண்ணிக்கை, (0க்கள் 1கள்)

word processing - சொல்முறையாக்கல் : இது கணிப்பொறி வழியமைந்த முறை அச்சிட்ட செய்தியை உருவாக்கல், பதிப்பித்தல், வரிசைப்படுத்தல், அச்சிடல், செலுத்தல் ஆகிய செயல் கள் இதில் அடங்கும்.

word processor, WP - சொல் முறையாக்கி, சொமு : கணிவயப்பட்ட தட்டச்சு எழுதி. எழுதிய பொருளை அப்படியே உருவாக்கும் வகைப்படுத்தும், பதிப்பிக்கும், அச்சிடும், செலுத்தும். இதில் 5 பகுதிகள் உண்டு.

1) விசைப் பலகை : தகவலை உள்விடல்.

2) துண்முறையாக்கி : பதிப்புச் செயல் பற்றி முடிவு எடுப்பது.

3) காட்சித் திரை : பதிப்பித்த தகவலைத் திரையில் காட்டல்.

4) நெகிழ்வட்டு : கோப்புகள் சேமிக்கப்படுதல்.

5) அச்சியற்றி : பாடத்தை அச்சிட


word rate - சொல்வீதம் : ஒரு சொல் தொடங்குவதற்கும் அடுத்த சொல் தொடங்கு வதற்கும் கழிந்த கால அளவு. இது நிகழ் அளவு ஆகும்.


word size - சொல் அளவு : குறிப்பிட்ட அளவு பிட்டுகள் எ-டு 8 பிட்டுச் சொல்.


word time - சொல் நேரம் : நினைவகத்தில் தகவலுக்குரிய ஒரு சொல்லை முறையாக்க ஆகும் நேரம்


work area - பணிப் பகுதி : நினைவகப் பகுதி. இதில் தகவல் இனங்கள் முறையாக் கப்படும் பொழுது தற்காலிகமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்.


wordpad - சொல்லட்டை : இது ஒரு எளிய சொல்முறையாக்கி; ஒரு நிகழ்நிரல் பாடத்தை அச்சிடவும் சேமிக்கவும் உதவுவது.


working programme - செயல் படும் நிகழ்நிரல் : செல்திறனுள்ள நிகழ்நிரல். எந்திர மொழியாக மாற்றப்பட்டுக் கணிப்பொறியால் நிறைவேற் றப்படுவது.


workspace - பணியிடம் : கணிப்பொறி நினைவக இடம்: சரமுறையாக்கு மொழியில் முறைப்படுத்தப்பட வேண்டிய சரத்தைக் கொண்டது.


Word Computer Citizen - உலகக் கணிப்பொறிக் குடிமகன் : இம்மையம் பாரிசில் அமைந்துள்ளது. கணிப்பொறி அறிவை ஒவ்வொரு உலகக் குடிமகனுக்கும் வழங்குவது.


WorldTel - வோர்ல்டு டெல் : இலண்டனில் அமைந்துள்ள தனியார் துறை நிறுவனம். அனைத்துலகத் தொலைத் தொடர்பு ஒன்றியத்தால் உருவாக்கப்பட்டது. வணிக அளவில் வளரும் நாடுகளில் செய்தித்தொடர்பு அகக்கட்டமைப்பை வளர்ப்பது. இதன் தலைவர் திரு. சாம் பிட்ரோடா, தமிழ் நாட்டில் இணைய நிலையங்களை அமைத்து இணைய அறிவு வளரத் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

writable control storage - எழுதும் கட்டுப்பாட்டுச் சேமிப்பு : நுண் நிகழ்நிரல்களைக் கொண்ட கட்டுப்பாட்டுச் சேமிப்பின் பகுதி. இதைக் கோப்பறையிலிருந்து சுமையேற்றலாம்

write - எழுது : ஒரு சேமிப்பிலிருந்து மற்றொரு சேமிப்பிற்குத் தகவல்களை மாற்றுதல்

write error - எழுத்துப்பிழை : சேமிப்புக் கருவியமைப்பில் தகவல் எழுதப்படாநிலை. தூசி,பதிவுப்பரப்புச் சேதம் முதலியவை காரணங்கள்

write head - எழுது-தலை : காந்த ஊடகத்தில் எழுதப்பயன்படும் மின்காந்தம் எ-டு காந்த நாடா

write pulse - எழுதுதுடிப்பு : இயக்கத் துடிப்பு நுண்ணறையில் எழுதுவது

write time - எழுதுநேரம் : சேமிப்புக்குத் தகவல் செல்வதற்கும் அது முடிவதற்கும் இடையிலுள்ள நேரம் ஓய்வு நேரம் நீங்கிய அணுக்க நேரம் இது படிக்கும் நேரத்தோடு தொடர்புள்ளது

WSYWIG, What you see is what you get. What you see

இணையமும் இடையமும்

(The Net and the Web)

-ജ: -

இணையம் - அரசுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

o

Er o 韃 -

கடலில் இந்திய இணைய உலகம் 2000 என்னும் மாநாடு நடந்தது. இதில் உழவர் ஒருவர் இணையத்தைக் கணிப்பொறி வழியாக ஆர்வமுடன் இயக்குதல்
240


உலகளவு வலையம்
மங்காத தமிழென்று

சங்கே முழங்கு

X

X-2 எக்ஸ்-2: 56 கேபிபிஎஸ் அலகில் வேலைசெய்யும் இரு பண்பிகளுக்குரிய நடப்புத் திட்ட அமைப்பு (சீரி). அமெரிக்க ரோபட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. தற்போதுள்ள பெயர் வி.90.

xerographic printer - உலர்ச்சியற்றி : பக்க அச்சியற்றி, இதில் உருக்கோலம் முழுப் பக்கத்திற்கும் பொருந்துமாறு அமையும். நகல் அச்சியற்றி என்றுங் கூறலாம்.

XML, Extensible Markup Language - எக்ஸ்எம்எல், விரிகுறி மொழி, விகுமொ : ஒரு புதிய இணைய மொழி. இடையத்தை அறிவார்ந்ததாக்குவது. இதற்கு எந்திரத் தகவல் பயன்படுத்தப்படும். இத்தகவல் இடையப் பக்கங்களின் உள்ளடக்கம் அமைப்பு ஆகியவை பற்றியவை. புதிய மொழிகளுக்கு வாயிலாக இருப்பது. இசைக் குறிமானம், கணித மற்றும் வேதிக்குறியீடுகள் முதலியவற்றை இடையத்தின் வழிஅனுப்ப உதவுவது. இதைப் பாட வடிவில் அனுப்பலாம். தொழில் துறையிலும் பயன் படுவது. இதற்கு நல்லவருங் காலம் உள்ளது.

XOR - Exclusive OR - சிறப்பு அல்லது : தனி, அல்லது.

X-series - எக்ஸ் வரிசை : தரத் தொடர்; சிசிஐடிடியினர்ல் பரித்துரைக்கப்பட்டுள்ளது.

x - y cursor addressing - எக்ஸ்-ஒய் குறிப்பி முகவரியிடல் : திரையில் குறிப்பியின் நிலையை இடமறிதல், இதற்குப் பார்வையாக எக்சையும் (கிடைமட்டம்) ஒய்யையும் (செங்குத்து) ஆயத்தொலை நிலையாகக் கொள்ளுதல்.

x - y plotter - எக்ஸ் - ஒய் வரைவி : தகவல் குறிப்பி.

Y

Y2K - ஒய்2கே: ஆண்டு 2000.

Y2K problem - ஒய்2 சிக்கல் : 2000 ஆண்டுச் சிக்கல். வேறு பெயர் 2000 ஆண்டுப் பிழை. 1999 லிருந்து 2000க்குள் கணிப்பொறி எண் குழப்பம். 2000 என்பதற்குப் பதிலாக 1990க்குச் செல்லலாம் எனக் கருதப்பட்டது. சிக்கல் ஓர் எண்ணைப் பொறுத்ததே. அனைவரும் நினைத்தபடி அவ்வளவு கடுமையாக அமையவில்லை. பெருஞ்செலவில் உலகம் முழுதும் இச்சிக்கல் எளிதாகத் தீர்க்கப்பட்டுக் கணிப்பொறி கள் ஒழுங்காக இயங்கத் தொடங்கின. பா. Millennium bug.

Y-position - ஒய் நிலை : துளையிட்ட அட்டையின் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/W&oldid=1047071" இலிருந்து மீள்விக்கப்பட்டது