கலைக்களஞ்சியம்/அஞ்சிலாந்தை மகனார்
அஞ்சிலாந்தை மகனார்: சங்ககாலப் புலவர். அஞ்சில் ஆந்தை மகள் நாகையார் எனவும் அஞ்சி அத்தை மகள் நாகையார் எனவும் பெண்பாலாகவும் இவர் கூறப்படுகிறர். அதியமான் அஞ்சியை அகநானூற்திற் புகழ்ந்துள்ளார். அஞ்சி அத்தை மகள் எனின், வள்ளலாகிய அதியமான் அஞ்சியின் அத்தை மகள் என நினைக்கவும் இடமுண்டு.(அகம். 352).