காற்றில் வந்த கவிதை/பொன் கலப்பை

பொன் கலப்பை

சோனை மழை பெய்துவிடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளம். எங்கு பார்த்தாலும் செழிப்பின் அறிகுறி.

மரங்கள் தழைக்கின்றன. பசும்புல் தோன்றுகிறது. கழனிகள் புதிய இளமையும் அழகும் கொள்ளுகின்றன.

உழவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. மழை பெய்யாத காலத்தில் ஏற்பட்ட சோர்வெல்லாம் பறந்துவிடுகிறது. அவர்கள் உள்ளம் பூரிக்கிறது. உழுது பயிரிட்டு உலகத்தைக் காக்க அவர்கள் உற்சாகத்தோடு எழுகின்ருர்கள்.

அவர்களுடைய உற்சாகத்திலே என்னவெல்லாமோ பேசுகிருர்கள். பயிர் செய்வதற்கு முதலில் நிலத்தை உழ வேண்டுமல்லவா? மழை பெய்துவிட்டதால் உழவுக்குப் பக்குவமான நிலையிலே நிலம் இருக்கின்றது.

"பொன்ஞல் செய்த கலப்பைகளை எடுத்துக்கொண்டு வாருங்கள்" என்று உழவன் தனது உற்சாகத்தில் கூவுகிருன் கலப்பை மட்டுமா பொன்னல் செய்யப்பட்டிருக்கிறது? கலப்பையில் நீளமான சட்டம் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அதற்குக் கருவத்தடி என்று பெயர். அதன் ஒரு கோடியில் உழுகின்ற கலப்பையிருக்கும்; மற்ருெரு கோடியில் நுகத்தடியைக் கயிற்ருல் கட்டி அதில் மாடுகளைப் பூட்டுவார்கள். கருவத்தடியும் பொன்னல் ஆனது: துகத்தடியும் பொன்னல் ஆனது; பிரிக் கயிறும் பொன்னல் திரிக்கப் பட்டது. இவற்றை எல்லாம் எடுத்து வரும்படி உழவன் கூவுகிறான்.

அவனுடைய உற்சாகம் இன்னும் பொங்குகிறது. "பொன்னாலே செய்த கூடைகளே எடுத்து வாருங்கள். பொன்னை மாடுகளை ஒட்டிக்கொண்டு வாருங்கள்" என்று மேலும் சொல்லுகிருன். மாடுகள் உழவனுக்குப் பொன்னே போன்றவை. அவைதான் அவனுடைய பெரிய உடைமை.

கலப்பை, கூடை, மாடுகள் ஆகிய இவை மட்டும் போதுமா? உழுது சேறு கலக்கிப் பூமியை நலம் செய்து விதைப்பதற்கு நெல் வேண்டாமா? உழவன் நெல்லெடுத்து வர ஆணையிடுகிருன். அன்னச் சம்பா, அழகு சம்பா, சின்னச் சம்பா, சீரகச் சம்பா, முத்துச் ச.ம்பா, மிளகு சம்பா இப் படிப் பலவகையான நெல் மணிகளை எடுத்து வரவேண்டும் என்பது அவன் ஆணை.

உழவன் யானை கட்டிச் சேறு கலக்குவாளும்; குதிரை கட்டிச் சேறு கலக்குவாளும். இப்படிச் செய்து நெல் விதைத்து வெள்ளிங்கிரி என்ற மலைப்பகுதியிலிருக்கும் சோலையிலே விதவிதமான நெல் விளையச் செய்வானாம்.

மழை பெய்துவிட்டால் உழவனுக்கு உண்டாகும் மகிழ்ச்சியைப் பார்த்தீர்களா? இந்த மகிழ்ச்சியை ஒரு பாட்டு அழகாகக் கூறுகின்றது. வயல் வெளியிலே மிதந்து வந்த பாட்டு அது. தேவேந்திரப் பள்ளனை நோக்கிக் கூறியதாகப் பாட்டு வருகிறது:

பொன்னலே கலப்பைகளே எடுத்துவா தேவேந்திரா
பொன்னலே கருவத்தடி எடுத்துவா தேவேந்திரா
பொன்னலே நுகத்தடியும் எடுத்துவா தேவேந்திரா
பொன்ஞலே பிரிக்கயிறு எடுத்துவா தேவேந்திரா
பொன்னலே கூடைகளும் எடுத்துவா தேவேந்திரா
பொன்னை மாடுகளை ஒட்டிவா தேவேந்திரா
அன்னச்சம்பா அழகுசம்பா எடுத்துவா தேவேந்திரா
சின்னச்சம்பா சீரகச்சம்பா எடுத்துவா தேவேந்திரா
முத்துச்சம்பா மிளகுசம்பா எடுத்துவா தேவேந்திரா
ஆனைகட்டிச் சேறுகலக்கி அன்னச்சம்பா நாத்துமிட்டு குதிரைகட்டிச் சேறுகலக்கிக் கொத்துச் சம்பா
                                                நாத்துமிட்டு
வெள்ளிங்கிரிச் சோங்கிலே விதவிதமா நெல்விளைப்போம்

[குறிப்பு: வெள்ளிங்கிரி என்பது கோயம்புத்துாருக்குச் சற்று தொலைவில் உள்ள மலை சோங்கு-சோலை.]

இவ்வாறு உற்சாகமாகப் பயிர் செய்து நெல் விளைந்துவிடுகிறது.

களத்தில் நெல் குவியல் குவியலாகக் கிடக்கிறது. உழவன் உள்ளம் பூரித்துப் போகிறது.

உழவன் கருணை நிறைந்தவன். அவன் தன் உழைப் பால் உயிர்களுக்குப் பசிப்பிணியைப் போக்குகிறவனல்லவா? அதனால் நல்ல விளைச்சல் கிடைத்தவுடனே அறம் செய்ய நினைக்கிருன். தங்க வள்ளத்திலே நெல்லெடுத்துத் தாசர்களுக்கு வழங்கும்படி அவன் கூறுகிருன். கோயிற் பூசாரிகள், உடற் குறையுள்ளவர்கள் ஆகிய எல்லோருக்கும் தாராள மாகக் கொடுக்கிருன். மீதியுள்ள நெல்லைத்தான் அவன் சேமித்து வைக்கிறானாம்.

நெல் விளைந்த மகிழ்ச்சியிலே பள்ளிகள் ஆரவாரித்து மங்கல ஒலி செய்வார்கள். அப்படிச் செய்வதற்குக் குலவையிடுதல் என்று பெயர். தருமம் செய்த பின்னர் மீதியுள்ள நெல்லை மச்சிலும் குச்சிலும் போட்டுவிட்டுக் குலவையிடும் படி பள்ளிகளை உழவன் பணிக்கிருன்.

தங்க வள்ளம் கையிலெடுத்துத் தாசருக்குப் பிச்சையிடு
பொன்னு வள்ளம் கையிலெடுத்துப் பூசாரிக்குப்
                                                பிச்சையிடு
முச்சியிலே நெல்லெடுத்து முடவனுக்குப் பிச்சையிடு
மச்சிலேயும் குச்சிலேயும் மிச்சநெல்லைக் கொட்டிவை
போடுங்கடி பெண்டுகளே பொன்னலே ஒரு குலவை
எடுங்களடி பெண்டுகளே எல்லாரும் ஒரு குலவை
தேவேந்திரப் பெண்டுகளே சேர்ந்து குலவை
                                                      யெடுங்களே
சேர்ந்து குலவை யெடுங்களே தேவேந்திரப்
                                                      பெண்டுகளே

[முச்சி.சிறிய முறம். தேவேந்திரப் பள்ளிகளைக் குலவை யிடும்படி உழவன் கூறுகிருன்.]