கலைக்களஞ்சியம்/ஆடாதோடை

ஆடாதோடை புதராக வளரும் ஒரு சிறு செடி.
ஆடாதோடை
சாதாரணமாக வேலிச் செடியாக நட்டு வளர்ப்பதுண்டு. இந்தியச் சமவெளிகள் எங்கும் உண்டு. கடல் மட்டத்துக்கு மேல் 4,000 உயரம் வரையிலும், இமயமலையின் அடிச்சரிவுகளிலும் காணலாம். இதற்கு வாசகா என்று வடமொழியிற்பெயர். ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளில் மிகவும் சிறந்த மூலிகை. மார்ச் சளி, சுவாசகாசம், சுரம், காமாலை, க்ஷயம் முதலிய பல நோய்களுக்குப் பயன்படும். இலையும் வேரும் இருமலுக்கு நல்ல மருந்து. குடும்பம்: அக்காந்தேசீ (Acan- thaceae); இனம்: ஆடாதோடா வாசிகா (Adha ஆடாதோடை toda vasica).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆடாதோடை&oldid=1456501" இலிருந்து மீள்விக்கப்பட்டது