குடும்பப் பழமொழிகள்/உடற் குறைகள்
உடற்குறைகள்
முடவன் ஒவ்வோர் அடியிலும் தடுக்கி விழுவான். - இந்தியா
குருடனை விருந்துக்கு அழைத்தால், இரண்டு விருந்தினர்கள் வருவார்கள். -( , , )
ஒடிந்த கையைச் சட்டைக்குள் மறைத்துக்கொள். -சீனா
குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும். -( , , )
குருடன் பார்க்க முடியவில்லை என்பதால், வானத்தின் நீல நிறம் குறைந்து விடுவதில்லை. -டென்மார்க்
குருடனும் சில சமயங்களில் தானியத்தைக் கண்டுபிடிக்கிறான். -ஃபிரான்ஸ்
குருடன் கொடி பிடித்துச் சென்றால், அவன் பின்னால் செல்பவர்களுக்கு ஆபத்துத்தான். -( , , )
சூரியனையே பார்க்க முடியாதவன் குருடன்தான். - இதாலி
மனம் வேறிடத்தில் இருந்தால், (எல்லோருக்குமே) கண்கள் குருடுதான். -லத்தீன்
குருடர்களின் நடுவில் நீங்களும் கண்களை மூடிக்கொள்ளுங்கள். - துருக்கி
தீமையைப் பார்ப்பதைவிட, குருடாயிருப்பது மேல்.
-இங்கிலாந்து
கல்லும் வயிரமும் குருடனுக்கு ஒன்றுதான். -( , , )
கூனனுக்குத் தன் கூனல் தெரியாது, பக்கத்திலிருப்பவன் கூனலையே பார்ப்பான். - இங்கிலாந்து
திகைத்து நிற்பவனை விட நொண்டி விரைவாக வந்து விடுவான். -( , , )
கூனன் தன் கூனலையும் சுமக்க வேண்டியிருக்கிறது. -யூதர்
நொண்டி வரும்வரை நாமும் காத்திருக்க வேண்டும். - ஃபிரான்ஸ்