கால்டுவெல் ஒப்பிலக்கணம்
கால்டுவெல்
ஒப்பிலக்கணம்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
(Upload an image to replace this placeholder.)
கழக வெளியீடு—௩௧௦
கால்டுவெல் ஒப்பிலக்கணம்
கிரீயர்ஸன்
மொழியாராய்ச்சிக் குறிப்புக்களுடன்
🌑
மொழிபெயர்த்தியற்றியவர்கள் :
திரு. காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை, பி. ஏ.
திரு. K. அப்பாத்துரைப் பிள்ளை, எம்.ஏ.,எல்.டி.
🌑
:: திருநெல்வேலி, தென்னிந்திய::
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்
திருநெல்வேலி & சென்னை
விசு—புரட்டாசி
[All Rights Reserved]
Published by
THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
:: PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD., ::
TIRUNELVELI & MADRAS.
September 1941
அட்டைக் கட்டடம் விலை ரூ. 1-8
கலிக்காக் கட்டடம் விலை ரூ. 2-4
The Jupiter Press, Madras.1000/9-41
பதிப்புரை
எண்ணிற் சிறந்ததுந் தமிழ்; எழுத்திற் சிறந்ததுந் தமிழ் ;
பண்ணிற் சிறந்ததுந் தமிழ் ; பாரிற் பரந்ததுந் தமிழ்;
மண்ணிற் பழையதுந் தமிழ்; மாசற் றொளிர்வதுந் தமிழ் ;
கண்ணிற் சிறந்ததுந் தமிழ் ; கன்னிமை சான்றதுந் தமிழ்!
“தேனினு மினியது தமிழ், தெவிட்டாச் சுவையது தமிழ்; இலக்கணஞ் சிறந்தது தமிழ், இயல்வளஞ் செறிந்தது தமிழ்; ஒப்புயர்வற்றது தமிழ், ஒண்கலை நிறைந்தது தமிழ்; தன்னேரிலாதது தமிழ், தனிப்புகழ் வாய்ந்தது தமிழ்” என்றெல்லாம் பாட்டாலும், உரையாலும் பலபடப் புகழ்ந்து மகிழும் பான்மையது உயர்தனிச் செம்மொழியாகிய நந் தமிழ் மொழி. எனினும், இச் சீரிய மொழியின் உயர்வுசிறப்புக்களைத் தமிழ்மக்கள் மட்டும் எடுத்துக்கூறிக் கொள்வது அத்துணைச் சிறப்பெய்துவிப்ப தாகாது. என்னை? உலகில் வழங்கும் மொழிகள் பலப்பல; அவ்வம் மொழிக்குரியார் தத்தம் மொழியே தலைசிறந்தது என்று கூறிக்கோடல் இயல்பேயாகலின். உலக மொழிகள் பலவற்றுள்ளும் சிறந்த மொழிகள் சிலவற்றைத் தேர்ந்து கொண்டு, அவற்றுடன் தமிழ்மொழியை ஒப்பிட்டுச் சீர்தூக்கி, எவ்வகையிலும் சிறந்தது தமிழ்மொழியே என்று முடிவு கூறின், யாவராலும் அஃது எளிதில் ஏற்றுக்கொள்ளப்பெறும். அதிலும் தமிழ்மொழிக் குரியரல்லரான வேறொரு செம்மொழியாளர் காய்தலுவத்தலின்றித் தேர்ந்து, ஆராய்ந்து, தெளிந்து அத்தகைய முடிபு கூறின் அதை விரைந்தேற்றுப் போற்றுதல் அனைவர்க்குங் கடனன்றோ?
அத்தகைய அரும்பெற லாராய்ச்சியைச் செய்து முடித்துத் தமிழ்மொழிக்கு ஏற்றம் அளித்த பெரியார் ரைட்ரெவரெண்டு ராபர்ட் கால்டுவெல், டி.டி., எல்.எல்.டி., ஆவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவி லிருந்து தமிழ்நாடு போந்து கிறித்து சமயக் தொண்டுடன் தமிழ்த் தொண்டும் புரிந்த ஐரோப்பியர்கள் பலருள்ளும் கால்டுவெல் ஐயர் தலைசிறந்தவராவர். அவர் இயற்றியளித்த “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற ஒப்பரிய ஆராய்ச்சி நூல் தமிழ்மொழிக்கு உலக மொழிகளிடையே வியக்கத் தக்கதோருயர் நிலையை யளித்தது; தமிழ்மொழி வளர்ச்சிக்குப் புத்துயிரளித்தது; தமிழ் மக்களின் பண்டைப் பெருமைக்கும், நாகரிகச் சிறப்பிற்கும், கலை வளத்திற்கும் என்றும் அழியாச் சான்று பகர்ந்தது; பகராநின்றுவருகின்றது.
சீர் சான்ற இந்நூல் ஆங்கிலத்தா னியன்றுள்ள காரணத்தால் அதனைத் தமிழ்மக்கள் பலரும் கற்றறிந்து நற்பயனெய்துதற்கில்லை. அதனைச் சிறந்த வகையில் மொழி பெயர்த்துப் பொதுவாக தமிழ்நாட்டிற்கும் சிறப்பாகத் தமிழ் மாணவர்க்கும் பயன்படுமாறு வெளியிடவேண்டுமென்று நெடுநாளாகக் கருதியிருந்தோம். அக் கருத்து இறைவனருளால் இப்பொழுது நிறைவேறத் தொடங்கினமைக்கு அவன்றிருவடிகளை இடையறாது வழுத்துகிறாம். “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” சிறந்ததொரு மொழியாாாய்ச்சிக் கருவூலம் என்றால், அதற்கு ஐயர் எழுதியுள்ள 118 பக்கங்கள் கொண்ட ஆங்கில முன்னுரை அக்கருவூலத்துக்கோர் அணிமுகப்பென்று கூறத்தகும். அம் முன்னுரையைச் சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநரான தருமபுரம் ஆதீன வித்துவான் காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளையவர்கள் பி.ஏ., தமிழில் மொழிபெயர்க்க முன்வந்து, சில பகுதிகளை எம் செந்தமிழ்ச் செல்வியின் வாயிலாக மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்; பின்னர் அதன் எஞ்சிய பகுதிகளையும் மொழிபெயர்க்கும் அவர்தம் முயற்சிக்கு உடனிருந்து பேருதவி புரிந்தவர் பன்மொழிவல்லுநராய திரு. கே. அப்பாத்துரைப் பிள்ளையவர்கள், எம்.ஏ., எல்.டி., யாவர். இவர்களிருவருக்கும் எங்கள் நன்றி உரியதாகுக.
ஜி. ஏ. கிரீயர்ஸன் என்பார் எழுதியுள்ள “மொழியாராய்ச்சி” என்னும் ஆங்கிலக் கட்டுரையிலிருந்து சில குறிப்புக்கள் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழாராய்ச்சியாளர்க்கும், தமிழ்ப்புலமைத் தேர்விற்குச் செல்லும் மாணவர்க்கும் பயனாகும்படி, இந்நூலின் பிற்சேர்க்கையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவை திரு. காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை அவர்கள் மொழிபெயர்த்துச் செந்தமிழ்ச் செல்வியின் வாயிலாக வெளியிட்டவையேயாம்.
இவ் வெளியீட்டினைத் தொடர்ந்து “ஒப்பிலக்கண ஆராய்ச்சி”யையும் மொழிபெயர்த்து வெளியிடக் கருதியுள்ளோம்; அக்கருத்தும் நிறைவேற எல்லாம்வல்ல முழுமுதற்கடவுள் அருள்புரிவானாக!
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்
பொருளடக்கம்
கால்டுவெல் ஒப்பிலக்கணம்
பக்கம்
௧. | 1 |
௨. | 5 |
௩. | 10 |
| 25 |
| 37 |
| 41 |
| 43 |
| 45 |
| 46 |
| 46 |
௪. | 56 |
| 58 |
| 63 |
௫. | 74 |
௬. | 80 |
| 87 |
| 88 |
பக்கம்
௭. | 94 |
௮. | 121 |
கூ. | 140 |
௧௦. | 158 |
௧௧. | 163 |
௧௨. | 168 |
௧௩. | 170 |
பிற்சேர்க்கை
| 176 |
கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்
௧. | 177 |
௨. | 181 |
௩. | 184 |
௪. | 188 |
௫. | 193 |
௬. | 198 |
௭. | 203 |
(Upload an image to replace this placeholder.)