கலைக்களஞ்சியம்/அரக்கர்

அரக்கர்: இவர்கள் இராட்சதர் என்றும் கூறப்படுவர்; பதினெண் கணங்களில் ஒருவகையினர்; அசுரரின் வேறானவர். புலத்தியர் மரபினரென்று ஒரு சாராரும், காசிபர் மகன் ரட்சஸ் என்பவனுடைய மரபினரென்று விஷ்ணு புராணத்தாரும், பிரமன் கடல்களைப் படைத்து, அவற்றை இரட்சிக்க இவர்களைப் படைத்தானென்று வான்மீகியும் கூறுவர். இவர்கள் முனிவர்களுக்குத் துன்பமுண்டாக்கியும் வேள்விகளை யழித்தும் வந்தன ரென்றே புராணங் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரக்கர்&oldid=1454252" இலிருந்து மீள்விக்கப்பட்டது