X

X-2 எக்ஸ்-2: 56 கேபிபிஎஸ் அலகில் வேலைசெய்யும் இரு பண்பிகளுக்குரிய நடப்புத் திட்ட அமைப்பு (சீரி). அமெரிக்க ரோபட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. தற்போதுள்ள பெயர் வி.90.

xerographic printer - உலர்ச்சியற்றி : பக்க அச்சியற்றி, இதில் உருக்கோலம் முழுப் பக்கத்திற்கும் பொருந்துமாறு அமையும். நகல் அச்சியற்றி என்றுங் கூறலாம்.

XML, Extensible Markup Language - எக்ஸ்எம்எல், விரிகுறி மொழி, விகுமொ : ஒரு புதிய இணைய மொழி. இடையத்தை அறிவார்ந்ததாக்குவது. இதற்கு எந்திரத் தகவல் பயன்படுத்தப்படும். இத்தகவல் இடையப் பக்கங்களின் உள்ளடக்கம் அமைப்பு ஆகியவை பற்றியவை. புதிய மொழிகளுக்கு வாயிலாக இருப்பது. இசைக் குறிமானம், கணித மற்றும் வேதிக்குறியீடுகள் முதலியவற்றை இடையத்தின் வழிஅனுப்ப உதவுவது. இதைப் பாட வடிவில் அனுப்பலாம். தொழில் துறையிலும் பயன் படுவது. இதற்கு நல்லவருங் காலம் உள்ளது.

XOR - Exclusive OR - சிறப்பு அல்லது : தனி, அல்லது.

X-series - எக்ஸ் வரிசை : தரத் தொடர்; சிசிஐடிடியினர்ல் பரித்துரைக்கப்பட்டுள்ளது.

x - y cursor addressing - எக்ஸ்-ஒய் குறிப்பி முகவரியிடல் : திரையில் குறிப்பியின் நிலையை இடமறிதல், இதற்குப் பார்வையாக எக்சையும் (கிடைமட்டம்) ஒய்யையும் (செங்குத்து) ஆயத்தொலை நிலையாகக் கொள்ளுதல்.

x - y plotter - எக்ஸ் - ஒய் வரைவி : தகவல் குறிப்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/X&oldid=1047072" இலிருந்து மீள்விக்கப்பட்டது