குடும்பப் பழமொழிகள்/ஆரோக்கியம்

ஆரோக்கியம்

நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமானம்.

-ஜப்பான்

ஆரோக்கியமுள்ளவனுக்குத் தினசரி திருமணம்தான்.

- துருக்கி

முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி-இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை.

- ஜெர்மனி

மக்கள் ஆரோக்கியமாயிருந்தால், வைத்தியர்களுக்கு நோய் வரும். -( , , )

இரவில் ஓர் ஆப்பிளை உண்டு வந்தால், பல் வைத்தியருக்கு நம்மிடம் வேலையில்லை. - இங்கிலாந்து

சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார்.

-இதாலி

செல்வமில்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் அதுவே பாதி நோயாகும். -( , ,)

உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்துதான்.
- துருக்கி

ஒரு வேளை உணவை இழத்தல் நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது. -ஸ்பெயின்

இரவுச்சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம். -லத்தீன்

நன்றாயிருக்கும் உடலிலேயே நல்ல மனம் தங்கியிருக்கும்.
- ஜெர்மனி

உடல் நலமாயிருக்கும் பொழுதே நோயைப்பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள். -( , ,)

ஐந்துக்கு எழுந்திரு, ஒன்பதுக்கு உணவருந்து, ஐந்துக்குச் சாப்பிடு, ஒன்பதுக்கு உறங்கு. -ஃபின்லந்து

ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்றால், எல்லாமும் குறைவு என்று பொருள். -ஃபின்லந்து

உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள். - இங்கிலாந்து

தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்தெழுவான். -( , ,)

நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம்
-( , ,)

முன்னிரவில் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும். -( , ,)

வைத்தியர்களைவிட உணவுமுறை அதிகக் குணமுண்டாக்கும். -( , ,)

நீண்ட நாள் வாழ்வதற்குக் கதகதப்பான உடையணியவும் மிதமாக உண்ணவும், நிறைய நீர் பருகவும். -( , ,)

மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திரு, இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட. -( , ,)

குளிர்ச்சியான தலையும், சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை. -( , ,)

ஆரோக்கியமுள்ள உடல் ஆன்மாவுக்கு விருந்து மண்டபம்; நோயுள்ள உடல் அதன் சிறைக்கூடம். -பேக்கன்