கலைக்களஞ்சியம்/ஆறுமுகநயினார் பிள்ளை

ஆறுமுகநயினார் பிள்ளை (இ. 1952) திருநெல்வேலியினர். மெய்கண்டான் என்னும் திங்களிதழை நடத்தியவர். சாலிய அந்தணர் புராணம், சிவகலைப் புராணம் இயற்றியவர்.