கலைக்களஞ்சியம்/அங்காடி

அங்காடி : கடைத்தெரு, கடைக்கும் வழங்கும். இதனைக் கூலவீதி எனவும் கூறுவர். (சிலப்-இந்திர- 23 அரும்பத). இது நாளங்காடி அல்லங்காடி என இரு வகைப்படும். நாளங்காடி-காலைக்கடை. காவிாிப்பூம்பட்டினத்திலே பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்னும் இரண்டிற்கும் நடுவே, மரங்கள் அடர்ந்த இடத்திலே, மரங்களின் அடியில் இருந்தது. (சிலப்-இந்திர 60-63). அல்லங்காடி-மாலைக்கடை. இது மதுரையில் பல்வேறு பறவைகளின் இசையெழுந்தாற்போன்ற ஆரவாரமுடையதாக இருந்த தென்று மதுரைக் காஞ்சி (544) கூறும். இருபெருநியமம் என்பதற்கு, நாளங்காடி அல்லங்காடியாகிய இரண்டு கூற்றையுடையதென்றார் என்று நச்சினார்க்கினியார் கூறுவர் (மதுரைக் 365).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அங்காடி&oldid=1453486" இலிருந்து மீள்விக்கப்பட்டது