கலைக்களஞ்சியம்/அகோர முனிவர்
அகோர முனிவர் : (17 ஆம் நூ. முற்பகுதி) இவர் அகோரத் தம்பிரான் எனவும் பெறுவர். திருவாரூர்க் கோயிலில் அபிடேகக் கட்டளையை மேற்பார்த்தவர். வடமொழி , தென்மொழி வல்லவர். கும்பகோணப் புரணம், திருக்கனப்பேர்ப் புராணம், வேதாரணிய புராணம் என்னும் நூல்களை இயற்றியவர். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் என்பர்.