கலைக்களஞ்சியம்/அவுராக்

அவுராக் (Auroch) : ஐரோப்பியக் காட்டெருதுக்கும் காட்டெருமைக்கும் இது பெயர். எருது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முற்றிலும் அழிந்துவிட்டது. எருமை கிழக்கு ஐரோப்பியக் காடுகள் சிலவற்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பியக் காட்டெருமைக்குத்தான் இந்தப் பெயர் வழங்குதல் சரியாகும். காட்டெருது பாஸ் பிரைமிஜீனீயஸ், காட்டெருமை பைசன்பொனாசஸ் எனப்படும். இவையிரண்டும் மாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அவுராக்&oldid=1503295" இலிருந்து மீள்விக்கப்பட்டது