கனியமுது/காதல் நோய்.

தொடுகின்ற பொருளெல்லாம் சோற்றுக் கில்லாத்
தொழிலாளிப் பெருமூச்சாய்க் கொதிக்குங் கோடை
சுடுகின்ற பகற்கொடுமை தணிக்க எண்ணித்,
துணை வனுடன் கடற்கரைக்குச்சென்ற மர்ந்தேன்.
படுகின்ற துயர்குறையத் தென்றல் தீண்டப்-
பக்கத்தில் சேல்விழியாள் மெய்யுந் தீண்டக்-
கெடுகின்ற இடைவெளியை வாழ்த்திக் கொண்டே
கிறங்குமொரு காதலனின் நிலையைக் காட்டி...

"என்றப்பா உனக்கிந்த நிலைமை?" என்றேன்.
ஏனென்றால் அவன் இன்னும் எடுப்புச் சோறே!
"ஒன்றல்ல, இரண்டல்ல; திரும ணத்தால்
ஓயாத தொல்லையப்பா! எனக்கு வேண்டாம்!
இன்றுபோலத் தனியாளாய் என்றும் வாழ்வேன்!
எழுந்திரப்பா, நடந்திடலாம்!" என்றான் நண்பன்.
"நன்றல்ல பெண்ணின்றி வாழ்ந்திருத்தல்;

நான்சொல்வ தவ்வளவே!" எனஎ முந்தேன்.

9

அங்கொருபெண் நடைபாதை மரத்தின் கீழே
     அமர்ந்திருந்தாள்; வயது பதி னெட்டி ருக்கும்.
தங்கங்கர் மேனியெங்கும் தணலால் வெங்த
     தழும்புகள் போல் தோன்றிடவே அருகிற் சென்றோம்,
அங்கமெலாங் குறைந்தழுகுங் தொழுநோய், அந்தோ!!
    ஆடையினால் போர்த்திடவே முயலு கின்றாள்;
எங்களையுங் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே
    இளங்கையும் புரிகின்றாள்! அவளேக் காட்டி-

“இவளுங்தான் பெண்பிறவி! யாருக்காக
    இவளிங்கே வாழ்கின்றாள், பயனில் லாமல்?
இவளைப்போய் ஆணொருவன் மனைவி யாக்கி,
    இல்வாழ்வு துய்ப்பதற்கா வரப்போ கின்ருன்?
இவளையெலாம் பார்த்துவிட்டுத் திரு மணத்தில்
    எவ்வாறு நாட்டமெழும்? நட நீ!” என்றான்.
“தவறப்பா நீ சொல்லுங் தத்து வந்தான்;
    தப்பாமல் இவளுக்கும் ஒருவன் எங்கோ

“இருந்திடுவான், காட்டுகின்றேன், வா வா!” என்றேன்.
    இருவருமே மேற்சென்றோம். சாலே ஒரம்
விரைந்திடுமோர் சாய்க்கடையின் கரையில் குந்தி,
    வெற்றிலையில் காய்ந்துவிட்ட சுண்ணாம் பின்மேல்
நிறைந்து விழும் கழிவு நீரை அள்ளி ஊற்றி,
    நிம்மதியாய், ஈரமாக்கி வாயி லிட்டுக்,
கரைந்திடாமல் மெல்லுகின்ற ஒருவன் கண்டோம்!
    கவனியப்பா; இவனேதான்; இவன் பின் செல்வோம்!”


என்றுரைத்தேன். பின்தொடர்ந்தோம்; என்ன விங்தை!
    எண்ணியது சரியாக, எதிர்ப்பு றத்தில்
சென்றடைந்தான்; வரவேற்றாள் தொழுநோய்க் காரி!
    சிரிப்பென்ன, அணைப்பென்ன, சிறிது நேரம்!
‘வென்றுவிட்டேன்; வாழ்க்கையெனில் ஆண்பெண் ஒன்றும்
    விதிமுறையை உணர்த்திவிட்டேன்! எனக்கு தித்தேன்!!’
“நன்று, நன்று! நமக்கினிமேல் கடைச்சாப் பாடு
    நடக்காதென் றப்பாவுக் குரைப்பாய்!” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கனியமுது/காதல்_நோய்.&oldid=1382811" இலிருந்து மீள்விக்கப்பட்டது