கலைக்களஞ்சியம்/அதிபத்த நாயனார்

அதிபத்த நாயனார் பெரிய புராணம் கூறும் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவர் ; சோழ நாட்டில் நாகப்பட்டினத்திலிருந்த பரதவர். இவர் தினந்தோறும் தம் வலைப்படு மீன்களுள் மிகச் சிறந்த ஒரு மீனைச் சிவனுக்கெனக் கடலில் விட்டுவிடும் நியமம் பூண்டவர். வறுமைக்காலத்து ஒருநாள் ஒரே பொன் மீன் கிடைத்தபோதும் அந்த நியமத்தை நிறைவேற்றி முத்தி பெற்றார்.