கால்டுவெல் ஒப்பிலக்கணம்/021-033

 கூ.திராவிட மொழிகளின் மிகப் பழைய எழுத்துச் சான்றுகள்


மிகப் பழைய வடமொழிக் காவியங்களாகிய இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களில் திராவிடச் சொற்கள் காணப்படுகின்றன. ஆனால், அவை மிகச் சிலவே. அச்சிலவற்றைக் கருவியாகக்கொண்டு கி.பி. ஒன்பது அல்லது பத்தாவது நூற்றாண்டிற்கு முற்பட்ட திராவிட மொழிகளின் பண்டைய நிலைமையை ஆராய்ந்தறிய முடியாது. ஒன்பதாவது நூற்றாண்டிற்கு முற்பட்டதாக யாதொரு தமிழ் நூலும் எழுதப்பட்டிருக்கக்கூடும் என்று சொல்வதற்கில்லை*

உலகத்தில் எழுத்தானியன்ற பழைய நூல்களிடைக் காணப்பெறும் பண்டைய திராவிடச்சொல் மயிலின் பெயர்க்குரிய சொல்லாகும். கி.மு.1000 ஆண்டுகளுக்கு முன்னாகவே தர்ஷிஷ், உவரி முதலிய இடங்களிலிருந்து மன்னன் சாலமனுடைய கப்பல்களில் ஏற்றிக் கொண்டுவரப்பட்ட வாணிபப்பொருள்களுள் மயிலிறகும் ஒன்றாகும் என்பது எபிரேய விவிலிய நூலிற் காணப்படும் சான்றாகும்.

இவ்விடத்தில் மயிலிறகு என்பதற்கு 'அரசர்' பகுதியில் 'துகி' என்ற சொல்லும், * வரலாற்று ’ப் பகுதியில் 'தூகி' என்ற சொல்லும் வருகின்றன. மலையாளக் கரையில் இப்பொருளில் இன்று வழங்கும் சொல் மயில் (தமிழ் -


  • இம்முடிபு தவறானதாகும். பிற்கால ஆராய்ச்சிகள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் நூற்கள் இருந்தனவாக விளக்கியுள்ளன. 1. Tarshish. 2. Ophir. 3. Hebrew Text of the Books of Kings & Chronicles. மயில்; வடமொழி மயூர). 'சிகி' (சிகையை உடையது) என்ற சொல்லும் வடமொழியில் வழங்குவதொன்றாம். ஆயினும், பழைய தூய தமிழ் - மலையாள மொழியில் இதற்குச் சரியான பொதுப் பெயர் "தோகை" (அழகிய தோகை அல்லது இறக்கைகளை உடையது) என்பதாம்.இதன் வேர்ச்சொல் தோக், துக் அல்லது தூக் ஆகும்; பினீஷியர் இதனைத் துக் என்றனர். இதன் உயிரொலி விவிலியக்குறிப்பில் குறில் கெடிலாக மயங்குவதும் தமிழ் வழக்கைத் தழுவியதே.

தோகை என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல் தோக் அல்லது தூக் ஆயினும், இதன் மிகப் பழைமையான மூலவடிவம் தொ அல்லது து என்பதே என்று தோன்றுகிறது. பிற சொற்களுடன் ஒப்புமைப்படுத்தி நோக்க ஈற்றில் வரும் க் அல்லது கு ஒரு சாரியையே என்று காணப்படும். முதலில்) இச்சாரியை தொழிற்பெயர்விகுதியாயிருந்து பின் அதுவே ஒரு துணைப் பகுதி ஆயிற்றுப்போலும். இச்சொல்லின் பழைமைபற்றி மாக்ஸ்மூலர் இவ்விளக்கம் சரியாயின் ஆரியர் வருமுன் இந்தியாவில் வழங்கிய தமிழ்க் குழுவின் பழைமை இதனால் நன்கு விளக்கப்படும் ” என்று கூறுகிறார். இவ்விளக்கம் சரி என்பதிலும், அதன்மூலம் மாக்ஸ்மூலர் கொண்ட முடிவு சரியானதே என்பதிலும் ஐயமில்லை. இவ்விடத்தில் தோகை என்ற இத்திராவிடச் சொல்லோடு (ஒலிப்பு தோஹை) அரபு மொழி தவஸ், கிரேக்கம் தஒஸ், இலத்தீனம் பவோ, ஆங்கிலம் பீஃபௌல் என்பவற்றின் ஒப்புமை நோக்கத்தக்கது. இந்திய வணிகர் பாபிலோனியா (பவேரு, பழம் பாரசீகம் பபிரு) வரையிற் கடல் வழியாகச் சென்று அந்நாட்டில் முதல்முதலாக மயிலை விற்பனை செய்


1. Phoenicians. 2. Pea-fowl. 3. Baveru. 4. Babiru. தனர் என்று புத்த நூல்கள் கூறுவதாக மினாயெஃப் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

மேற்கூறிய எபிரேய நூற்களில் கூறப்படும் பிற கீழ் நாட்டு வாணிபச் சரக்குகள் குரங்கு, தந்தம், சந்தனம், அகில் முதலியவையாம். இவற்றுள் குரங்கு என்பதற்கான கோஃப் என்ற சொல் வடமொழி கபி என்பதனேடும், கிரேக்கம் கேபஸ் என்பதனோடும் ஆங்கிலம் ஏப் என்பதனோடுங்கூடத் தொடர்புபடுத்தப்படுகிறது. எனினும், எகிப்திய மொழியிலுள்ள காஃப் இவற்றினும் - பழைமை வாய்ந்ததும் பொருத்தமானதுமான தொடர்பாகும். தந்தத்தினைக் குறிக்கும் ஷென் ஹப்பிம் என்ற தொடரிலுள்ள ஹப் என்பதும் எகிப்தியக்கின் அப் என்பதேயாகயிருக்கக்கூடும். சங்தனம் என்பதன் பெயராகிய அல்கும் என்பது வட மொழியில் அதே பொருளின் பெயராகிய வல்குக' என்பதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. இவ் வட சொல்லின் இன்னொரு பொருள் என்பதாம். இம்மூன்று சொற்களுமே ஒன்றுடனொன்று தொடர்புடையவையாக இருக்கக்கூடும். அகிலின் பெயர்கள் அஹலிம், அஹலக் என்பன. இவை வடமொழி அகரு என்பதைவிடத் தமிழ் - மலையாளம் அகில் என்பதனுடனேயே பெரிதும் தொடர்புடையவாம். எனவே, பொதுப்பட நோக்கின், மூன்று மொழிகளும் ஒன்றற்கொன்று தொடர்புடையனவே.

கிரேக்க மொழியில் நெல்லின் பெயராகிய ஒருஸா மிகப்பழமை வாய்ந்த தொன்றாகும். ஐரோப்பாவுக்கு இந்தியாவினின்றும் அரிசி ஏற்றுமதியான பொழுதே இச்சொல்லும் உடன்போயிருக்கவேண்டும். இஃது அரிசி


1. Minayef, 2. Paper by Prof. Weber in the Indian Antiquury, May 1873, 3.Kof. 4.Ape, 5. Shen habbim, 6. Algum, 7.Vulguku, 8,Oruzu. என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. மலையாளத்திலுள்ள அரிசி என்னும் தமிழ்ச் சொல்லின் சிதைவே.

கிரேக்க மொழியின்கண்ணுள்ள முதல் திராவிடச் சொல் கார்ப்பியன் என்பதாம். தெஸியாஸ் என்பவர் இலவங்கப்பட்டைக்குக் கொடுத்த பெயர் இது. ஹெரடோட்டஸ் என்பவர் இலவங்கப்பட்டையைக் கார்ஃபியா” என்று கூறினர். அச்சொல் காய்ந்த சுப்பி என்று பொருள்படும். பினீஷியர்கள் அதனைக் கின்னமோமன் என்பர் ; இதிலிருந்தே ஆங்கிலக்கில் சின்னமன் என்பது வந்ததாகும். அரபு மொழியிலுள்ள கிர்ஃபாஹ் என்ற சொல்லுடன் கெலியாஸ் குறித்த கார்ப்பியன் என்ற சொல் நெருங்கிய தொடர்புடையதாயிருப்பது தெளிவு. திராவிடச் சொல்லாகிய கருவாப்பட்டை என்பதனுடன் அதற்குத் தொடர்பிருப்பதும் எளிதிற்றெளியப்பெறும். இந்தியாவைப்பற்றித் தாம் எழுதிய கட்டுரையொன்றில் கிரேக்கர் 'முரோரோதா' என்று குறிப்பது கார்ப்பியன் என்னும் இந்திய மரமே என்றும், அதிலிருந்து மணமுள்ள ஒரு நெய் எடுக்கப்படுகிறதென்றும் தெஸியாஸ் எழுதியுள்ளார். இது கருவாப்பட்டைத் தைலம் என்பது தெளிவு. ஆகவே அவர் குறித்தது தமிழ் மலையாளச் சொல்லாகிய கருப்பு அல்லது கரப்புத் தைலம் என்பதையேயன்றிச் சிங்கள மொழியில் வழங்கும் வட சொற்றிரிபாகிய குருந்து என்பதை அன்று. மலையாளத்தில் கருவாப்பட்டை நெய்க்குக் காப்புக் தைலம் என்றும், தமிழில் கருவாப்பட்டை மரத்திற்குக் கருவ, கருவா என்றும் பெயர்கள் வழங்குகின்றமையுங் காண்க.

மேலும் இச்சொல்லின் வேராகிய கரு-(கர்) என்பதற்குக் கருமைகிறமும், எரிப்பு என்னும் சுவையும் ஒருங்கே


1. Karpion, 2. Ptesias, 3. Karphea, 4. Kinnamomon, 5. Cinnamon, 6. Kirfah. பொருளாயிருப்பனவுங் காண்க. வடமொழி கர்ப்பூர(ம்) என்பதற்கு வடமொழியில் பகுதியின்மை நோக்க, அஃதும். இதே தமிழ்ச்சொல் மூலத்தினடியாக எழுந்ததே எனலாம். இதோடு கருப்பு என்னும் இச்சொல்லிலும், தோகை என்னும் சொல்லிலும், பு, கு என்ற தொழிற்பெயர் விகுதிகள் துணைப்பகுதிகளின் சாரியையாக வந்துள்ளன; ஆதலால் இவ் விகுதிகளின் வழக்கு கெஸியஸ் காலம் (அதாவது கி. மு. 400) முதற்கொண்டு உள்ளது என்பதும் தெளிவாகின்றது.

வடமொழித் தொடர்பற்றதாய் திராவிட மொழிகள் இருந்தமைக்குச் சான்றுபகரும் தொன்னூல்கள் கிரேக்க மொழிகளிலேயே காணப்படுகின்றமை வியக்கற்பாலதாம். பண்டைச் திராவிட மொழிச் சொற்கள் பெருந்தொகையினவாய் அவற்றுள் வழங்கப் பெற்றுள்ளன. டாலிமி என்னும் கிரேக்க நில நூலாசிரியர், பெரிப்ளுஸ் மரிஸ் எரித்ரை என்னும் நூலின் ஆசிரியர், இயற்கை வரலாறு' என்னும் டாலின் ஆசிரியர் பிளைனி ஆகியோர் இச்சொற்களை எடுத்தாண்டுள்ளனர். ஊர்ப்பெயர்கள், மக்கட்குழுப்பெயர்கள் பல வற்றை அவர்கள் குறிக் துள்ளார்கள். அவற்றுட் பல இன்றும் எழுத்துக்கெழுத்து மாறுபாடில்லாமல் வழங்கப் பெற்று வருகின்றமை குறிக்கற்பாலதாம். கிரேக்கர்களால் எழுதி வைக்கப்பெற்றுள்ள அத்தகைய திராவிடச் சொற்களில் சில கீழே தரப்படுகின்றன:

(1) பாண்டியன் கிரேக்க மொழியில் இது பண்டியோன் என்று வழங்கப்பட்டுப் பாண்டி நாட்டு மக்களையும், பாண்டியனையும் குறிக்கின்றது. இச்சொல் வட சொற்றிரிபு என்று முன்னர் காட்டப்பட்டது. மெகாஸ்தெனிஸும், பிளைனியும் குறித்த பாண்டீ என்ற சொல் வட சொல்லே


1.Periplus Meris Erythrai ஒட்டியதே. ஆனால், பிளைனி பின்னர்க் குறிப்பிட்டதும், பெரிப்ளூஸ் வரலாற்றிற் காணப்படுவதுமாகிய சொல் திராவிடச் சொல்லின் வடிவை யொட்டி வந்ததாகும். ஆன் ஈறும், இகரச்சாரியையும் பெற்றுப் பண்டியோன் என்று வழங்கும் அது தமிழ்ச் சொல்லாகிய பாண்டியன் என்பதை நெருங்கி யொலிப்பது தெளிவு. கன்னடத்தின் ஆண்பால் விகுதி அம் என்பதாகும்; தெலுங்கிலோ உடு என்பதாகும். இதனால் பண்டைக்காலத்தில் தமிழ்ச் சொல்லமைப்புக்கள் பிற திராவிட மொழிகளிலிருந்து மாறுபட்டிருந்தன வென்றும், ஆனால் அச் சொல்லமைப்புக்கள் இற்றைநாள் வரையில் தமிழில் அவ்வாறே மாறதிருந்து வருகின்றன என்பதும் இப் பாண்டியன் என்ற சொல்லிலிருந்து ஊகிக்கப்படும். மொதூர பெஸிலியோன் பாண்டியோனிஸ்[1] என்ற கிரேக்க மொழித் தொடரிலிருந்து கிறித்து பிறப்பதற்கு முன்னரேயே பாண்டியர்கள் தங்கள் தலைநகரைப் பொருநையாற்றின் கரையிலிருந்த கொற்கையினின்றும் வையையாற்றின் கரையிலிருந்த மதுரை நகருக்கு மாற்றிக் கொண்டார்கள் என்பதும் தெளியப்படும். வட இந்தியாவிலுள்ள மத்ரா என்பதை கிரேக்கர்கள் மெதொரா என்று குறித்துவந்தமை இங்கு நினைவு கூரற்பாற்று.

(2) சேரன் பெயரை டாலிமி, கேரொபொத்ரஸ்[2] என்றும், பிளைனி கேலோபொத்ரஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இதுவும் வடமொழிப் பெயரே. ஆனால் வட மொழி கேரளபுத்ர என்பது மலையாளத்தில் கேர, கேல என்று சுருங்கி வழங்கும்.

(3) சோழன் பெயர் டாலிமியால் சோர என்ற உருவில் தரப்படுகிறது. இதன் வடமொழி உரு ஸோல, தெலுங்கு சோள. கிரேக்கச் சொல்லின் முதல் மெய்யான ஸ் என்பது தமிழ் ஒலிப்பையே காட்டுகிறது (தமிழ் நாட்டினர் சோழன் என்ற சொல்லை ஸோழன் என்றே ஒலிப்பர்). இடையில் வரும் மெய்யாகிய ரகரம் கமிழின் சிறப்புழகரத்தினிடமாக மேல்நாட்டு மக்களால் இன்னும் வழங்கப்படுகிறது. இவ் ஒலி தெலுங்கு, வடமொழி முதலியவற்றில் இல்லை. எனவே, தெலுங்கர் இதனை டகாமாகவும் ளகரமாகவும் (சோட-சோள என்றும்), வடமொழியாளர் டகரமாகவும் (சோட), பாலிமொழியார் ளகரமாகவும். (சோள என்றும்) எழுதினர். கிரேக்கர் இதனை ட, ள, ல என்றெழுதாமல் ர என்றெழுதியதிலிருந்து சிறப்பு ழகர ஒலிப்பும், அதனை உடைய தமிழும் மிகப் பழைமையுடையன என்று விளங்குகின்றமை காண்க. சோழனது தலைநகராகக் கிரேக்க மொழியில் கூறப்படும் ஒர்தர[3] உறையூர் ஆகவேண்டும்.

(4) கிரேக்கமொழியில் ஆர்காதோஸ்[4] என்ற இந்தியச் சிற்றரசன் பெயர் கூறப்பட்டுள்ளது. கிரேக்கர் அடிக்கடி நாட்டின் பெயரையும் மன்னன் பெயரையும் மயங்கக் கூறுவதுண்டு. அதன்படி ஆர்க்காடு என்ற ஊரின் பெயர் மன்னன் பெயராக மாறி யிருக்கக் கூடாதோ என்று ஐயுற இடமுண்டு. இதன் பெயர் கி.பி. 1340-ஆம் ஆண்டில் இபின்பதுாதா என்ற அராபிய எழுத்தாளரால் குறிப்பிடப்படுகிறது. ஆறு முனிவர் வாழ்ந்த காடு ஆதலால் இஃது ஆறு காடு என்று கூறப்பட்டது என்று அவ்விடத்துள்ளோர் கூறுகின்றனர்.[5] தமிழில் ஆறுகாடு என்பது பிற சொற்களுடன் சேர்ந்து தொடர் சொல்லாகும் போது ஆறுகாட்டு என்றாகும். கிரேக்கரது தகரம் இந்த டகாத்தின் ஒலிப் பெயரைக் குறிப்பிடுவதாய் இருக்க வேண்டும். இங்ஙனமாயின் பகுதியிலுள்ள உகர முதலிய மெய்கள் இரட்டுவதும், வல் எழுத்துக்கள் சொல்


1. Orthoura. 2. Arkatos- 3. ஆர்க்காடு என்பதே சரியான தமிழ்ப்

பெயர்.

AM வின் இடையில் உயிர்களினிடையே நலிந்த திறந்த ஒலிப் புடையவையாயும், இாட்டித்தபோது கடுமையான ஒலி யுடையவையாயும் திராவிட வழக்கில் வருவதும் பழைமை யானவை என்பதற்கு இது சான்று தருகின்றது.

(5) கரூர் என்ற சேரன் தலைநகர் அப்படியே கரூர் என்று கிரேக்க ஆசிரியர் வழக்கிலும் காண்பதால் இதிலுள்ள தமிழ் ஒலிகள் கழிந்த மூவாயிரம் ஆண்டுகளிலும் இன்றும் ஒலிக்கப்படுவது போன்றே ஒலிக்கப்பட்டன என்பது விளங்கும். கரூர் என்பதில் கரு ஊர் என்ற இரு சொற்கள் உள்ளன. இாண்டும் தனித் தமிழ்ச் சொற்களே. இச் சொற்களின் பழைமையும் இதனால் உறுதிப்படுகிறது.

(6) மோடகலிங்கம் : மூன்று இலிங்கம் அல்லது மூன்று கலிங்கம் என்பது இதன் பொருளாகக் கொள்ளப்படுகிறது. இதனைக் குறித்த ஆராய்ச்சியை 41-ஆம் பக்கத்திற் காண்க! அப்படியாயின் தெலுங்கில் மூன்றுக்குச் சரியான சொல்லாகிய " மூடு " என்பதன் பழைமையையும் அதன்மூலம் தெலுங்கின் பழைமையையும் இது வலியுறுத்தும்.

(7) பியூட்டிஞ்சர் நிலப்படங்களிலும், ராவென்னா என்னும் நில இயல் ஆசிரியரின் நூலிலும் தமிரிகே,[6] திமிரிகே [7] என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவை தமிழைக் குறிப்பிடுபவையானால் இப் பழங்காலத்திலேயே திராவிடம் என்ற பெயருக்குப் புறம்பாகத் தமிழ் என்ற பெயரும் வழங்கப்பட்டது என்பது உறுதிப்படும். தமிரிகேயின் வடக்கிலுள்ளது ஆரியகே என்பது பெரிப்ளுஸ் என்ற நூலிற் காணப்படும். வராஹமிஹிரர் மலையாள நாட்டின் வடக்கிலுள்ளது ஆரியகம் என்றனர். எனவே, மலையாளக் கரையின் தென்பகுதி (மலபார்) திராவிட அல்லது தமிழ் மக்கள் இடம் என்றும், வடபகுதி ஆரியர் பகுதி என்றும் ஏற்படும்.


1. Damirice. 2. Dymirice. (8) மலையாளக் கரையிலுள்ள ஒரு நகரின் பெயர் கிரேக்க மொழியில் மூஸிரிஸ் [8] என்று காண்கிறது. இது முயிரி அல்லது முயிரிக்கோட்டையாக வேண்டும். துண்டிஸ் என்றும், நெல்கிண்டத்திலுள்ள கிண்டா என்றும் இன்னும் இாண்டு நகரங்கள் குறிக்கப்படுகின்றன. முன்னது துண்டி ஆகும் ; பின்னது இன்றையக் கன்னெற்றி ஆகும் என்பது பேரறிஞர் குண்டெர்ட்டின் கூற்று.

(9) பிளைனி கூறும் கொத்தனா-பெரிப்ளுஸ் கொத்தனரிகே [9]-என்பது கோழிக்கூட்டின் பக்கமுள்ள கடத்தநாடு அல்லது தலைச்சேரிப் பக்கமுள்ள கொளத்த நாடு எனக் கொள்ளப்படுகிறது. கடத்தநாடு, கொளத்தநாடு இரண்டும் மிளகுக்குப் பேர்போனவை.

(10) மலையாளக் கரையில் மிளகு கொண்டு செல்லும் படகுகளைப் பெரிப்ளுஸின் ஆசிரியர் ஸங்கா [10] என்றும், அங்கிருந்து இலங்கைக்கும் கங்கை நாட்டிற்கும் செல்லும் கப்பல்களைக் கொலந்தியோஃபோந்தா [11] என்றும் கூறினர். பின்னதன் முதற் சொல் விளங்கவில்லை. முன்னதற் கிணையான மலையாளச்சொல் சங்காடம் என்பதும், தெலுங்குச் சொல் ஜங்கால என்பதும் ஆம்.

(11) கொத்தியாரா [12] என்பது டாலிமி கூறும் ஆய்காட் டிற்கும், பெரிப்ளுஸ் கூறும் பரலியநாட்டிற்கும் தலைநகராகும். ஆய் அல்லது பரலியம் என்பது கிட்டத்தட்டத் தென்திருவாங்கூர் என்னலாம். பியூட்டிஞ்சர் நிலப்படங்களுள் இந்நகரே கொத்தார என்னப்படுகிறது. இந்நகர் தென்திருவாங்கூரில் இன்றும் சிறந்த வாணிக நகரமாக விளங்கும் கோட்டாறு என்பதாம். இப் பெயர் கோடு + ஆறு என இரண்டு சொற்களாலானது. டகரம் இாட்டுதல் முத


1. NMouziris. 2. Kottonarike. 3. Sangara. 4. Kolandiophonta. 5. Kottiara. லிய தமிழ் வழக்கின் பழைமைக்கும், தமிழ் ஒலிமுறையின் பழைமைக்கும் இப்பெயரே சான்று பகரும்.

(12) கொமரிய அக்ரன்[13]: இது குமரி முனைக்கு டாலிமி கொடுத்த பெயர். பெரிப்ளுஸில் இது கொமர் என்று அழைக்கப்படும். கேப் காமொரின் என்பது ஆங்கிலம். இது வடமொழிச் சொல்லாகிய குமாரியின் திரிபென்பர். ஆனால், கொமர் என்பது தமிழ் வடிவே. இங்கிலாந்திலுள்ள உவேல்ஸ் பகுதியில் கிம்ரி [14] என்று ஒர் ஊர் உள்ளது." கிம்ரி, கும்ரி, கிம்ரை என்றழைக்கப்படும் இப்பகுதி மக்கள் தென் இந்து ஸ்தானத்திலிருந்து பண்டைக்காலத்தில் இங்கு வந்தவர்கள். தென் இந்துஸ்தானத்தின் தென் கோடியிலுள்ள முனைக்குக் குமரி முனை என்ற பெயர் இச் சொல்லடியாகப் பிறந்ததேயாம்” என்று 1903-ல் வெளிவந்த வரலாற்றாராய்ச்சிக் குறிப்பொன்றனுள் காணப்படுகிறது.[15] தமிழிற் குமாரி என்பது குமரி என்றாகும். குமரிமுனையை யடுத்துள்ள மக்கள் இதனைக் குமர் அல்லது கொமர் என்றே கூறுவர். பெரிப்ளுளில் இப்பெயர் இவ்வடிவில் வழங்குவது வியப்பே. அகில் வருங் குறிப்பு : “ இதனையடுத்துக் கொமர் என்று ஓரிடம் உள்ளது. அங்கே ஒரு கோட்டையும், ஒரு துறைமுகமும் உண்டு. திங்களுக்கொரு முறை ஒரு பெண் தெய்வம் அங்கு வந்து நீராடிச் செல்லும் ; அப்போது திரளான மக்கள் அங்குக் குழுமி நீராடிச் செல்வர்". பண்டைக் காலத்திலேயே குமரி ஐந்து சிறந்த நீராடுந் துறைகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பியூட்டிஞ்சர் நிலப்படங்களில் குமரிமுனை குறிக்கப்படாதது விந்தையே.

(13) பாலிய என்றும், கரைய என்றும், ஆய் என்றும் கூறப்படுவது தென் கிருவாங்கூரை அடக்கிய பழைய அரசி


1. Komaria Akron. . 2. Cymri. 3. A Historical Souvenir issued on the occasion of the meeting of the British Medical Association at Swansea, 1903. யம் பகுதி. இது கொல்லம்முதல் தொடங்கி, கன்னியா குமரியை உள்ளடக்கி இருந்ததுடன் முத்துக்குளிக்கும் கொற்கைவரை எட்டியிருந்தது. திருவாங்கூருக்குப் புரளி என்றும், திருவாங்கூர் மன்னருக்குப் புரளீசர் என்ற பட்டம் இதனால் வழங்கப்படுகிறதென்றும், அப்பெயரால் முன் ஒரு கோட்டை இருந்ததென்றும் பேரறிஞர் குண்டெர்ட்டு கூறுகிறார். பரலிய என்பது கிரேக்கச் சொல்லாகவே இருத்தல் வேண்டும்.

(14) மேற்கூறப்பட்ட கரைய என்ற பெயர் சிறப்பாகக் குமரிக்கும் கொற்கைக்கும் இடைப்பட்ட இடத்திற்கு வழங்கியது. இது தமிழ் கரை என்ற சொல்லுடனும், கரையில் உறையும் கரையார் என்ற வகுப்பினர் பெயருடனும் தொடர்புடையது.

(15) கன்னியாகுமரிக்கும் காவேரிக்கும் இடையில் ஸோலேன் என்ற ஆற்றின் பெயரொன்று டாலிமியால் கூறப்படுகிறது. இதுவே கொற்கையின் தெற்கில் விழுவதாகவும் கூறப்படுகிறது. இது தாமிரபரணி ஆறாகவே இருக்க வேண்டும். இதன் தமிழ்ப்பெயர் பொருநை என்பது; வடமொழிப் பெயராகிய தாமிரபரணியின் பிற்பகுதிபோன் றொலிக்கிறது. கிரேக்க மொழியில் இதன் பெயர் எப்படி வந்ததென்று கூறமுடியவில்லை. அந்த மொழியில் இப்பெயர் சங்கு என்று பொருள்படுவதால், சங்கு அல்லது முத்துச் சிப்பிகள் எடுக்குமிடம் என்ற பொருளில் இப்பெயரை வழங்கியிருக்கலாம்.

(16) பேத்திகோ[16] என்பது பொதிகை.

(17) கொல்கை[17] என்பது கொற்கை. இன்றைய இலக்கியத் தமிழில் லகரம் றகரமாய்விடினும் முன் லகர மாகவே இருந்ததென்பதை இது காட்டுகிறது. பழைய கல்வெட்டுக்களில் கொல்கை என்றே எழுதப்பட்டுள்ளது. மலையாளத்தில் இன்றும் இது கொல்கா எனப்படும். இது துறை முகமாகவும் முத்துக் குளிக்குமிடமாகவும் இருக்கிறது. இதன் பெயரால் மன்னார் குடாவையே கிரேக்கர் கொல்கிக் குடா என்றழைத்தனர். பொருநையின் மணலால் இதன் கடற்கரை தார்ந்து இஃது உள்நாட்டில் சென்றபின் காயல் என்னுமிடம் துறையாயிற்று. இதுவே மார்க்கோ போலோவின் கயேல்[18] ஆகும். இக் காயலும் கடலினின்றும் விலகிய பின்தான் போர்த்துகேசியர் தூத்துக்குடி என்னும் சிற்றூரைத் துறைமுகமாக்கினர். கொற்கை என்னும் பெயர் கொல்கை அல்லது கொல்கிற கை ஆகும். தமிழில் கொல்கை என்பது படைக்கும், படைவீட்டிற்கும் இடக்கரடக்கற் பெயர் ஆம். தமிழர் அரசியன்முறை தோன்றிய இடம் இதுவே எனக் கொள்ளப்படுகிறது.

(18) கோரு: இது கோடி என்னும் தமிழ்ச்சொல். தனுக்கோடி என்றும் இது தமிழிற் கூறப்படும். ”இராமனது வில்” என்பதுவே தனு ஆகும். இங்குக் குறிக்கப்பட்டது இராமேச்சுரமே.

(19) கல்லிகிகொன்[19] என்பது இராமேச்சுரம் என்பர் சிலர். அதன் எதிர்க்கோடியாகிய கள்ளிமேடே[20] இது வாகும்.

(20) கோலிஸ், கோரு: இரண்டும் இராமேச்சுரம் அல்லது கோடியின் பெயர்கள். கோடி என்னும் வடசொல் தமிழில் கோழி என்றிருந்தது என்று இது காட்டும். வட சொல் டகரம் ழகரமானதற்கு, திராவிடம் தமிழ் ஆனது ஒர் எடுத்துக்காட்டு எனக் கூறியுள்ளோம்.

(21) மல்லி அல்லது மலய (மலை)-இது கலிங்கத்தின் வடக்கிலிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இது கஞ்சத் துள்ள மகேந்திர மலையாய் இருக்கலாம். எனினும், இவ்வளவு வடக்கிலும் தமிழ்ப் பெயராகிய மலை இருப்பது குறிப்பிடத் தக்கது. இராஜமஹாலின் பெயராகிய மாலெர் அல்லது மலேர் மலையர் என்ற பொருளிலேயே வருதல் காண்க.

(23) க்லெமென்ஸ் அலெக்ஸாண்ட்ரினஸ்[21] என்பவர் புத்தரை புத்த என்றும், சமணரை (வடமொழி ஸ்ரமண) லெஸம்னாய் என்றும் கூறுகிறார். இப்பெயர்கள் வடமொழிப் பெயர்களேயாயினும் அவை தமிழ் உருக்களை ஒத்கிருத்தல் கவனிக்கத் தக்கது.

(23) கிரேக்க மொழியில் எடுத்துக் கூறப்படும் தென் இந்திய இடப்பெயர்கள் பலவும் ஊர் அல்லது ஊர என்று முடிவது தமிழ் ஊர் என்பதைப் பெரிதும் ஒத்திருக்கிறது. அதன் முன்வரும் ந்த், த்த், ம்ப் என்ற கூட்டு மெய்கள் கூட தமிழ் எழுத்துத் தொடர்பை மிகவும் நினைப்பூட்டுகின்றன. இத்தகைய பெயர்கள் 23 உள்ளன.

கிரேக்க மொழியில் எடுத்துக் காட்டப்படும் பெயர்களுட் சிலவற்றிலிருந்து தமிழ்நாட்டில் ஆரியப் பார்ப்பனர் புகுந்து பல இடங்களில் தங்களையும் கங்கள் பெயரையும் நிலை நிறுத்திவிட்டனர் என்பது புலப்படும். மதுரையும், பாண்டியனும் வடசொற்களே. கபேரஸ் (காவேரி) என்பதும் வடசொல்லாகக் கொள்ளப்படினும் உண்மையில் திராவிடச் சொல்லேயென்று கொள்ள இடமுண்டு. கொமரியா (கன்னியாகுமரி)வும் கோரு (இராமேச்சுரம்) வும் வட சொற்களே. பொதிகையடியில் ப்ரக்மே[22] வாழ்ந்ததாக டாலிமி கூறுகிறார். இஃது இன்றைய பிரமதேசம் என்ற பழைய நகரமாயிருக்கக் கூடும். டாலிமிக்குப் பல நூற்றாண்டுகட்குப் பின்பு - கிரேக்கர்களிடமிருந்து வந்த இந்திய வாணிபம்


1. Clemens Alexandrinus. 2. Brachme. பாரசீகர்களிடம் கைமாறியதற்குப் பின்பு - எழுதப்பெற்ற

" கிறித்தவ ஊர் வரலாறு " என்ற நூலில் காஸ்மாஸ் இண்டிகோபுளுஸ்டெஸ் என்ற ஆசிரியர் தமிழ் ஊர்ப் பெயர்கள் சிலவற்றைக் குறித்துள்ளார். அவற்றுள், பூதோ பட்டின[23]மென்பது ஒன்று; டாலிமி முன்னர் இதனையே போதோ பேரோரா[24] என்று குறித்தனர். பட்டினம் என்பது திராவிடச் சொல்லே. இபின் பதுாதா குறிப்பிட்ட போத்ஃபட்டன் [25] என்பதும், நிக்கோலோ கோண்டி [26] குறிப்பிட்ட பூதேஃபிதானியா[27] என்பதும் இப் புதுப்பட்டினமே என்று கர்னல் யூல் ஆராய்ந்து காட்டியுள்ளார்.[28]

கிரேக்க நில இயல் நூலார் தென்னிந்தியாவின் மொழிகளைப் பற்றித் தெளிவான குறிப்புக்கள் ஒன்றுந் தரவில்லை. எனினும், அவர்கள் எடுத்துக் காட்டிய ஊர்ப் பெயர்களிலிருந்து சுவை பயக்கும் சில செய்திகளை அறியலாம். கிரேக்க ஆசிரியர்களின் நூல்களிலிருந்து கிடைக்கப் பெறும் திராவிட மொழிச் சான்றுகளே யாவரும் ஒப்பக்கூடிய பண்டைய சான்றுகளாகும். ஆகவே, அவற்றை நன்காராய்ந்ததிலிருந்து பெறக்கூடிய முடிபுகளாவன :

(1) கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் திராவிட மொழிகள் மாறுதலின்றி வழங்கி வருகின்றன.

(2) இன்று காணப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளின் பாகுபாடும், அம்மொழிகள் வழங்கிய நில எல்லையும் ஏறக்குறைய இதே நிலைமையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பும் இருந்து வந்தன.

(3) எழுத்து வடிவு வழக்கத்தில் வந்து விட்டது.

(4) இலக்கண அமைப்பு செம்மைப்பட்டு உறுதியுற்றது.


1. Poudo patana, 2. Podoperoura. 3. вodfattan. 4. Nicolo Conti. 5. Peudefitania. 6. Bombay Antiquary for August 1874, (5) கிரேக்க வணிகர்களின் வருகைக்கு முன்னரே இலக்கியங்கள் தோன்றிவிட்டன.[29]

(6) இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மொழிகள் பெரிதும் மாறுபாடின்றி வழங்கி வருகின்றமை, இலக்கியத் திருத்தமுற்ற காலத்திலிருந்து ஆசிய மொழிகள் மாறுபாடின்றியே வளர்ச்சியுற்று வருகின்றன என்ற வரலாற்றுப் பொது உண்மைக்குச் சான்று பகர்வதாகும்.

திராவிட மொழிகள் யாம் கூறியபடி சித்திய இனத்தைச் சேர்ந்தவை என்பது உண்மையானல் அவை அவ்வின மொழிகளுள் மிகமிகப் பழைமையானவை என்பதில் ஐயமில்லை. திரு. நாரிஸ் என்பவர் சித்திய இன மொழிகளைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார் :

" மாகியர் மொழியில் 15-ஆம் நூற்றாண்டிற்கு முன் ஒன்றும் எழுதப்படவில்லை. உக்ரிய மொழியிலோ 50 அல்லது 60 ஆண்டுகட்கு முன் எழுத்தே கிடையாது. பின்னிஷ் வீரக் காப்பியமாகிய கலெவல[30] என்பது எக்காலத்தது என்று அளவிடுவதற்கில்லை. வாய்மொழியாகவே நெடுங்காலம் அது பயின்று வந்துள்ளதாதலால், காலத்திற்குக் காலம் அது மாறியே வங்கிருத்தல் வேண்டும்." நெஸ்தோரியக் கிறித்தவரிட மிருந்தே[31] உய்குர் [32] என்ற கீழைத் துருக்கியரும், அவர்களிடமிருந்து மங்கோலியரும் எழுத்துக் கலை பயின்றனர். எனவே, கிராவிட மொழிகளின் தொன்மைப் பண் புடன் ஒப்பிடக்கூடிய வேறு எம்மொழியும் சித்திய இனத்திலேயே இல்லை என்பது தெளிவு.


1. எகிப்தை உரோமர்கள் வென்று கைப்பற்றிய காலத்தேதான் கிரேக்க வணிகர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அகஸ்தஸ் என்னும் உரோம முடிமன்னரின் நாணயங்களே இங்தியாவில் அகப்பட்டுள்ள உரோம நாணயங்களுள் காலத்தால் முதன்மையானவையாம். இவற்றுள் முப்பதுக்கு மேற்பட்டவை மலையாளக் கரையில் கண்டெடுக்கப் பெற்றவை.

2. Kalevala, 3, The Nestorian Christians, 4. Uigurs. ஆல்தாய்[33] மலைகளில் வாழ்ந்துவந்த பண்டைத் துருக்கியருக்குரியவை எனச் சீனரால் குறித்துவைக்கப் பெற்றுள்ள எட்டுச் சொற்கள் கிடைத்துள்ளன. இவை இன்றைய துருக்கியமொழியிலுங் காணப்பெறுவனவே. சித்திய இனமொழிகளில் மிகத்தொன்மைவாய்ந்த சொற்களாய்க் கிடைக்கப்பெற்றுள்ளன இச் சொற்களே. இந்த எட்டுச் சொற்களுள் மூன்று, இன்றேல், உறுதியாக இரண்டு சொற்களாவது திராவிடச் சொற்களே என்பதில் ஐயமில்லை. அம்மூன்று சொற்கள் கீழே காணப்படுவனவாம் :—

ஆல்தாய் அல்லது பண்டைத் துருக்கியம் இக்காலத் துருக்கியம் தமிழ்
கொரொ,
கொரி,
கான்
க்வரா,
கொரி,[34]
க்ஹான்[35]
கரு,
கிழ,
கோன் (கோ)

கடைசியிலுள்ள கோன் (கோ) என்பது கான், க்ஹான் என்பதனோடும், துருக்கோமங்கோலியச் சொல்லாகிய க்ஹாகன்[36] என்பதனோடும் நெருங்கிய தொடர்புடையதாயிருப்பது காண்க. ஒஸ்டியாக் மொழியும், உக்ரியன் மொழியும் க்ஹோன்[37] என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. பிற்காலத் தமிழ்க் கல்வெட்டுக்களிற் காணப்பெறும் வட சொல்லாகிய ராஜா என்பது பழைய தமிழ்க் கல்வெட்டுக்களிற் காணப்பெறவில்லை. அதற்குமாறாக, கோன், கோ என்ற சொற்களே காணப் பெறுகின்றன. இச்சொற்கள் இக்காலத்தமிழில் அருகியே வழங்கி வருகின்றன. செய்யுள் வழக்கிலும், சாதிப்பெயர்க் குறிப்பிலுமே இவை பெரும்பாலும் இக்காலை வழங்கப் பெற்று வருகின்றன.

இற்றைநாள் கிடைத்துள்ள தமிழிலக்கியத்தின் துணை கொண்டு திராவிட மொழிகளின் தொன்மையைக் கி. பி. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டு வரையிற் கொண்டு செல்லலாம் ; கிரேக்க வரலாறுகளிற் கிடைக்கும் திராவிடச் சொற்களின் துணை கொண்டு அதனைக் கிறித்தவக் காலத் தொடக்கத்திற்குக் கொண்டு செல்லலாம். அதற்கு முன்னர் இம்மொழிகளின் வரலாற்று நிலையை அறிவதற்குத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆராய்ச்சியே துணை புரிவதாகும். தமிழரது நாகரிகமும், தமிழிலக்கியந் திருக்கமுற்ற காலமும் கி. மு. ஆறு அல்லது எழாம் நாற்றாண்டாகலாம். ஆனால், திராவிட மூலமொழி இக்காலக் கிளைகளாகப் பிரிந்ததோ, திராவிடர் இந்தியாவிற்குள் வந்து இக்காலை வசிக்கும் பகுதிகளில் குடியேறிய பின்னரேயாகும். இஃது இன்ன காலந்தான் என்று அறுதியிட்டுக் கூற முடியாது ; எனினும் மிகமிகப் பழைய காலத்திலேயே அவ்வாறு பிரிந்திருக்க வேண்டுமென்று கொள்ளலாம். கெல்கியத்திலிருந்து ஐரிஷூம், வெல்ஷூம், தெயுத்தோனியத்திலிருந்து பண்டை உயர் மொழியும் பண்டைக் கீழ்மொழியும், உக்ரியத்திலிருந்து பின்னிஷூம் , மாகியரும் ஆகிய இவையெல்லாம் அவ்வம் மொழிக்குரிய மக்கள், அவரவர்கள் இக்காலை காணப் பெறும் இடங்களில், குடியேறுவதற்கு முன்னர்ப் பிரிந்து விட்டிருக்கலாம்; திராவிட மொழிமூலமோ அவர்கள் வந்து குடியேறிய பின்னரே தான் பிரிவுற்றதாதல் வேண்டும். அங்ஙனம் திராவிடர்கள் வந்தமை ஆரியர் வருகைக்கு முன்னராக வேண்டும். எனினும், அம்மொழிகளிற் காணப்பெறும் இலக்கண அமைதிகள், சொல்லொப்புமைகள் ஆகியவெல்லாம் ஆரியர் வருகைக்குப் பின்னர், ஆரியர் தம் இலக்கண அமைப்புடன் ஒருங்கே அமைந்தனவாகக் கொள்ளுதல் வேண்டும். திராவிட மொழிகளுடன் ஒப்பிடக்கூடியவகையில் பிராகுவி மொழியிற் காணப்பெறும் சொல்லமைப்புக்கள், வேர்ச்சொற்கள் எல்லாம் காலத்தால் இன்னும் பல நூற்றாண்டுகள் முற்பட்டன என்று கொள்ளலாம். ஆகையால் இந்தப் பிராகுவிமொழியின் துணைகொண்டு திராவிடமொழிகளின் தொன்மை ஆரியர் வருகைக்கு (அஃதாவது கி. மு. 1600க்குப்) பல நாற்றாண்டுகட்கு முன்னென்று ஒருவாறு தெளியலாம்.

  1. Modoura Basileion Pandionis
  2. Kerobotstros
  3. 1
  4. 2
  5. 3
  6. 1
  7. 2
  8. 1
  9. 2
  10. 3
  11. 4
  12. 5
  13. 1
  14. 2
  15. 3
  16. Bettigo.
  17. Kolchiyi.
  18. Cael
  19. Kalligikon
  20. Point Calymer
  21. 1
  22. 2
  23. 1
  24. 2
  25. 3
  26. 4
  27. 5
  28. 6
  29. 1
  30. 2
  31. 3
  32. 4
  33. The Altai
  34. Gori
  35. Khan
  36. Khagan
  37. Khon