கால்டுவெல் ஒப்பிலக்கணம்/022-033

கo. பண்டைத் திராவிடர்களுக்கும்,ஆரியர்களுக்கும் வடஇந்தியப் பழங்குடிகளுக்கு மிடையே இருந்த அரசியல் வாழ்வியல் தொடர்புகள்

 திராவிடர்கள் இந்தியாவிற்குள் வந்தது ஆரியர் வருகைக்கு முன்னரே யாதல்வேண்டும். ஆனல், ஆரியர் வருகைக் காலத்தில், வடஇந்தியாவில் வாழ்ந்துவந்து வடஇந்திய மொழிகளில் ஆரியமல்லாத பகுதியைப் புகுத்த உதவிய பழங்குடிகளும் கிராவிடர்களும் ஒரே யினத்தவரா, அன்றித் திராவிடர்கள் அப் பழங்குடியினரினும் வேறுபட்ட மூத்த பழங்குடியினரா என்பதை அறுதியிட்டுக் கூறுதல் எளிதன்று. ஆரியர்கள் வருகையை முதற்கண் எதிர்த்துப் பின் அவர்களுக்குத் தோற்றுக் கீழ்ப்படிந்து அவர்களுடைய அடிமைகளும் பணியாட்களுமாக மாறிய தஸ்யூக்கள் (தாஸர்கள்) என்போரின் இனத்தைச் சேர்ந்தவர்களா கிராவிடர்கள்? அன்றி, முதற்கண் வந்த ஆரியர்களுக்கும் அறிமுகமில்லாதவர்களாய் அவர்கள் வருகைக்குமுன் வடஇந்தியப் பகுதியை நீத்தோ அன்றி அதனின்றுந் துரத்தப்பட்டோ தென்னிக்கியாவிற் குடியேறிய ஒரு பண்டைப் பழங்குடி மக்களா? கிராவிடர்களுக்கும், ஆரியமயமாக்கப்பட்ட வட இந்தியப் பழங்குடிகளுக்கு மிடையேயுள்ள இத்தொடர்பு மிகவும் சிக்கலானது. வடமொழிக்கும், பாகதமொழிகளுக்கும், வடஇந்திய மொழிகளுக்கும் இடையே காணப்படும் தொடர்புகளைத் துருவித்துருவி ஆராய்வதனால் இச் சிக்கலான கேள்விக்கு ஒருவாறு விடைகாணலாம். எனினும், கிராவிடர்களை இந்தியாவின் பண்டைப் பழங்குடியினர் என்றோ, வடமேற்குக் கணவாய்களின் வழியாக இங்கியாவிற்குள் முதன்முதல் வந்தேறியோர் அவர்களே என்றோ கொள்வது கவறாகாது. கிராவிடர்களும் (தஸ்யூக்களாகிய) பழைய சூத்திர்ர்களும் ஓரினத்தவரே என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், திராவிடமொழிகள், தஸ்யூக்களின் மொழிகளினும் தொன்மை வாய்ந்தன என்பது கவனிக்கத்தக்கது. இதன்படி நோக்கினல், வடஇந்தியாவில் இப்பொழுது காணப்பெறும் சிக்கியச் சார்புடையவர்களும் ஆனால் ஆரியச் சார்பற்றவர்களுமான சூத்திார்களும், கலப்பினத்தவர்களும் திராவிடர்களுக்குப் பின் இந்தியாவிற்குட் புகுந்தவாாதல் வேண்டும்; இவர்கள் வருகையைக் கண்ட பண்டைத் திராவிடர்கள் வடஇந்தியப் பகுதிகளிற் பெரும் பகுதியை நீத்துத் தெற்கே போந்தவராதல் வேண்டும். இகையன்றி அவர்கள் ஆரியர்களால் துரத்தப்பட்டுக் தெற்கே குடியேறினர் என்று சொல்வதற்கு எட்டுணையும் ஆதாரமில்லை. என்ன ? சேர சோழ பாண்டியர் எக்காலத்திலாவது ஆரியர்களுக்கு அடிமைப்பட்டனர் என்றோ, வட இந்தியாவிலிருந்து ஆரியர்களால் துரத்தப்பட்டுத் தெற்கே போந்த பழங்குடியினரே பின்னர் சேரசோழபாண்டியகலிங்க ஆந்திர்ர்களாக மாறினர்கள் என்றே எந்த வடமொழிச் சான்றோ, தென்மொழிவரலாறோ குறிக்கக் காணவில்லை. திராவிடக் கண்ணாடிகொண்டு பார்த்தால் கிராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கு மிடையே என்றும் அமைதியும் நட்பும் பொருந்திய தொடர்பே இருந்து வந்ததென்றும், வரலாற்றுக் காலத்திற்குமுன் கிராவிடர்கள் வட இந்தியாவிலிருந்து துரத்தப்பட்டு கோண்டுவனம், தண்டகாாண்யம் முதலிய திராவிடக் காட்டுப்பகுதிகளிற் குடியேறினர்களென்றால், அவ்வாறு அவர்களைத் துரத்தியவர்கள் ஆரியர்களல்லர், அவர்களுக்கு முன்வந்த வேறு பழங்குடியினரே என்றும் தெரியவரும்.

ஆரியர்களுக்கு முன்வந்த சித்தியர்களே திராவிடர்களைத் தெற்கே துரத்தியவர்களாதல் வேண்டும். இவர்களை வட இந்தியாவிலுள்ள கோலர்கள், சந்தாளர்கள்,[1] வில்லர்கள் [2], தோமர்கள் [3]" ஆகியவர்களோடு ஒன்றுபடுத்திவிடக் கூடாது. ஒருகால் ஆரியர் வருகைக்கு முன் மேற்குறிப்பிட்ட வகுப்பினர்கள் திராவிடர்களைக் கண்டு காடுகளிற் சென்று குடியேறியிருக்கக்கூடும்.

ஒருவேளை இப்பழங்குடிகள் வடமேற்குவழி வராமல், பூதான் குடிகள் [4] மாதிரி வடகிழக்கிலிருக்து வந்து வங்கத்தின் சதுப்பு நிலக்காடுகளைத் தாண்டி இங்கே குடியேறியிருக்கக் கூடும். எங்ஙனமாயினும் இக்காட்டுக் குடிகளது படையெடுப்பினால் கிராவிடர் தெற்கு நோக்கிச் சென்றிருப்பர் என்பது பொருந்தாது. மற்றும் வட இங்கியத் தாய் மொழிகளிலுள்ள ஆரியச் சார்பற்ற பகுதிக்கும் கோலேரிய மொழிகளுக்கும் ஒப்புமை பெரிதுங் காணப்படவில்லை. வட இந்திய ஆரியர் சூத்திரராக்கித் தம்முடன் சேர்த்துக் கொண்ட மக்கள் வகுப்பினர் பெருவாரியினராகவும், போர்த்திறனும், நாகரிகமும் உடையவராகவும் இருந்திருத்தல் வேண்டும். ஸெர்ஸீஸ் [5] என்ற பாரசீகப் பேரரசன் படையில் இந் தியாவிலிருந்து கோரைமயிரினரான எத்தியோப்பிய வீரர் (அஃதாவது கருநிறமக்கள்) வந்திருந்தனர் என ஹெரடோட்டஸ் என்ற கிரேக்க வரலாற்றறிஞர் கூறுகிறார். இவ் எதியோப்பியர் மேற்கூறிய சித்திய இனத்து மக்களாக இருக்கக் கூடும்.

இவ்விளக்கத்திலும் ஒரு தடங்கல் இல்லாமவில்லை. இன்றைய திராவிட மக்கள் வட இங்கிய ஆரியர் வயப்பட்ட சூத்திரரைவிடத் தன்னாண்மையும், நாட்டுப்பற்றும், அறிவாற்றலும் மிக்கவர்கள். ஆகவே, இவர்கள் தம்மினும்


1. Santhals. 2. Bhilse 3. Doms. 4. Bhutan tribes. 5. Xerxes. குறைந்தவரான மக்களால் தம்முதலிடத்தினின்று துரத்தப் பட்டிருக்கக் கூடுமோ என்று ஐயமேற்படக்கூடும். ஆனால் திராவிடருடன் போரிடும்போது இந்தச் சித்திய மக்கள் இன்றைய நிலையிலில்லை. அவர்கள் திராவிடரையொத்த நாகரிகமுடையவரல்லராயினும் அவர்களைவிட வெறிமிக்க முரட்டு மனிதராகவே இருந்தனர். காலப்போக்காலும், ஆரியரால் அடிமைப்படுத்தப்பட்டும் அவர்கள் இன்று தற்பண்பு இழந்து விட்டனர். எனவே, முதலில் திராவிடர்கள் சித்திய முரட்டு மக்களுக்குத் தோற்றார் என்பதிலும், அந்தச் சித்திய மக்கள் தம் முரட்டுத்தனம் இழந்தபின் ஆரியருக்குத் தோற்றார் என்பதிலும், அங்ஙனம் தோற்று அடிமைப்பட்ட ஸுத்திரரைவிடத் தன்ணாண்மையுடன் தெற்கில் ஆட்சி செலுத்திய திராவிடர் நாகரிகமிக்கவர்களாக விளங்கினர் என்பதிலும், பின்னர் ஆரியர்கள் போர்செய்து வெற்றியுறாமல் வங்கேறிகளாகக் தெற்கே போந்தபோது, அவர்களுடன் கலந்துறவாடி மேன்மையுற்று ஆரிய அரசுகளை யொத்த கிராவிட அாசுகளைத் தெற்கே' நிலைநாட்டினர் என்பதிலும் நம்பக்கூடாத செய்தி ஒன்றுமில்லை.

கர்ஸன் என்பவர் " தமிழர் ஆரியாவர்த்தம் அல்லது வட இந்தியாவில் என்றும் இருந்திலர்; மலாய் மக்களினத்தைச் சேர்ந்தவராய், கடல்வழியாக வங்காளவிரிகுடாவைக் கடந்து நோாகவோ இலங்கை மூலமாகவோ வந்தனர் " என்றார்[6] .இது முற்றிலும் பொருத்தமற்றது. ஏனெனில், தமிழ் எவ்வளவு திராவிடத்தைச் சேர்ந்ததோ அவ்வளவு கோண்டு, கு முதலியவையும் திராவிடமேயாம் ; ஒராவோனும் இராஜமகாலும், இன்னும் தெளிவாகக் திராவிடமேயாம். பிராகுவி வடமேற்கில் திராவிட மொழியுடன் இணைப்புடையதாயிருக்கிறது. பெஹிஸ்தன் பட்டயங்களையோ, சித்திய உறவுகளையோபற்றிச் சொல்லவேண்டியதில்லை. மேலும், டாலிமியின் காலத்தில் - இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்ந்துவரும் நிலையிலிருந்த காலத்தில் - திராவிடர் தென்கீழ்க்கரை மட்டுமின்றிக் கங்கையாறுவரை ஆட்சி செலுத்தியிருந்தனர் என்பதும் குறித்தற்பாற்றாம்.

இலங்கையிலிருந்து அவ்வப்போது தென் இங்கியாவிற்கு மக்கள் வந்து குடியேறியுள்ளனர் என்பது மறுக்கக் கூடாததே. இன்று கிருவாங்கூரிலுள்ள தீயர், ஈழவர் முதலியவர் இவ்வகையினர் ஆவர். தீயர் என்பது உண்மையில் தீவர் என்பதன் மரூஉவே. ஈழவர் என்பதன் பொருள் ஈழம் அல்லது இலங்கையிலிருந்து வங்தோர் என்பது. ஈழம் என்பது இலங்கையின் தமிழ்ப் பெயர். இது ஸிம்ஹலம் என்ற வட சொல்லிலிருந்தோ, ஸீஹலம் என்ற பாலிச் சொல்லிலிருந்தோ வங்கிருக்கவேண்டும். உண்மையில் இக் குடியேற்றங்கூட இலங்கைக்குள் தமிழர் குடியேறியதன் எதிரொலியேயாகும். சோழியர், பாண்டியர் முதலிய தமிழர் அடிக்கடி நாட்டின்மீது படையெடுத்ததையும், ஒரு தடவை அரசாட்சியையே கைப்பற்றியதையும் மஹாவமிசம் என்ற சிங்கள வாலாற்று நூல் கூறுகிறது. இத்தகைய படையெடுப்பின் பயனாக, இன்று, தமிழர் வட மாகாணம் முழுமையும் வாழ்ந்துவருகின்றனர். ஆனால், சிங்களர் வேறு, தமிழர் வேறு என்பதில் ஐயமில்லை. சிங்களரே தாம் மகதநாட்டினின்று குடியேறியதாக ஒப்புக்கொள்கின்றனர். எனவே, தமிழர் யாவருமே இலங்கையிலிருந்து வந்திருக்கக் கூடும் என்பதை எவரும் ஒப்புக்கொள்வதற்கில்லை.

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 1. Journal of the Royal Asiatic Society Vol. XVI.