கலைக்களஞ்சியம்/அரிசிற்கரைப் புத்தூர்

அரிசிற்கரைப் புத்தூர் தஞ்சாவூர் ஜில்லா, கும்பகோணத்துக்குத் தென் கிழக்கே 41 மைலில் அரிசிலாற்றங்கரையில் உள்ளது; அழகார் புத்தூர் என வழங்குகின்றது ; பெரிய புராணத்தில் செருவிலி புத்தூர் என்று அழைக்கப்படுகிறது; உண்மையானந்த முனிவர் பூசித்த தலம் ; புகழ்த்துணை நாயனார் தொண்டு

செய்து முத்திபெற்ற இடம். பஞ்சத்தால் ஏற்பட்ட பசியினால் மிகவும் தளர்வெய்தியிருந்த அவர் சுவாமிக்குத் திருமஞ்சனமாட்டும்போது குடத்தைச் சுவாமி தலையில் போட்டுவிட்டார். அவருக்குப் பஞ்சம் தீருமளவும் நாள்தோறும் ஒரு காசு படியாகச் சுவாமி அளித்து வந்தார். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரமும் இவ்வூருக்கு உண்டு. சுவாமி படிக்காசளித்த ஈசுவரர். அம்மை அழகாம்பிகை.