குடும்பப் பழமொழிகள்/இளமை

இளமை

உலகம் இளையோருக்காக உள்ளது. -ஸ்லாவேகியா

அறிவாளி எவனும் இளமையை விரும்ப மாட்டான்.

- இங்கிலாந்து

கழுதையும் இளமையிலே அழகுதான். - இந்தியா

பத்து வயதில் விசித்திரக் குழந்தை, பதினைந்தில் கெட்டிக்கார இளைஞன், இருபதில் சாதாரண மனிதன்.

-ஜப்பான்

இளைஞன் வேலைக்கு வருகிறான், கிழவன் உணவுக்கு. வருகிறான். - துருக்கிஸ்தானம்

புதிதாய்ப் பிறந்த கன்றுகள் புலிகளுக்கு அஞ்சமாட்டா. -

சீனா

இளங் கன்று பயமறியாது. - தமிழ் நாடு

வாலிபம் என்பது பைத்தியம். -கீழ் நாடுகள்

கூர்மையான முள் இளமையிலிருந்தே அப்படி யிருப்பது.

-ஆப்கானிஸ்தானம்

இளைஞர்களைக் கேட்டுப் பாருங்கள்: அவர்களுக்கு எல்லாம் தெரியும்! -ஃபிரான்ஸ்

இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்காரர்கள். -ஜெர்மனி

இளமையில் ரோஜா மலர்களின் மீது படுத்திருந்தால், முதுமையில் நீ முட்களின்மீது படுத்திருப்பாய்.

- இங்கிலாந்து

வாலிபத்திற்கு அடிக்கடி தோல் உரிந்து, புதுத் தோல் உண்டாகும். -அயர்லந்து

வாலிபத்தைப் பாராட்டிப் பேசினால், அது மேன்மையடையும். -( , , )

மென்மையான களியை எந்த உருவமாகவும் பிடிக்கலாம்.

-லத்தீன்

இளமையில் முகம் அழகு, முதுமையில் ஆன்மா அழகு.

-சுவீடன்

இளைஞர்கள் கூட்டமாய்ச் செல்வார்கள், நடுவயதினர் ஜோடியாகச் செல்வர், வயோதிகர் தனியாகச் செல்வர். -( , , )

ஒருவர் இளமையா யிருத்தல் ஒரு சமயம்தான். - -ஃபிரான்ஸ்

வாலிபம் இடைவிடாத ஒரு வெறி, அது அறிவின்காய்ச்சல்.

-( , , )

மது இல்லாமலே வெறி கொள்வது வாலிபம். -கதே

வாலிபப் பருவத்தை அநுபவிக்க வேண்டும். -கிரீஸ்

அடங்காமல் துள்ளும் குட்டிகளே பின்னால்சிறந்த குதிரைகளாக ஆகின்றன. -( , , )

தெய்வங்களுக்குப் பிரீதியானவர்கள் இளமையிலே இறக்கிறார்கள். -( , , )

வாலிபம் துக்கத்துடன் தொடர்பு கொள்வதில்லை. - அரிஸ்டாட்டல்

குஞ்சுகளே வாத்துக்களைப் புல்வெளிக்கு அழைத்துச் செல்கின்றன. - இதாலி

வாலிபம் பறந்து செல்கின்றது. -லத்தீன்

காலை நேரம் இருக்கும் பொழுதே, மலர்களைப் பறியுங்கள்.

-( , , )

பெருமையுள்ள செயல்கள் அனைத்தும் அநேகமாக இளைஞர்களாலேயே செய்யப் பெற்றிருக்கின்றன. -டிஸ்ரேலி

இறைவன் (படைத்த) ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளையாடும். - இங்கிலாந்து

வாலிபத்தில் கவனமின்றித் துள்ளினால், வயது காலத்தில் வருந்தவேண்டும். -( , , )

இளமையைத்தான் அடக்கிக கொண்டு வரவேண்டும், முதுமை தானே தன்னை அடக்கிக் கொள்ளும். -( , , )

இளமையான தோள்களில் முதுமையான தலைகளை வைக்க முடியாது. -( , , )

வாலிபத்திலும் வெள்ளைத் தாளிலும் எதை எழுதினாலும் பதிந்து விடும். -( , , )

வாலிபம் நம்பிக்கைக் குரிய பருவம். -( , , )

வயோதிகர் குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், வாலிபர்கள் நடனமாடுவார்கள். -( , , )