கலைக்களஞ்சியம்/அபுகிர் விரிகுடா

அபுகிர் விரிகுடா (Aboukir Bay) நைல்நதி முகத்துவாரத்தில் உள்ளது. 1798-ல் இங்கு நடந்த கடற்போரில் பிரிட்டிஷ் அட்மிரல் நெல்சன் பிரென்சுக் கப்பற்படையைத் தோற்கடித்தான். இதற்கு நைல் நதிப்போர் என்பதும், அபுகிர் விரிகுடாப்போர் என்பதும் பெயர்.