கலைக்களஞ்சியம்/அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி: எங்கும் சாதாரணமாகக் காணும் சிறு செடி; களையாக வளர்வது. பால் உள்ள கள்ளிகளில் ஒன்று. பூக்கள் மிகச் சிறியவை. ஆண்
பெண் பூக்கள் சயாதியம் என்னும் மஞ்சரியாக இருக்கும். அம்மான் பச்சரிசியில் பல மிகச் சிறிய சயாதியங்கள் இலைக்கக்கங்களில் நெருங்கி இருக்கும். இவற்றைத்தான் குழந்தைகள் பச்சரிசி என்று வைத்துக்கொண்டு விளையாடுவார்கள். இதைப்போன்ற சிறு செடிகள் சில உண்டு. அவற்றைச் சின்ன அம்மான் பச்சரிசி என்பார்கள். குடும்பம் : யூபோர்பியேசீ (Euphorbiaceae). இனம் : யூபோர்பியா ஹர்ட்டா (Euphorbia hirta).