கலைக்களஞ்சியம்/அம்மொனைட்டுகள்

அம்மொனைட்டுகள் நாட்டிலஸ் போன்ற

அம்மொனைட்டுகள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கிடைப்பவை

1. அக்கான்தொசிரஸ், பக்கத் தோற்றம். 2. அதன் ஓரத் தோற்றம். 3. சங்கின் பொருந்து கோடுகளிலுள்ள சித்திர வேலைப்பாடு வார்ப்புப் போன்ற பாசிலின் மேல் படர்ந்திருப்பது. 4. லைட்டோசிரஸ்,ஓரத் தோற்றம். 5. அதன் பக்கத் தோற்றம்.

உதவி :சென்னை கல்லூரி மாகாணக் கல்லூரி -புவியியல் பகுதி

மெல்லுடற் பிராணிகள். இவை இப்போது இல்லை. பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்தன. இடைப்பிராணியுகத்தில் (Mesozoic period) இவை எண்ணிக்கையிலும் வகையிலும் ஏராளமாக இருந்தன. இவற்றின் பாசில்களை அந்தக் காலத்துப் பாறைகளிலே பல தேசங்களிலே காணலாம். இவற்றின் கூடுகள் ஒரே மட்டத்திலிருக்கும் சுருளாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கூட்டிலும் அறையறையாகத் தடுத்திருக்கும் இவை பாசில்களாவதற்கு மிகவும் ஏற்றவையாக இருந்ததால், எண்ணிறந்த அளவில் இவை கிடைக்கின்றன. இடைப்பிராணியுகத்தின் திரையாசிக, ஜுராசிக கிரிப்டேஷஸ் என்னும் மூன்று பிரிவுகளிலும் இவை வியாபித்திருந்தன. அந்தக் காலத்தைப் பல அடுக்குகளாக (zones) பிரிப்பதற்கு இந்தப் பாசில்கள் பெரிதும் பயன்படுகின்றன. மானிட இயலார் மட்கலங்கள் உடைந்த ஓட்டைக் கொண்டு எவ்வாறு மனிதனுடைய நாகரிகக் காலப் பிரிவுகளை அறிந்து கொள்ளுகின்றனரோ, அவ்வாறு தொல்லுயிரியலார் அம்மொனைட்டுகளைக் கொண்டு இடைப் பிராணியுகத்தின் பிரிவுகளை அறிந்து கொள்ளுகின்றனர். இவை காலத்தைக் குறிக்கும் அடையாளங்களாக உதவுகின்றன. இந்தியாவிலும் அம்மொனைட்டுகள் அகப்படுகின்றன. திருச்சிராப்பள்ளிக்கருகில் கிரிட்டேஷஸ் காலத்துக் கற்களில் இவை அகப்படுகின்றன. கண்டகி நதிக்கரையில் அகப்படும் சாளக்கிராமம் என்னும் சிலையும் ஒரு அம்மொனைட்டுதான்.